Black Tea For Grey Hairs: தவறான உணவுப்பழக்கம் மற்றும் அதிகரித்து வரும் மாசுபாடு காரணமாக, இன்றைய கால கட்டத்தில் இளம் வயதிலேயே தலைமுடி நரைக்க தொடங்குகிறது. நரை முடி பிரச்சனையை சமாளிக்க பெரும்பாலும் ஹேர் டை அல்லது ஹேர் கலர் பயன்படுத்துகின்றனர். ஹேர் கலர் பயன்படுத்துபவர்கள் அதனை அவ்வப்போது தடவிக்கொண்டே இருக்க வேண்டும். அதே நேரத்தில், ஹேட் டை, ஹேர் கலர் போன்றவை மோசமான பக்க விளைவையும் ஏற்படுத்தும். அத்தகைய சூழ்நிலையில், இன்று நாம் எந்த விதமான பக்க விளைவுகளையும் ஏற்படுத்தாத வகையில் இயற்கையான முறையில் நரை முடிக்கான தீர்வை எப்படி பெறுவது என அறிந்து கொள்ளலாம்.
பிளாக் டீ மூலம் உங்கள் தலைமுடியை இயற்கையான முறையில் கருமையாக்குவதற்கான வழியை அறிந்து கொள்ளலாம்.
ALSO READ | Sprouts: பலவித நோய்களுக்கு அருமருந்தாகும் முளை கட்டிய தானியங்ககள்
நரை முடியை கருமையாக்க பிளாக் டீயை எப்படி பயன்படுத்துவது - பிளாக் டீயில் டானிக் அமிலம் நிறைந்துள்ளது, இது உங்கள் தலைமுடியை இயற்கையாகவே கருமையாக்கும். இதற்கு சுமார் 2 கப் தண்ணீர் எடுத்துக் கொள்ளுங்கள். அதில் 5 முதல் 6 தேக்கரண்டி தேயிலை இலைகளை போடவும். இப்போது இந்த தண்ணீரை நன்றாக கொதிக்க வைக்கவும். அதன் பிறகு, உங்கள் தலைமுடியை இந்த நீரில் சுமார் 30 நிமிடங்கள் ஊற வைக்கவும். அதன் பிறகு, உங்கள் தலைமுடியை வெதுவெதுப்பான நீரில் சுத்தம் செய்யுங்கள். இதை வாரத்திற்கு 3 முதல் 4 முறை செய்யவும்.
பிளாக் டீ மற்றும் காபி - முடியை கருமையாக்க பிளாக் டீயோடு பிளாக் காபியையும் பயன்படுத்தலாம். இதற்கு, காபி பவுடரை 3 கப் தண்ணீரில் கொதிக்க வைக்கவும். இதற்குப் பிறகு, அதில் மூன்று கருப்பு தேநீர் பைகளை போட்டு நன்கு கொதித்ததும் சிறிது நேரம் ஆறவிடவும். அதன் பிறகு, ஒரு பிரஷ்ஷின் உதவியுடன், இந்த கலவையை உங்கள் தலைமுடியில் தடவவும். உங்கள் தலைமுடியில் சுமார் 1 மணி நேரம் விடவும். அதன் பிறகு, உங்கள் தலைமுடியை சாதாரண நீரில் கழுவவும்.
ALSO READ | Health Alert: காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடவே கூடாத ‘5’ உணவுகள்..!!!
பிளாக் டீ மற்றும் துளசி - நரை முடி பிரச்சனையை நீக்க பிளாக் டீயோடு மற்றும் துளசியை பயன்படுத்தலாம். இதற்கு 1 கப் தண்ணீரில் 5 டீஸ்பூன் டீ போடவும். அதன் பிறகு, 5 முதல் 6 துளசி இலைகளை சேர்த்து நன்கு கொதிக்க வைக்கவும். தண்ணீர் நன்கு கொதித்ததும், அதில் சில துளிகள் எலுமிச்சை சாறு சேர்க்கவும். அதன் பிறகு, கலவையை உங்கள் தலைமுடியில் சிறிது நேரம் விடவும். பிறகு சாதாரண நீரில் முடியை அலசவும்.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR
Telegram Link: t.me/ZeeNewsTamil