5% வட்டியில் ₹3 லட்சம் கடன்... யாருக்கெல்லாம் கிடைக்கும்... விதிமுறைகள் விபரம்!

பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் அறிமுகப்படுத்திய PM விஸ்வகர்மா யோஜனா திட்டத்தின் கீழ் அரசு எந்த உத்தரவாதமும் இன்றி ரூ.3 லட்சம் வரை கடன் வழங்குகிறது.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Oct 30, 2023, 03:49 PM IST
  • பிரதம மந்திரி விஸ்வகர்மா திட்டம் மத்திய அரசால் தொடங்கப்பட்ட திட்டமாகும்
  • தொழில் தொடங்க திறன் பயிற்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
  • உதவித்தொகை உள்ளிட்ட இதர சலுகைகளும் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
5% வட்டியில் ₹3 லட்சம் கடன்... யாருக்கெல்லாம் கிடைக்கும்... விதிமுறைகள் விபரம்! title=

நீங்கள் சொந்தமாக தொழில் தொடங்க் விரும்[பினால், பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் அறிமுகப்படுத்திய PM விஸ்வகர்மா யோஜனா உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். இத்திட்டத்தின் கீழ் அரசு எந்த உத்தரவாதமும் இன்றி ரூ.3 லட்சம் வரை கடன் வழங்குகிறது. குறிப்பிட்ட 18 வகை தொழில்களுக்கு இந்த கடன் உதவி வழங்கப்படுகிறது.

நிதி உதவியுடன் திறன் மேம்பாட்டு பயிற்சி

பிரதம மந்திரி விஸ்வகர்மா திட்டம் மத்திய அரசால் தொடங்கப்பட்ட திட்டமாகும், இதில் தேவைப்படுபவர்களுக்கு கடன்கள் வழங்கப்பட்டு தொழில் செய்ய ஊக்குவிக்கப்படுகிறது. பிரதமர் நரேந்திர மோடி கடந்த செப்டம்பரில் விஸ்வகர்மா ஜெயந்தியை முன்னிட்டு இந்தத் திட்டத்தைத் தொடங்கினார். இதில், பல்வேறு தொழில்களுடன் தொடர்புடையவர்களுக்கு உத்தரவாதமின்றி கடன் வழங்கப்படுவது மட்டுமின்றி, அத்துறையில் தொழில் தொடங்க திறன் பயிற்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி உதவித்தொகை உள்ளிட்ட இதர சலுகைகளும் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கடன் தொகை இரண்டு நிலைகளில் வழங்கப்படுகிறது

பிரதம மந்திரி விஸ்வகர்மா யோஜனா திட்டத்தின் கீழ் மிகப்பெரிய நன்மை என்னவென்றால், திறமையான ஒருவர் தனது சொந்த தொழிலைத் தொடங்க விரும்பினால், அவர் இந்தத் திட்டத்தின் கீழ் கடனுக்கு விண்ணப்பிக்கலாம். இதில், 3 லட்சம் ரூபாய் வரை கடன் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன் கீழ், முதற்கட்டமாக தொழில் தொடங்க ரூ.1 லட்சம் கடனுதவியும், அதன்பின் இரண்டாம் கட்டத்தில் அதன் விரிவாக்கத்துக்கு பயனாளி ரூ.2 லட்சம் வரை கடன் பெறலாம். 5 சதவீத வட்டி விகிதத்தில் இந்த கடன் வழங்கப்படும்.

பயிற்சியுடன் தினசரி ரூ.500 உதவித்தொகை

விஸ்வகர்மா யோஜனாத் திட்டத்தில், ஒருபுறம், தொழில் தொடங்க ரூ.3 லட்சம் கடனுதவி, மறுபுறம், இதன் கீழ் முடிவு செய்யப்பட்ட 18 வகை தொழில்களில் உள்ளவர்களின் திறமையை மேலும் மேம்படுத்த, சுமார் ஒரு வார பயிற்சியும் அளிக்கப்படும். மாஸ்டர் டிரெய்னர்கள் மூலம் இந்த பயிற்சி வழங்கப்படும், இது தவிர, ஒரு நாளைக்கு 500 ரூபாய் உதவித்தொகையும் வழங்கப்படும். பயனாளிகளுக்கு பிரதமர் விஸ்வகர்மா சான்றிதழ் மற்றும் அடையாள அட்டை, அடிப்படை மற்றும் மேம்பட்ட பயிற்சி தொடர்பான திறன் மேம்பாடு, தொழில் கருவித் தொகுப்பு ஊக்கத்தொகை ரூ.15,000, டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கான ஊக்கத்தொகை வழங்கப்படும்.

மேலும் படிக்க | ரயில்வே ஊழியர்களுக்கு டபுள் ஜாக்பாட்: தீபாவளி போனஸை தொடர்ந்து அதிரடி டிஏ ஹைக்

கீழே குறிப்பிடப்பட்டுள்ள 18 தொழில் செய்யும் மக்கள் கடன் பெறலாம்

தச்சன், மர ஆசாரி
படகு செய்வர்கள்
பொற் கொல்லர்
பூட்டு தொழிலாளி
பொற்கொல்லர்
மண்பாண்ட தயாரிப்பாளர் (குயவர்)
சிற்பி
தலைமை மேஸ்திரி
மீன் வலை செய்பவர்
ஆயுதம் தயாரிப்பவர்
கல் உடைப்பவர்கள்
செருப்புத் தொழிலாளி/காலணி கைவினைஞர்
கூடை/பாய்/துடைப்பம் தயாரிப்பாளர்கள்
பொம்மை மற்றும் பிற பொம்மை உற்பத்தியாளர்கள் (பாரம்பரியம்)
முடிதிருத்தம் செய்பவர்
பூமாலை, வேலைப்பாடு செய்பவர்கள்,
சலவை தொழில் செய்பவர்
தையல்காரர்

கடன் பெற கீழ்கண்ட தகுதி இருக்க வேண்டும்

1. விண்ணப்பதாரர் இந்திய குடிமகனாக இருக்க வேண்டும்.

2. பயனாளியான விஸ்வகர்மா தீர்மானிக்கப்பட்ட 18 தொழில்களில் ஒன்றைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும்.

3. விண்ணப்பதாரரின் வயது 18 வயதுக்கு மேல் மற்றும் 50 வயதுக்கு குறைவாக இருக்க வேண்டும்.

4. அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் தொடர்புடைய வர்த்தகத்தில் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

5. திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ள 140 சாதிகளில் ஏதாவது ஒன்றைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும்.

விண்ணப்பத்தின் போது தேவைப்படும் ஆவணங்கள்

ஆதார் அட்டை
பான் கார்டு
வருமான சான்றிதழ்
சாதி சான்றிதழ்
அடையாள அட்டை
முகவரி ஆதாரம்
பாஸ்போர்ட் அளவு புகைப்படம்
வங்கி பாஸ்புக்
செல்லுபடியாகும் மொபைல் எண்

ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை

1. pmvishwakarma.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்லவும்.

2. பிரதம மந்திரி விஸ்வகர்மா கௌஷல் சம்மன் யோஜனா என முகப்பு பக்கத்தில் தெரியும்.

3. இங்கே இருக்கும் Apply Online ஆப்ஷன் லிங்கை கிளிக் செய்யவும்.

4. இப்போது இங்கே நீங்களே பதிவு செய்ய வேண்டும்.

5. பதிவு எண் மற்றும் கடவுச்சொல் உங்கள் மொபைலுக்கு SMS மூலம் அனுப்பப்படும்.

6. இதற்குப் பிறகு, பதிவுப் படிவத்தை முழுமையாகப் படித்து முழுமையாக நிரப்பவும்.

7. பூர்த்தி செய்யப்பட்ட படிவத்துடன் தேவையான அனைத்து ஆவணங்களையும் ஸ்கேன் செய்து பதிவேற்றவும்.

8. இப்போது படிவத்தில் உள்ளிடப்பட்ட தகவலை மீண்டும் ஒருமுறை சரிபார்த்து சமர்ப்பிக்கவும்.

மேலும் படிக்க | மத்திய அரசு ஊழியர்களுக்கு காத்திருக்கும் ட்ரிபிள் மகிழ்ச்சி: டிஏ அரியரால் அதிரடி ஏற்றம், கணக்கீடு இதோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News