Budget 2025: மகிளா சம்மான் சேமிப்பு திட்டம் நீட்டிக்கப்படுமா? பட்ஜெட்டில் வருகிறதா அறிவிப்பு?

Union Budget 2025: இந்த பட்ஜெட்டில் மகிளா சம்மான் சேமிப்பு திட்டம் நீட்டிக்கப்படுமா? நிபுணர்களின் கருத்து என்ன? இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jan 29, 2025, 10:00 AM IST
  • இந்த திட்டத்திற்கு தேவைப்படும் குறைந்தபட்ச வைப்புத்தொகை ரூ. 1,000.
  • ஒரு கணக்குதாரருக்கு அதிகபட்ச வரம்பு ரூ.2 லட்சம்.
  • வைப்புத்தொகைகளுக்கு 7.5% வருடாந்திர வட்டி கிடைக்கும்.
Budget 2025: மகிளா சம்மான் சேமிப்பு திட்டம் நீட்டிக்கப்படுமா? பட்ஜெட்டில் வருகிறதா அறிவிப்பு? title=

Union Budget 2025: பிப்ரவரி 1, 2025 அன்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்வார். 2025-26 நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும் போது தங்களுக்கான ஆதாயமான அறிவிப்புகளும் அதில் இடம்பெறும் என அனைத்து தரப்பு மக்களும் அதிக ஆர்வத்துடன் காத்திருக்கிறார்கள். அனைத்து துறை பிரதிநிதிகளும் தங்களுக்கான கோரிக்கைகளை ஏற்கனவே நிதி அமைச்சகத்திடம் சமர்ப்பித்துள்ளனர்.

Budget 2025 Expectations: பட்ஜெட் 2025 எதிர்பார்ப்புகள்

இந்த பட்ஜெட்டில் அரசாங்க நலத்திட்டங்களில் பல வித மாற்றங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன. மோடி அரசாங்கம் மக்களின் நலனுக்கான பல வித திட்டங்களை தீட்டியுள்ளது. அவற்றில் பலன்கள் பலதரப்பட்ட மக்களுக்கும் கிடைத்து வருகின்றன. இந்த பட்ஜெட்டில் இவற்றில் சில திட்டங்களின் மூலம் கிடைக்கும் பலன்கள் அதிகரிக்கப்படலாம் என்றும் சில திட்டங்கள் நீட்டிக்கப்படலாம் என்றும் நிபுணர்கள் கருதிகிறார்கள். அப்படி நீட்டிக்கப்பட வாய்ப்பிருக்கும் திட்டங்களின் ஒன்று பெண்களுக்கான நலத்திட்டமான மகிளா சம்மான் சேமிப்புச் சான்றிதழ் திட்டம்.

Mahila Samman Savings Certificate

மகிளா சம்மான் சேமிப்புச் சான்றிதழ் திட்டம், ஒரு முறை சிறுசேமிப்பு திட்டமாக அரசாங்கத்தால் அறிமுகபடுத்தப்பட்டது. இது தற்போது மார்ச் 2025 வரை கிடைக்கும். இந்த திட்டம், 2023–2024 மத்திய பட்ஜெட்டில் "ஆசாதி கா அம்ரித் மஹோத்சவ்" இன் ஒரு பகுதியாக அறிவிக்கப்பட்டது. எனினும், இந்த ஆண்டு பட்ஜெட்டில் இந்த திட்டம் நீட்டிக்கப்படலாம் என கூறப்படுகின்றது. 

நாட்டில் பெண்களை மையமாகக் கொண்ட திட்டங்களுக்கு அதிக நிதி ஒதுக்க வேண்டிய அவசியம் உள்ளது. எனினும், 2025 மத்திய பட்ஜெட்டில் மகிளா சம்மான் திட்டம் நீட்டிக்கப்படுமா என்பது உறுதியாகத் தெரியவில்லை. இந்த திட்டம் நீட்டிக்கப்படுவது அதிக பெண்கள் இதில் சேர்ந்து பயனடைய வழி வகுக்கும் என்பது பொதுவான ஒரு கருத்தாக உள்ளது.

பெண்களுக்கான நிதி பாதுகாப்பு

2023 பட்ஜெட்டில் வரையறுக்கப்பட்ட கால முதலீட்டு வாய்ப்பாக அறிமுகப்படுத்தப்பட்ட மகிளா சம்மான் சேமிப்புச் சான்றிதழ், பெண்களின் நிதி உள்ளடக்கம் மற்றும் அதிகாரமளிப்பை ஊக்குவிப்பதில் முக்கிய பங்கு வகித்துள்ளது. இந்தத் திட்டத்தில் 7.5% என்ற கவர்ச்சிகரமான வட்டி விகிதம் கிடைக்கிறது. இதில் அதிக நெகிழ்வுத்தன்மையும் உள்ளது. எனினும், இதில் எந்த வித வரிச் சலுகைகளும் கிடைக்காது. இதில் அதிகபட்ச முதலீட்டு வரம்பு ரூ. 2 லட்சமாக வரையறுக்கப்பட்டுள்ளது. 

முதன்மையாக குறைந்த வருமானக் குழுவில் உள்ள பெண்களிடையே சேமிப்பை ஊக்குவிக்க வடிவமைக்கப்பட்ட இந்த திட்டம், நிதிப் பாதுகாப்பை உருவாக்குவதற்கான ஒரு முக்கியமான முயற்சியாக செயல்படுகிறது.

மகிளா சம்மான் சேமிப்பு திட்டம் நீட்டிக்கப்படுமா?

மகிளா சம்மான் சேமிப்பு திட்டம் மார்ச் 31, 2025 அன்று முடிவடையவுள்ள நிலையில், 2025 பட்ஜெட்டில் இது நீட்டிக்கப்பட்டால், அது, பெண்களின் நிதி சுதந்திரத்தை மேலும் வலுப்படுத்த ஒரு வரவேற்கத்தக்க நடவடிக்கையாக இருக்கும். பெண்களை மையமாகக் கொண்ட நிதிக் கொள்கைகளில் அரசாங்கம் கவனம் செலுத்தி வருகிறது. இந்த நிலையில், இந்த திட்டத்தை நீட்டிப்பது அல்லது அதன் தாக்கத்தைத் தக்கவைக்க இதே போன்ற மாற்று முதலீட்டு திட்டங்களை அறிமுகம் செய்வது போன்ற ஏதாவது ஒன்றை அரசு பரிசீலிக்கலாம் என்று கருதப்படுகின்றது. 

எனினும் இந்த திட்டம் நீட்டிக்கப்படுவதற்கான சாத்தியம் இல்லை என்றும் ஒரு சாரார் கூறி வருகிறார்கள். முதல் ஆண்டில் அரசாங்கம் இந்தத் திட்டத்திற்கு நல்ல வரவேற்பையும் வைப்புத்தொகையையும் பெற்றது என்றாலும், அதன் பின்னர் மக்களின் ஆர்வம் பங்குச்சந்தை முதலீடுகள் மற்றும் மியூசுவல் ஃபண்டுகள் பக்கம் அதிகம் சென்றுவிட்டதாக கூறப்படுகின்றது. ஆகையால், இந்தத் திட்டத்திற்கான வரவேற்பு கடந்த ஆண்டைப் போல இப்போது அதிகமாக இருக்காது என்ற ஒரு கருத்தும் நிலவுகிறது.

மகிளா சம்மான் சேமிப்புச் சான்றிதழ்: திட்ட விவரங்கள்

- இந்த திட்டத்திற்கு தேவைப்படும் குறைந்தபட்ச வைப்புத்தொகை ரூ. 1,000. டெபாசிட்களை ரூ.100 இன் மடங்குகளில் செய்ய வேண்டும். 
- அனைத்து கணக்குகளிலும் ஒரு கணக்குதாரருக்கு அதிகபட்ச வரம்பு ரூ.2 லட்சம். 
- வைப்புத்தொகைகளுக்கு 7.5% வருடாந்திர வட்டி கிடைக்கும்.
- இது காலாண்டுக்கு ஒருமுறை கூட்டுத்தொகையாகக் கணக்கிடப்பட்டு கணக்கில் வரவு வைக்கப்படுகிறது.
- கணக்கு மூடப்படும் நேரத்தில் பணம் செலுத்தப்படும். 
- கணக்கு வைத்திருப்பவரின் மரணம் ஏற்பட்டாலோ அல்லது கணக்கு வைத்திருப்பவரின் உயிருக்கு ஆபத்தான நோய் அல்லது பாதுகாவலரின் மரணம் போன்ற தீவிர கருணை காரணங்கள் இருந்தால், தொடர்புடைய ஆவணங்களைச் சமர்ப்பித்து, அவரது கணக்கை முன்கூட்டியே மூடலாம். 
- கணக்கு திறக்கப்பட்ட நாளிலிருந்து இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு முதிர்ச்சியடைகிறது.

மேலும் படிக்க | அவசரமா கடன் வேணுமா... எந்த வங்கியில் எவ்வளவு வட்டி? காசை மிச்சம் பண்ண இதை படிங்க

மேலும் படிக்க | பென்ஷன் இல்லை என்ற டென்ஷன் வேண்டாம்... மாத வருமானம் ரூ.50,000 கிடைக்க உதவும் SWP திட்டம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News