Petrol Price Today 2021 ஏப்ரல் 18: பெட்ரோல், டீசலின் இன்றைய விலை நிலவரம் என்ன?

Petrol Price Today 18 April 2021 Updates: பெட்ரோல்-டீசல் விலை தொடர்ந்து மூன்றாவது நாளாக இன்று மாறவில்லை. பெட்ரோல் மற்றும் டீசல் விலை மார்ச் மாதத்தில் மூன்று முறை குறைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Last Updated : Apr 18, 2021, 11:10 AM IST
  • இன்று பெட்ரோல் விலை என்ன?
  • இன்று டீசல் விலை என்ன?
  • ஸ்ரீகங்காநகரின் எரிபொருள் விலை என்ன?
Petrol Price Today 2021 ஏப்ரல் 18: பெட்ரோல், டீசலின் இன்றைய விலை நிலவரம் என்ன? title=

Petrol Price 18 April 2021 Update: பெட்ரோல் மற்றும் டீசல்  விலையில் தொடர்ந்து மூன்று நாட்களாக எந்த மாற்றமும் இல்லை. மார்ச் மாதத்தில் பெட்ரோல் டீசல் விலை மூன்று மடங்கு குறைக்க மிகப்பெரிய காரணம் உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்தது.

தற்போது மூன்று வாரங்களில், கச்சா எண்ணெய் 10 சதவீதத்திகும் அதிகமாக குறைந்துள்ளது. கச்சா எண்ணெயின் விலை பீப்பாய்க்கு 71 டாலர் என்ற உயர்விலிருந்து பீப்பாய்க்கு 64 டாலராக குறைந்துள்ளது. முன்னதாக பிப்ரவரியில், பெட்ரோல் மற்றும் டீசல் 16 மடங்கு விலை உயர்ந்தன. 

 பெட்ரோல் மற்றும் டீசல் விலையைப் பொறுத்தவரை இன்று மக்களுக்கு எந்த வருத்தமும் ஏற்படாது. ஞாயிற்றுகிழமையான இன்று. எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனங்கள்தொடர்ந்து மூன்றாவது நாளாக விலையில் எந்த மாற்றமும் செய்யவில்லை.

Also Read | சின்ன கலைவாணர் நடிகர் விவேக்கும் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமும்..

ஆனால்,, ஸ்ரீகங்கநகரில் மட்டும் இன்றும் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை ரூ .100.89 ஆகும். இதற்கு முன்னதாக வியாழக்கிழமை, பெட்ரோல் மற்றும் டீசல் விலை லிட்டருக்கு 16 பைசா குறைக்கப்பட்டது.

டெல்லியில்  (Delhi Petrol Price Today) பெட்ரோல் ரூ .90.40 ஆகவும், டீசல் லிட்டருக்கு ரூ .80.73 ஆகவும் உள்ளது.
மும்பையில் (Mumbai Petrol Price Today): பெட்ரோல் ரூ .96.83 ஆகவும், டீசல் லிட்டருக்கு ரூ .87.81 ஆகவும் உள்ளது.
கொல்கத்தாவில் (Kolkata Petrol Price Today): பெட்ரோல் ரூ .90.62 ஆகவும், டீசல் லிட்டருக்கு ரூ .83.61 ஆகவும் உள்ளது.
சென்னையில் (Chennai Petrol Price Today)பெட்ரோல் ரூ .92.43 ஆகவும், டீசல் லிட்டருக்கு ரூ .85.75 ஆகவும் உள்ளது.
நொய்டாவில் (Noida Petrol Price Today)பெட்ரோல் ரூ .88.79 ஆகவும், டீசல் லிட்டருக்கு ரூ .81.19 ஆகவும் உள்ளது.

நாள்தோறும் மாறும் விலை  

அந்நிய செலாவணி விகிதங்களுடன் சர்வதேச சந்தையில் கச்சா விலை என்ன என்பதைப் பொறுத்து தினமும் காலை 6 மணிக்கு பெட்ரோல்  மற்றும் டீசல்   விலை மாறுகிறது. புதிய கட்டணங்கள் காலை 6 மணிக்கு அமலாகும். பெட்ரோல் டீசல் விலையில் கலால் வரி, டீலர் கமிஷன் மற்றும் பிற செலவினங்களை சேர்த்த பிறகு, விலை நிர்ணயிக்கப்படுகிறது.   

Also Read | Biography: விவேகானந்தன் என்னும் நடிகர் விவேக்கின் வாழ்க்கைப் பயணம்

பெட்ரோல் டீசல் விலையை சரிபார்ப்பது எப்படி?  

SMS மூலம் பெட்ரோல் டீசலின் விலையை தெரிந்துக் கொள்ளலாம். உங்கள் நகரக் குறியீட்டை RSP-யுடன் தட்டச்சு செய்து 9224992249 என்ற எண்ணுக்கு SMS அனுப்ப வேண்டும். ஒவ்வொரு நகர குறியீடும் மாறுபடும். அதேபோல் ஐ.ஓ.சி.எல் வலைத்தளத்திலிருந்தும் எரிபொருள் விலையை தெரிந்துக் கொள்ளலாம்.

அதோடு, பெட்ரோல் டீசல் விலையை தெரிந்துக் கொள்வதற்கு மற்றொரு வழிமுறையாக BPCL வாடிக்கையாளர் RSP 9223112222 மற்றும் HPCLவாடிக்கையாளர் HPPrice-க்கு 9222201122 குறுஞ்செய்தியை அனுப்பி தெரிந்து கொள்ளலாம்.

Also Read | IPL 2021: சென்னை அணியின் அபார வெற்றியில் Deepak Chahar பங்கு 

அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, கல்வி, பொழுதுபோக்கு, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News