Union Budget 2025: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்ரவரி 1 ஆம் தேதி 2025-26 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்யவுள்ளார். இந்த பட்ஜெட் குறித்து வரி செலுத்துவோர், பெண்கள், விவசாயிகள், மூத்த குடிமக்கள், தனியார்துறை ஊழியர்கள் என அனைவரும் பல வித எதிர்பார்ப்புகளைக் கொண்டுள்ளனர்.
Budget 2025 Expectations
குறிப்பாக, வருமான வரி பிரிவில் மக்களிடையே சிறப்பு ஆர்வம் உள்ளது. சாமானிய மக்களின் சுமையைக் குறைக்க அதில் ஏதேனும் மாற்றங்கள் அறிவிக்கப்படக்கூடும் என மக்கள் நம்புகிறார்கள். 2025 பட்ஜெட்டில் சில பெரிய அறிவிப்புகள் வெளியிடப்படலாம் என நிதி அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த பட்ஜெட்டில் சாமானியர்கள் மற்றும் வரி செலுத்துவோர் கொண்டுள்ள சிறப்பு எதிர்பார்ப்புகள் என்ன? இதை பற்றி இந்த பதிவில் காணலாம்.
- Tax Slab: இந்த ஆண்டு பட்ஜெட்டில் வரி அடுக்கில் மாற்றங்கள் மற்றும் புதிய நிவாரண நடவடிக்கைகளை எதிர்பார்க்கலாம் என கூறப்படுகின்றது.
- Old Tax Regime: இது தவிர, பழைய வரி முறையில் அதிக விலக்குகள் சேர்க்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
- Savings Account Interest: பிரிவு 80TTA (சேமிப்பு கணக்கு வட்டி) இன் கீழ் விலக்கு வரம்பை ரூ.10,000 லிருந்து ரூ.20,000 ஆக உயர்த்துவது குறித்து அரசாங்கம் பரிசீலிக்க வேண்டும் என்றும் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
- Senior Citizens: இதேபோல், மூத்த குடிமக்களுக்கான பிரிவு 80TTB இன் கீழ் விலக்கு வரம்பை ரூ. 50,000 -இலிருந்து (நிலையான வைப்பு வட்டிக்கு) ரூ. 1 லட்சமாக அதிகரிக்க வேண்டும் என்ற பரிந்துரையும் உள்ளது.
Deduction for Savings Interest: சேமிப்பு வட்டிக்கான விலக்கு
வருமான வரிச் சட்டம், 1961 இன் பிரிவு 80TTA, தனிநபர்கள் மற்றும் இந்து கூட்டுக் குடும்பங்கள் (HUFs) வங்கிகள், கூட்டுறவு வங்கிகள் அல்லது தபால் நிலையங்களில் பராமரிக்கப்படும் சேமிப்புக் கணக்குகளிலிருந்து வரும் வட்டி வருமானத்தில் ரூ.10,000 வரை விலக்கு அளிக்கிறது. இந்தக் விலக்கு 60 வயதுக்குட்பட்ட தனிநபர்கள் மற்றும் HUF களுக்குப் பொருந்தும். இருப்பினும், நிலையான வைப்புத்தொகை அல்லது தொடர் வைப்புத்தொகை (RD) மூலம் பெறப்படும் வட்டிக்கு இது பொருந்தாது.
பிரிவு 80TTA இன் கீழ் சேமிப்பு வங்கிக் கணக்குகளில் வட்டி வருமானத்திற்கான விலக்கு வரம்பு தனிநபர்கள் மற்றும் HUF -களுக்கு 2012-13 நிதியாண்டில் அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து மாறவில்லை. இன்னும் இது ரூ.10,000 ஆகவே உள்ளது. ஆகையால், அதில் சில மாற்றங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.
Senior Citizens: மூத்த குடிமக்களுக்கான எதிர்பார்ப்புகள் என்ன?
- பிரிவு 80TTA போலல்லாமல், பிரிவு 80TTB குறிப்பாக மூத்த குடிமக்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.
- பல வகையான வட்டி வருமானத்தில் பரந்த அளவிலான விலக்குகளை இது வழங்குகிறது.
- மூத்த குடிமக்கள் பிரிவு 80TTB இன் கீழ் சேமிப்பு, நிலையான மற்றும் தொடர் வைப்புத்தொகைகளிலிருந்து வரும் வருமானத்தில் விலக்கு பெறலாம்.
- இதில் அவர்களுக்கு ரூ.50,000 வரை வரி விலக்கு கிடைக்கிறது.
- சேமிப்பு மற்றும் நிலையான வைப்புத்தொகைகள் உட்பட வங்கி வைப்புத்தொகைகளிலிருந்து வரும் வட்டி வருமானத்திற்கும், தபால் அலுவலக வைப்புத்தொகைகளுக்கும் இந்த விலக்கு பொருந்தும்.
- இது பாதுகாப்பான முதலீடுகளை நம்பியிருக்கும் மூத்த குடிமக்களுக்கு நிதி நன்மையை வழங்குகிறது.
- இருப்பினும், பத்திரங்கள் மற்றும் கடன் பத்திரங்களிலிருந்து கிடைக்கும் வட்டி இந்த விலக்குக்கு தகுதியற்றது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
New Tax Regime: புதிய வரி முறையில் உள்ள எதிர்பார்புகள் என்ன?
இந்தியாவில் அதிகரித்து வரும் சுகாதார செலவுகளை மனதில் கொண்டு, பிரிவு 80TTB இன் கீழ் மூத்த குடிமக்களுக்கான தற்போதைய ரூ.50,000 வரம்பை குறைந்தபட்சம் ரூ.1 லட்சமாக அதிகரிக்க வேண்டும் என கோரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. வரம்பில் இந்த திருத்தம் செய்யப்பட்டால், அது ரிசர்வ் வங்கியால் எதிர்பார்க்கப்படும் ரெப்போ விகிதம் குறைப்பால் வட்டி விகிதங்களில் ஏற்படக்கூடிய குறைப்பை சமப்படுத்த உதவும். புதிய வரி முறைக்கு மாறுவதற்கு அதிகமான நபர்களை ஊக்குவிக்க, பிரிவுகள் 80TTA மற்றும் 80TTB இன் கீழ் விலக்குகளை அனுமதிக்க பரிந்துரைக்கப்படுகிறது. ஏனெனில் இந்த விலக்குகள் தற்போது பழைய வரி முறையில் மட்டுமே உள்ளன.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ