கருட புராணத்தில் ‘இந்த’ 6 தவறுகளுக்கு மன்னிப்பே கிடையாது! கொடூர தண்டனைகள் கிடைக்குமாம்..

Garuda Purana Cruel Punishments For Sins : கருட புராணம், மனிதர்களுக்கு இறப்பிற்கு பிறகு என்ன நடக்கும் என்பதை காண்பிக்கும் புத்தகம் ஆகும். இதில் குறிப்பிடப்பட்டிருக்கும் பாவங்கள் குறித்தும், அதற்கான தண்டனைகள் குறித்தும் பார்க்கலாம்.

Garuda Purana Cruel Punishments For Sins : கருட புராணம் என்பது இந்தியர்கள் பலரால், பெரிதும் படிக்கப்படும் புத்தகமாகும். இந்த புராணம், பலருக்கு நல்வழியை ஏற்படுத்தி தரும் புத்தகம் எனக்கூறப்படுகிறது. இதில், இறந்து போன மனிதர்களுக்கு இறப்பிற்கு பின்பு என்ன நடக்கும் என்பதை எழுதியிருப்பர். இதில் மொத்தம் 28 நரகங்கள் இருப்பதாகவும், இதில் ஒவ்வொரு பாவத்திற்கும், ஒவ்வொரு தண்டனை இருக்கும். அப்படி, கருட புராணத்தில் கொடூர தண்டனை கொடுக்கப்படும் 6 தண்டனைகள் குறித்து இங்கு பார்ப்போம். 

1 /7

பிறரின் உணர்வுகளுடன் விளையாடுபவர்களுக்கு நரகத்தில் தாமிஸ்ரம் என்ற தண்டனை வழங்கப்படும். பிறரை ஏமாற்றுபவர்கள், ஒருவரின் நம்பிக்கையை உடைப்பவர்கள் உள்ளிட்ட தவறுகளை செய்பவர்களின் ஆன்மாவுக்கு சவுக்கடி கொடுக்கப்படுமாம். இவர்களுக்கு ஓய்வு என்பதே கொடுக்கப்படாதாம். 

2 /7

பிறரின் பணம், பொருள், சொத்து ஆகிய பொருட்களை திருடுபவர்களுக்கு இந்த தண்டனை வழங்கப்படும். இவர்கள், பாம்பு போன்ற தோற்றம் கொண்ட ஒரு மிருகத்தால் தண்டிக்கப்படுவராம்.

3 /7

பிறரை மரியாதை இல்லாமல் பேசுபவர்கள், மற்றும் அடக்க முடியாத ஆத்திரத்துடன் வாழ்பவர்களுக்கு நரகத்தில் இந்த தண்டனை கொடுக்கப்படும். இந்த தண்டனையில், தாங்க முடியாத சூடான ஒரு இடத்தில் அவர்களை மீண்டும் மீண்டும் ஓட வைப்பார்களாம்.

4 /7

உதவி தேவைப்படுபவர்களுக்கு அதை செய்ய முடியும் இடத்தில் இருப்பவர்கள் உதவி செய்யாமல் இருந்தால், அவர்களுக்கு கொடுக்கப்படும் தண்டனை, அந்தகூபம். இவர்கள் காட்டு விலங்குகள், கொடூர பூச்சிகள் மற்றும் ஊர்வனங்கள் ஆகியவற்றால் நரகத்தில் தண்டிக்கப்படுவர். 

5 /7

மமதையில் இருப்பவர்கள், பிறரை தனக்கு கீழே வைத்து பார்ப்பவர்களுக்கு வழங்கப்படும் தண்டனைதான் விசாசனம். இந்த தண்டனையில், எமனின் கையாள்களால் இவர்கள் தண்டிக்கப்படுவார்களாம். 

6 /7

சமூகத்திற்கு சீர்கேடாக விளங்குபவர்களுக்கு வழங்கப்படும் தண்டனை அது. கருட புராணத்தை பொருத்தவரை இவர்கள் கொடூர பசியுடன் இருக்கும் நாய்களால் கடிக்கப்பட்டு, சாப்பிடப்படுவர்.

7 /7

(பொறுப்பு துறப்பு: இவை அனைத்தும் பொதுவான கருத்துக்கள் மற்றும் நம்பிக்கைககளின் அடிப்படையில் எழுதப்பட்டதாகும். இதனை ஜீ நியூஸ் (Zee Tamil News) உறுதிப்படுத்தவில்லை)