Healthy Morning Routines To Burn Abdominal Belly Fat: உடல் எடையை குறைக்க முயற்சிப்பவர்கள் தொடர்ச்சியாக அதுசார்ந்த நடவடிக்கைகளில் இயங்கி வந்தால் மட்டுமே எதிர்பார்த்த பலன்கள் எதிர்பார்க்கும் நேரத்தில் கிடைக்கும். நீங்கள் ஒருநாள் கூட அதனை தவறவிடாமல் தொடர்ச்சியாக செய்துகொண்டே இருக்க வேண்டும்.
உடல் எடையை குறைக்கும் முயற்சியில் இருந்தாலும் நாள் முழுவதும் ஆற்றலுடன் இருக்க வேண்டியதும் அவசியமாகிறது. நாள் முழுவதும் ஆற்றலுடன் இருக்க வேண்டும் என்றால் நீங்கள் காலையில் ஆரோக்கியமான சில பழக்கவழக்கங்களை வைத்துக்கொள்வது அவசியம். காலையில் ஆரோக்கியமான பழக்கவழக்கங்களை செய்வதன் மூலம் வளர்சிதை மாற்றமும் வேகமாகும். இதனால், உடல் எடை குறையும் வாய்ப்பும் அதிகமாகும்.
அடிவயிறு தொப்பையை குறைக்க... காலையில் இவற்றை செய்யுங்க
எனவே, வாழ்வில் அழுத்தத்தை குறைத்துவிட்டு, நல்ல தூக்கத்துடனான வாழ்க்கைமுறை, ஆரோக்கியமான மற்றும் ஊட்டச்சத்து நிறைந்த உணவுப்பழக்கம், தொடர்ச்சியான உடற்பயிற்சிகள் ஆகியவை உடல் எடையை மட்டுமின்றி அடிவயிறு தொப்பை கொழுப்பும் விரைவாக கரையும்.
மேலும் படிக்க | அரிசியை எந்த நேரத்தில் சாப்பிட வேண்டும் என்று தெரியுமா? அதிக பிரச்சனை ஏற்படாது!
எனவே, காலையில் எழுந்த உடன் இந்த 5 விஷயங்களை மறக்கவே மறக்காதீர்கள். தினந்தோறும் காலையில் இந்த 5 விஷயங்களை தொடர்ச்சியாக செய்து வருவதால் உங்களுக்கு நாள் முழுவதும் ஆற்றல் கிடைக்கும், செரிமான அமைப்பும் ஆரோக்கியமாக இருக்கும். முக்கியமாக அடிவயிறு கொழுப்பு பட்டுனு கரையும். அந்த வகையில், அந்த 5 விஷயங்கள் என்னென்ன என்பதை இங்கு விரிவாக காணலாம்.
தியானம் செய்யுங்க
தியானம் செய்வதால் உடலில் Cortisol ஹார்மோன் குறைவாக சுரக்கும். இதனால், காலையிலேயே புத்துணர்ச்சியாக உணர்வீர்கள். காலை கிடைக்கும் புத்துணர்ச்சி நாள் முழுவதும் நீளும். ஆரோக்கியமான உடலுக்கு, ஆரோக்கியமான மனநிலையும் முக்கியம் என்பதை எப்போதும் மறக்காதீர்கள்.
உடற்பயிற்சிகள் அவசியம்
உடற்பயிற்சிகளை மட்டும் வைத்துக்கொண்டு உடல் எடையையும், அடிவயிறு தொப்பையையும் குறைத்துவிட முடியாது. அதேநேரத்தில், உடற்பயிற்சிகள் இல்லாமலும் தொப்பை கரைக்க இயலாது. எனவே, நல்ல கலோரிகளை எரிக்கும் வகையில், அனைத்துவிதமான உடற்பயிற்சிகளையும் காலையில் மேற்கொள்ளுங்கள். உரிய நிபுணரை அணுகி உங்கள் உடலுக்கு ஏற்ற உடற்பயிற்சிகளை மேற்கொள்வது அவசியமாகும்.
சூரிய ஒளி உடம்பில் படணும்
சிலர் காலையில் எழுந்து வீட்டுக்குள்ளேயே தங்களது அன்றாட வேலைகளை முடித்துக்கொள்வார்கள். ஆனால், தினமும் காலை 6.30-7.30 மணி வெயிலையும், இதமான காற்றையும் அனுபவிப்பவர்களால் மட்டுமே உடல் எடையை எதிர்பார்த்த நேரத்தில் குறைக்க முடியும். உங்களின் ஹார்மோன்களை சீராக வைத்துக்கொள்ள உதவும். இதனால் இரவில் நன்றாக தூக்கம் வரும். நன்றாக தூங்குவதும் உடல் எடை குறைப்பில் முக்கிய செயல்பாடாகும்.
புரதம் முக்கியம்
அனைத்து செயல்பாடுகளையும் முடித்துவிட்டு காலை 8-8.30 மணிக்குள் காலை உணவை சாப்பிட்டுவிடுங்கள். காலை உவில் அதிக புரதம் இருக்கும் உணவுகளை எடுத்துக்கொள்ளுங்கள். இதனால், ரத்த சர்க்கரை அளவு சீராக இருக்கும். ஆற்றல் கிடைக்கும். நீண்ட நேரத்திற்கு வயிறு நிறைந்த உணர்வு இருக்கும். அடிக்கடி அவசியமில்லாமல் பசி எடுக்காது.
செய்ய வேண்டிய முதல் விஷயமே இதுதான்...
காலை எழுந்த உடன் செய்ய வேண்டிய முதல் காரியமே இதுதான். ஆம், காலையில் எழுந்த உடன் ஒரு கிளாஸ் தண்ணீர் குடிப்பது வளர்ச்சிதை மாற்றத்தை தூண்டும். ஏனென்றால் இரவு முழுவதும் உடல் நீர் இன்றி இருக்கும். எனவே, காலையில் எழுந்த உடன் தண்ணீர் குடிப்பது நல்லது, செரிமான ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.
(பொறுப்பு துறப்பு: இங்கு கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களும் பொதுவான கருத்துக்களின் அடிப்படையில் எழுதப்பட்டதாகும். இதனை பின்பற்றும் முன் மருத்துவ ஆலோசனை பெறுவது முக்கியம். இதனை ஜீ நியூஸ் (Zee Tamil News) உறுதிசெய்யவில்லை)
மேலும் படிக்க | வைட்டமின் ஈ அதிகமானால் ஆபத்து: பக்க விளைவுகளின் பட்டியல் இதோ
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ