Health Benefits Of Garlic With Honey: அடிவயிறு தொப்பை கொழுப்பை குறைப்பதற்கு நீங்கள் தொடர்ந்து முயற்சித்து வருகிறீர்களா... அப்படி என்றால் இது உங்களுக்கான செய்திதான். இந்த குளிர்காலத்தில் உடல் எடையை குறைப்பதற்கு நம்மால் சில வழிமுறைகளை பின்பற்றுவது கடினமாக இருக்கும்.
காரணம் இந்த குளிர் காலத்தில் உங்களுக்கு அதிகமாக பசி எடுக்கும். இதனால் அதிக கலோரிகளை உட்கொள்ள வேண்டிய நிலை வரலாம். இதனால் உடல் எடை அதிகரிக்கலாம், உடல்நிலை பிரச்சினைகளும் ஏற்படலாம். அந்த வகையில், தேன் மற்றும் பூண்டு ஆகியவை இயற்கையாகவே உங்களது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும். மேலும், இவை சோர்வுக்கும், உடல் நல குறைவுக்கும் நிவாரணியாக இருக்கும். மேலும் உங்களுக்கு நாள் முழுவதும் நீடித்த ஆற்றலை வழங்கி உடல் எடை ஆரோக்கியமாக இருக்கவும் உதவும்.
தேன் + பூண்டு சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள்
பூண்டு மற்றும் தேன் ஆகியவை தனித்தனியே எவ்வளவு ஆரோக்கியமான ஒன்று. அதைப்போல இரண்டையும் கலந்து எடுத்துக் கொண்டாலும் ஒட்டுமொத்த உடல் நலனுக்கும் நல்லது தான். அதிலும் குறிப்பாக உடல் எடையை வேகமாக குறைப்பதற்கும் இது உதவும். தேன் மற்றும் பூண்டை சேர்த்து உண்டால் அதில் அதிக ஆன்டி ஆக்ஸிடென்ட்கள் கிடைக்கின்றன.
மேலும் படிக்க | குளிர்காலத்தில் கற்றாழை ஜெல்லை இப்படி எல்லாம் கூட பயன்படுத்தலாமா? மருத்துவ மகத்துவம்
குறிப்பாக, பூண்டை பச்சையாக சாப்பிட்டால் வளர்ச்சிதை மாற்றம் வேகம் எடுக்கும். கொழுப்பு கரைவதும் வேகமாக நிகழும். மறுபுறம், தேனில் இயற்கையாகவே வைட்டமின்களும், கனிமங்களும் நிறைந்திருக்கின்றன. இதில் இயற்கையாகவே இனிப்பு சுவை இருக்கிறது. இதனால், உப்புசம் போன்ற செரிமான பிரச்சனைகள் ஏற்படாமல் இருக்கும். தேவையற்ற உடல் எடையையும் குறைக்கலாம். அந்த வகையில், தேன் மற்றும் பூண்டு இரண்டையும் சேர்த்து சாப்பிட்டால் இந்த குளிர்காலத்தில் உங்களுக்கு கிடைக்கும் நன்மைகளை இங்கே விரிவாக காணலாம்.
பசியை கட்டுப்படுத்தலாம்
பூண்டு, தேன் இரண்டும் பசியை கட்டுப்படுத்துபவை ஆகும். இதை எடுத்துக்கொண்டால் நீங்கள் அதிகமான உணவை எடுத்துக்கொள்ள மாட்டீர்கள். ரத்த சர்க்கரை அளவை சீராக வைத்திருக்க உதவும். மேலும் இனிப்பான பொருள்களை சாப்பிட வேண்டும் என்ற எண்ணமும் மட்டுப்படும். இதனால் உடல் எடையும் சீராக இருக்கும்.
நச்சுக்கள் வெளியேறும்
பச்சை பூண்டு மற்றும் தேன் ஆகியவை உடலில் இருந்து நச்சுக்களை வெளியேற்ற உதவும். தேவையற்ற நீர் உடலில் தேங்காது. வளர்ச்சிதை மாற்றமும் ஆரோக்கியமாக இருக்கும். இதனால், உடல் எடை குறைவது மட்டுமின்றி ஒட்டுமொத்த உடல் எடையும் சீராகும்.
செரிமானம் சீராகும்
பூண்டு குடலில் இருக்கும் நுண்ணுயிர் ஆரோக்கியத்தை பாதுகாக்கும். இதனால் செரிமானத்தில் எவ்வித பிரச்னையும் இருக்காது. அதேபோல, தேனும் உங்களுக்கு இதமளிக்கும். செரிமானத்தில் இருக்கும் பிரச்னைகளுக்கு இது நிவாரணத்தை அளிக்கும்.
நோய் எதிர்ப்பு சக்தியை வலுவாக்கும்
பூண்டு மற்றும் தேனை சேர்த்து நீங்கள் தினமும் சாப்பிட்டால் உங்களது நோய் எதிர்ப்பு சக்தி வலுவானதாக இருக்கும். குளிர்காலத்தில் ஆரோக்கியமாகவும் இருக்கலாம். சோர்வும், உடல்நலக் குறைவும் பறந்துபோகும். இதனால் உடல் எடையும் குறையும்.
வளர்ச்சிதை மாற்றம் வேகமாகும்
வளர்ச்சிதை மாற்றத்தை மட்டுமின்றி பூண்டு மற்றும் தேன் வேகமாக கொழுப்பை கரைப்பதில் உதவும். இதனால் குளிர்காலத்திலும் நீங்கள் உடல் எடையை குறைக்கலாம்.
(பொறுப்பு துறப்பு: இங்கு கொடுக்கப்பட்டுள்ள அனைத்தும் பொதுவான தகவல்கள் மற்றும் வீட்டு வைத்தியம் சார்ந்தவை. இதனை பின்பற்றும் முன் மருத்துவ ஆலோசனை பெறுவது நல்லது. இதனை ஜீ நியூஸ் (Zee Tamil News) உறுதிப்படுத்தவில்லை)
மேலும் படிக்க | இந்த அறிகுறிகள் இருக்கிறதா? சிறுநீரக பிரச்சனையாக இருக்கலாம்! ஜாக்கிரதை!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ