Tamil Nadu Latest News Updates: மத்திய இணை அமைச்சர் எல். முருகன் (L Murugan) நேற்றிரவு டெல்லியில் இருந்து சென்னை வந்தடைந்தார். அப்போது அவர் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளரை சந்தித்தார்.
L Murugan Trilingual Policy: இந்தியை சேர்க்க வேண்டும் என கூறவில்லை
அப்போது பேசிய அவர்,"திமுகவைச் சார்ந்த மு.க. ஸ்டாலின் மற்றும் உதயநிதி மொழி அரசியலை புகுத்தி அரசியல் செய்து கொண்டிருக்கிறார்கள். மத்திய அரசு இந்தியை மொழியாக சேர்க்க வேண்டும் என்று எந்த இடத்திலும் கூறவில்லை. மூன்றாவதாக ஒரு மொழியை மாணவர்கள் படிக்க வேண்டும் என்பதுதான் புதிய தேசிய கல்விக் கொள்கையாக இருக்கிறது.
மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் மூன்று பக்க கடிதத்தில் மிக விளக்கமாக பதில் அனுப்பி உள்ளார். தமிழ் மிக தொன்மையான மொழி; பழமையான மொழி என உலக நாடுகளில் கூறி வருகிறார், பிரதமர் மோடி. திருவள்ளுவருக்கு உலகம் முழுவதும் சிலை அமைக்கப்படும் என பாஜக தேர்தல் அறிக்கையில் கூறியிருந்தோம். அதனை ஐந்து இடங்களில் நிறைவேற்றி உள்ளோம்.
L Murugan Trilingual Policy: நவீன தீண்டாமை
பிரதமர் மோடி, சிங்கப்பூரில் கலாச்சார மையம் அமைத்து, பல நூல்கள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. மத்திய அரசுக்கு ஒத்துழைப்பு கொடுக்காததால் சுமார் 5000 கோடி ரூபாய் தமிழக அரசுக்கு வர வேண்டியது நிலுவையில் உள்ளது. இதற்க்கு முழு காரணம் உதயநிதி மற்றும் முக ஸ்டாலின் ஆவர். இன்று அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களை வஞ்சிக்கும் செயல்களை முதலமைச்சர் செய்கிறார்.
உதயநிதி ஸ்டாலின் மகன்கள் எங்கு படிக்கிறார்கள்?, பேரன்கள் எங்கு படிக்கிறார்கள்?. தமிழகத்தில் உள்ள அனைத்து சிபிஎஸ்சி பள்ளிகளிலும் மூன்றாவது மொழியாக இந்தி கற்றுக் கொடுக்கப்படுகிறது. அதுபோன்று மெட்ரிகுலேஷன் பள்ளிகளிலும் மூன்றாவதாக ஒரு மொழியை கற்றுக் கொடுக்கிறார்கள். அப்படி இருக்கும் போது அரசு பள்ளிகளில் படிக்கும் ஏழை, எளிய மக்கள் பட்டியலின மக்கள், பிற்படுத்தப்பட்ட மக்களுக்குதான் இந்த மூன்றாவது மொழி கற்கும் வாய்ப்பு மறுக்கப்படுகிறது, இது நவீன தீண்டாமையாக இருக்கிறது.
L Murugan Trilingual Policy: சர்வதேச அளவில் மாணவர்களை தயார்படுத்த வேண்டும்
சிபிஎஸ்சி மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் மூன்றாவது மொழியைப் படிக்க மாணவர்களுக்கு சுதந்திரம் இருக்கிறது. ஆனால் பட்டியலின மக்களுக்கும், அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கும் உரிமை மறுக்கப்படுகிறது. யாரும் இந்த மொழியை படிக்க வேண்டும் என கட்டாயப்படுத்தவில்லை. தமிழ், ஆங்கிலம் அதன் பிறகு மூன்றாவதாக ஒரு மொழி. அது கன்னடம், தெலுங்கு, அசாமி, ஒரியா எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.
புதிய தேசிய கல்விக் கொள்கை சர்வதேச அளவில் இன்று இருக்கும் மாணவர்களை தயார்படுத்த போட்டியாளர்களாக உருவாக்க வேண்டியது உள்ளது. பி.எம். ஸ்ரீ திட்டத்தின் கீழ் தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் அட்டல் லேப் என்ற பெயரில் தயார் செய்யப்பட இந்த பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது. அதன் தமிழ்நாடு அரசு மாணவர்களை வஞ்சிப்பதை நிறுத்திவிட்டு புதிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொள்ள முன்வர வேண்டும்.
L Murugan Trilingual Policy: 'கல்வியில் அரசியல் செய்ய வேண்டாம்'
சுமார் 5,000 கோடி ரூபாய் பயன்படுத்தி இருக்க முடியும். திமுகவிற்கு ஒன்றை சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். இது 1965ஆம் ஆண்டு கிடையாது. இன்றைய இளைஞர்கள் முன்னேற்றத்தை நோக்கி, வளர்ச்சியை நோக்கி, சாதிக்க விரும்பும் இளைஞர்கள். அப்படிப்பட்ட இளைஞர்களை பின்னோக்கி இழுத்துச் செல்ல வேண்டாம். அவர்கள் முன்னேறுவதற்கும் வாழ்வு மேம்படவும் தமிழக அரசு ஒத்துழைக்க வேண்டும்.
கும்மிடிப்பூண்டி தாண்டினால் ஒருவர் திட்டுவது கூட நமக்கு தெரியாது. ஒரு மொழியை கற்றுக் கொள்வதென்பது, மற்றொரு மொழி மீது பற்றுதல் ஏற்படுத்தும். அதில் என்ன தவறு. மெட்ரிகுலேஷன் பள்ளிகளிலும் சிபிஎஸ்சி பள்ளிகளிலும் வழங்கப்படும் உரிமை அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு மட்டும் ஏன் மறுக்கப்பட வேண்டும். அதனால் மூன்று மொழி வேண்டும் என்று மக்கள் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். கோலம் போட்டும் கோரிக்கைகளை வெளிப்படுத்துகின்றனர். அதனால் திமுக அரசு அரசியல் செய்வதை விட்டுவிட்டு கல்வியிலும் மாணவர்களின் முன்னேற்றத்திலும் அரசியல் செய்வதை திமுக நிறுத்த வேண்டும்.
L Murugan Trilingual Policy: '3வது மொழி வேண்டும்'
ஆங்கிலம் எல்லோருக்கும் தெரியுமா, ஆட்டோ ஒட்டுபவருக்கு ஆங்கிலம் தெரியுமா...? நாமக்கல் ஒரு கிராமத்தில் இருப்பவர்களுக்கு எப்படி ஆங்கிலம் தெரியும்?, மூன்றாவது மொழி வேண்டும். ஆசிரியர் பற்றாக்குறை ஏற்படாமல் இருப்பதற்காக தான் பி.எம்.ஸ்ரீ திட்டத்தின் கீழ் பணம் ஒதுக்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் எத்தனை பள்ளிகளில் தமிழ் ஆசிரியர்கள் இல்லை தெரியுமா?, இது எல்லாம் ஒரு விஷயம் கிடையாது. நடைமுறைப்படுத்துவதுதான் விஷயம். மொழி தெரிந்த ஆசிரியரை பணிக்கு அமர்த்த முடியவில்லை என்றால் நீங்கள் என்ன அரசாங்கம் நடத்துகிறீர்கள்?. தமிழ்நாட்டின் அரசு பள்ளிகளிலும் முறையான ஆசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டும். மொழி கற்றுக் கொடுக்கப்பட வேண்டும் என்று தான் நான் கூறுகிறேன்" என்றார்.
மேலும் படிக்க | "அரசியல் செய்வது நீங்களா... நாங்களா?" - மு.க. ஸ்டாலின் பேச்சு
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ