ஓய்வூதியதாரர்களுக்கு தற்போது மகிழ்ச்சியான செய்தி வெளியாகி இருக்கிறது, ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (இபிஎஃப்ஓ) ஆனது மத்திய ஓய்வூதியம் வழங்கும் முறையை அமைக்க திட்டமிட்டுள்ளது. இந்த திட்டம் குறித்து ஓய்வூதிய நிதி அமைப்பு ஜூலை 29 மற்றும் 30 ஆம் தேதிகளில் கலந்தாலோசிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாற்றத்தால் கிட்டத்தட்ட 73 லட்சம் ஓய்வூதியதாரர்கள் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. நாடு முழுவதும் இபிஎஃப்ஓ-ன் 130-க்கும் மேற்பட்ட ரீஜினல் அலுவலகங்கள் உள்ளன, இந்த அலுவலகங்கள் தகுதியான ஓய்வூதியதாரர்களுக்கு குறிப்பிட்ட தேதியில் ஓய்வூதியத்தை வழங்குகின்றன. அதனால், ஊழியர்களின் வங்கிக் கணக்கில் ஓய்வூதியம் பெறும் நேரம், ஒவ்வொரு இடத்திற்கு இடம் மாறுபடும்.
மேலும் படிக்க | ITR 2022 Filing Last Date: காலக்கெடு நீட்டிக்கப்படுமா? நிபுணர்கள் கூறுவது என்ன?
மத்திய ஓய்வூதியம் வழங்கும் திட்டத்தின் மூலம், லட்சக்கணக்கான ஓய்வூதியதாரர்கள் ஒரே நேரத்தில் பணத்தைப் பெறமுடியும். இந்த புதிய முறை செயல்படுத்தப்பட்டதும் 73 லட்சத்திற்கும் அதிகமான ஓய்வூதியதாரர்களின் வங்கிக் கணக்குகளில் நிதிப் பலன்களை வரவு வைக்க உதவும். கடந்த ஜூன் மாதத்தில், ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியம் பெறுவோர் நலத் துறை ஸ்டேட் வங்கியுடன் இணைந்து செயல்பட இருப்பதாக தெரிவித்தது. ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா ஓய்வூதியம் பெறுபவர்களின் நலனுக்காக ஒரு ஒருங்கிணைந்த ஓய்வூதிய போர்ட்டலை உருவாக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
மேலும் ஓய்வூதியதாரர்களுக்கு தடையற்ற சேவைகளை வழங்க, DoPPW மற்றும் எஸ்பிஐ-ன் தற்போதைய போர்டல்களை இணைப்பதன் மூலம் ஒருங்கிணைந்த ஓய்வூதிய போர்ட்டலை உருவாக்க உடனடி முயற்சிகள் தேவை என்று முடிவு செய்யப்பட்டது என்று அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த டிஜிட்டல் லைஃப் சான்றிதழ் மற்றும் ஃபேஸ் அங்கீகார தொழில்நுட்பமானது ஓய்வூதியம் பெறுவோர் மற்றும் வங்கிகளின் வாழ்க்கைச் சான்றிதழ்களை சமர்ப்பிப்பதில் கேம் சேஞ்சராக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | மத்திய அரசு ஊழியர்களுக்கு இரட்டை மகிழ்ச்சி..ஒரே நேரத்தில் டிஏ, பதவி உயர்வு!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ