இந்தியாவில் தங்கம் வாங்க மற்றும் அதனை சுற்றியுள்ள சில விதிமுறைகளை அரசாங்கம் அமல்படுத்தியுள்ளது, குறிப்பாக பணமாக கொடுத்து தங்கம் வாங்க சில விதிகள் உள்ளன. இந்தியாவில் தங்க நகைகளை வாங்குவதற்கான விதிகளை பற்றி தெரிந்து கொண்டு தங்கம் வாங்குவது நல்லது. இந்திய அரசு ரத்தினங்கள் மற்றும் நகைத் துறையை பணமோசடி தடுப்புச் சட்டம் (பிஎம்எல்ஏ) 2002-ன் கீழ் கொண்டு வந்துள்ளது. இந்தச் சட்டத்தின் கீழ், நகைக்கடைக்காரர்கள் ஒரு குறிப்பிட்ட வரம்புக்கு மேல் ரொக்கப் பரிவர்த்தனை செய்யும் நபர்களிடம் பான் அல்லது ஆதார் நம்பரை கேட்டு வாங்க வேண்டும். குறிப்பாக ரூ. 10 லட்சம் மற்றும் அதற்கு மேற்பட்ட பணப் பரிவர்த்தனைகளை அரசாங்கத்திடம் தெரிவிப்பதும் இதில் அடங்கும்.
அதே போல, ஒரே நாளில் 2 லட்ச ரூபாய்க்கு மேல் ரொக்கமாக கொடுத்து தங்க நகைகளை வாங்குவது வருமான வரிச் சட்டத்தை மீறுவதாகும். இப்படி செய்தால் வருமான வரிச் சட்டத்தின் 271டி பிரிவின் கீழ் பரிவர்த்தனை செய்யப்பட்ட தொகைக்கு சமமான அபராதம் விதிக்கப்படவும் வாய்ப்புள்ளது. மேலும், 4 லட்ச ரூபாய்க்கு தங்க ஆபரணங்களை ரொக்கமாக கொடுத்து வாங்குவது, பிரிவு 269ST நிர்ணயித்த ரூ.2 லட்சம் வரம்பை மீறுகிறது, இதன் விளைவாக பிரிவு 271D இன் கீழ் அபராதம் விதிக்கப்படும். இந்த அபராதம் பரிவர்த்தனை தொகைக்கு சமம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். இந்த வழக்கில், நகை வியாபாரி பண பரிவர்த்தனைக்கு ரூ.4 லட்சம் அபராதம் செலுத்த வேண்டும். இந்த அபராதம் காரணமாக, நகைக்கடைக்காரர்கள் ரூ.2 லட்சத்துக்கு மேல் ரொக்கமாக பணம் செலுத்தத் தயங்குகின்றனர்.
இந்தியாவில் தங்கம் வாங்குவதற்கான ஆவணங்கள்
1962ன் வருமான வரி விதிகளின் விதி 114B இன் கீழ் ரூ. 2 லட்சம் மற்றும் அதற்கு மேல் மதிப்புள்ள தங்க ஆபரணங்களை வாங்க பான் விவரங்களை கண்டிப்பாக வழங்க வேண்டும். தங்கம் வாங்கும் மக்கள் KYC தொடர்பான விவரங்களை அளித்தால் மட்டுமே அதிக மதிப்புள்ள பணப் பரிவர்த்தனைகளை மேற்கொள்ளலாம். ரூபாய் 2 லட்சம் மற்றும் அதற்கு மேற்பட்ட மதிப்புள்ள தங்க நகைகளை வாங்குவதற்கு, தனிநபர்கள் பான் அல்லது ஆதாரை கடைக்காரர்களிடம் கொடுக்க வேண்டும். அதே போல, ரூ. 2 லட்சத்துக்குக் குறைவான பரிவர்த்தனைகளுக்கு KYC போன்ற எந்த ஒரு ஆவணங்களும் தேவையில்லை. மேலும், விவசாயம், வீட்டுச் சேமிப்பு அல்லது சட்டப்பூர்வ வாரிசு போன்ற வெளிப்படுத்தப்பட்ட வருமான ஆதாரங்களைப் பயன்படுத்தி தங்க நகைகளை வாங்கினால், அது வரிவிதிப்புக்கு உட்பட்டது அல்ல.
தங்கத்தின் மீதான வரி
தங்கம் வாங்கி அதனை மூன்று ஆண்டுகளுக்குள் விற்றால் வருமான வரி அடுக்கு விகிதங்களில் குறுகிய கால மூலதன ஆதாய வரி விதிக்கப்படும். தங்கம் வாங்கிய மூன்று ஆண்டுகளுக்கு பிறகு விற்கப்பட்டால், தங்கம் நீண்ட கால மூலதன ஆதாய வரியை ஈர்க்கிறது. மூலதன ஆதாயங்களுக்கு 20 சதவிகிதம் குறியீட்டு நன்மையுடன் (பணவீக்கத்திற்குப் பிறகு கொள்முதல் விகிதத்தை சரிசெய்தல்) மற்றும் 4 சதவிகித செஸ் வரி விதிக்கப்படுகிறது.
மேலும் படிக்க | அசத்தலான 5 முதலீடு திட்டங்கள்! வயதான காலத்தில் பண கஷ்டம் இருக்காது!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ