Foods For Arthritis: அனைத்து வயதினரிடையேயும் மூட்டுவலி பிரச்சனை அதிகரித்து வருகிறது. இந்த ஆபத்து இளைஞர்களிடமும் காணப்படுகிறது. வாழ்க்கை முறை மற்றும் உணவுமுறையில் ஏற்படும் குளறுபடிகளால் இந்த ஆபத்து மேலும் அதிகரித்துள்ளது. மூட்டுகளை ஆரோக்கியமாக வைத்திருக்க அனைத்து மக்களும் தொடர்ந்து முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர். கீல்வாதத்தைத் தடுக்க, சரியான சரியான உணவு முறையை பின்பற்றுவது அவசியமாகும். சில உணவுகள் மற்றும் பானங்கள் கீல்வாதத்திலிருந்து உங்களைப் பாதுகாப்பதில் உதவியாக இருக்கும், அதே சமயம் சில உணவுகள் இந்த பிரச்சனையை அதிகரிக்கும்.
இந்த நோயின் ஆபத்து அதிகரித்து வருவதால், மூட்டுவலியைத் தடுக்க நீங்கள் என்ன சாப்பிட வேண்டும் மற்றும் எதைத் தவிர்க்க வேண்டும் என்பதை அறிந்து கொள்வது அவசியம் என்று சுகாதார நிபுணர்கள் கூறுகிறார்கள். அதை பற்றி இந்த பதிவில் விரிவாக காணலாம்.
கீல்வாதம் வீட்டு வைத்தியம் (Home Remedies For Arthritis)
ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் கீல்வாதத்தில் நன்மை பயக்கும்
கீல்வாதத்தின் (Arthritis) அபாயத்தைக் குறைக்க, ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த உணவுகளை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்வது நன்மை பயக்கும். சில வகையான மீன்களில் வீக்கத்தை எதிர்த்துப் போராடும் ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன. அவற்றை உட்கொள்வது கீல்வாதத்தைத் தடுப்பதில் உதவும். பாதாம், ஹேசல்நட்ஸ், வேர்க்கடலை, பெக்கன்கள், பிஸ்தா மற்றும் அக்ரூட் பருப்புகள் போன்றவற்றிலும் அதிக அளவு ஒமேகா-3 கொழுப்புகள் உள்ளன. இவையும் கீல்வாதத்தைத் தடுக்க உதவும்.
ஆலிவ் எண்ணெய் உட்கொள்ளுங்கள்
ஆலிவ் எண்ணெய் (Olive Oil) உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கும் எண்ணெய்களில் ஒன்றாக கருதப்படுகிறது. எக்ஸ்ட்ரா விர்ஜின் ஆலிவ் எண்ணெயில் ஓலியோகாந்தல் போன்ற இதய ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் கலவைகள் நிறைந்துள்ளன. இது வீக்கத்தைக் குறைக்கிறது. கீல்வாதம் மற்றும் அதன் வீக்கத்தைக் குறைப்பதிலும் ஆலிவ் எண்ணெய் நன்மை பயக்கும். ஆலிவ் எண்ணெயில் வைட்டமின் டி உள்ளது. இது எலும்புகளை ஆரோக்கியமாக வைத்திருக்க அவசியம்.
மேலும் படிக்க | உடல் எடையை வேகமா குறைக்க ஒரு சுவையான வழி: சோயா சங்ஸை இப்படி சாப்பிடுங்க
உப்பு மற்றும் சர்க்கரை இரண்டும் தீங்கு விளைவிக்கும்
அதிக அளவு சர்க்கரை சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு மிகவும் தீங்கு விளைவிக்கும். இது நீரிழிவு அபாயத்தை அதிகரிப்பது மட்டுமல்லாமல், கீல்வாதத்தின் அபாயத்தையும் அதிகரிக்கும். முடக்கு வாதம் உள்ள 217 பேரிடம் நடத்தப்பட்ட ஆய்வில், அதிக சர்க்கரை கலந்த சோடாக்களை உட்கொள்ளும் நபர்களுக்கு மூட்டுவலி ஏற்படும் அபாயம் அதிகம் உள்ளதாக கண்டறியப்பட்டது. இதேபோல், உப்பு அதிகம் உள்ள உணவுகளை உட்கொள்வது எலும்புகளுக்கு தீங்கு விளைவிக்கும். இது எலும்பு அடர்த்தியைக் குறைக்கும் அபாயத்தையும் அதிகரிக்கிறது.
புகைபிடித்தல் மற்றும் மதுபானம் தீங்கு விளைவிக்கும்
புகைப்பிடிப்பவர்களின் (Smoking) உடலில் சைட்டோகைன்கள் எனப்படும் அழற்சி புரதங்கள் அதிகமாகி விடுகின்றன. இது முடக்கு வாதம் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கும். இதேபோல், ஆல்கஹால் தொடர்பான அழற்சியும் கீல்வாதத்தின் அபாயத்தை அதிகரிக்கிறது மற்றும் அதன் அறிகுறிகள் தீவிரமடைகின்றன. புகைபிடித்தல் மற்றும் மதுபானம் இரண்டையும் தவிர்ப்பது உங்கள் அபாயங்களைக் குறைக்க உதவியாக இருக்கும்.
(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | சிறுநீரக பாதிப்பு குறித்து எச்சரிக்கும் ‘சில’ ஆபத்தான அறிகுறிகள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ