America Tax System Updates: அமெரிக்கா அதிபர் டொனால்ட் ட்ரம்ப் பதவி ஏற்ற பிறகு பல்வேறு அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். அந்த வகையிலே தற்போது மிக முக்கிய முடிவாக இனி வருமான வரியே கிடையாது என்ற அதிரடி அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார். அதாவது இன்கம் டாக்ஸ் என்று அழைக்கப்படுகின்ற வருமான வரி இனி கிடையாது என்ற வகையில் அவர் தெரிவிக்கிறார். அதுக்குறித்து விவரங்களை பார்ப்போம்.
அமெரிக்கா வருமான வரி முறை
அமெரிக்காவில் இந்தியாவை போலவே ஏழு வரி விகிதங்களில் வருமான செலுத்தப்படுகிறது. 1913 ஆம் ஆண்டிலிருந்து வருமான வரி அமெரிக்காவிலே வசூலிக்கப்பட்டு வருகிறது. தற்போது 112 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு வரலாற்று முடிவை எடுத்திருக்கிறார் அதிபர் டொனால்ட் ட்ரம்ப்.
இனி அமெரிக்கர்கள் வருமான வரி யாரும் கட்ட வேண்டாம். வருமான வரியை ரத்து செய்யப் போகிறேன் என்று அறிவித்திருக்கிறார். விரைவில் அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு அரசாணையாக வெளியிட இருக்கிறார்.
அமெரிக்கா அதிபர் டொனால்ட் ட்ரம்ப் பேசியது
திங்களன்று (ஜனவரி 27) புளோரிடாவில் நடந்த ஒரு நிகழ்வில் குடியரசுக் கட்சியினருக்கு ஆற்றிய உரையின் போது, டொனால்ட் டிரம்ப் அதிக வரிகளை விதிக்கும் நாடுகளின் பட்டியலில் இந்தியா மற்றும் சீனாவை பட்டியலிட்டார். மேலும் அமெரிக்காவிற்கு "தீங்கு விளைவிக்கும்" நாடுகளுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். அதாவது நமக்கு (அமெரிக்கா) தீங்கு விளைவிக்கும் "வெளி நாடுகள் மீதும் அதிக வரிகளை விதிக்கப் போகிறோம் என்று டொனால்ட் டிரம்ப் தனது உரையில் குறிப்பிட்டார்.
மேலும் ஏழு வரி விகிதங்கள் மூலம் நாட்டு மக்களிடம் வருமான வரி வசூலிக்காமல், நம் பொருளாதார வளர்ச்சிக்கு தங்கள் ஊதியத்தை செலவிட வேண்டும் எனக் கோரிக்கை வைக்கிறேன். அதாவது அமெரிக்கர்கள் வருமானவரி கட்ட வேண்டாம். உங்கள் வருமானத்தை முழுமையாக பெற்றுக்கொண்டு, நாட்டில் உள்ள பொருட்களை வாங்குவதற்கு நீங்கள் உங்கள் பணத்தை செலவிடுங்கள்.
இறக்குமதி வரி உயர்த்தப்படும்?
வருமான வரி ரத்து செயப்படுவதன் மூலம் ஏற்படும் வருமான இழப்பை சரி செய்வதற்கு வெளிநாட்டு பொருட்கள் மீதான இறக்குமதி வரியை உயர்த்த போகிறேன். அதன்மூலம் வருகின்ற வரியை வைத்து வருமான வரியின் மூலமே ஏற்படுகின்ற இழப்பை சரி செய்வேன் என்ற வகையில் பேசியிருக்கிறார்.
வருமான வரியே கிடையாது என்பது ஒரு அதிரடி அறிவிப்பாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால் பல நாடுகளில் வருமான வரி மிக முக்கியமான வருவாய் ஆக இருக்கிறது.
அமெரிக்காவிலும் கூட கிட்டத்தட்ட 40% வருவாய் என்பது இன்டிவிஜுவல் டாக்ஸ் மூலம் கிடைக்கிறது. அதில் ஒரு பங்காக வருமான வரி மூலம் வருமாய் வருவதாக கூறப்படுகிறது. இந்த சூழ்நிலையில் வருமான வரி கிடையாது. நீங்கள் வருமான வரி கட்ட வேண்டாம் என அமெரிக்கா அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கூறியிருப்பது, அந்நாட்டு மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
இறக்குமதி வரியால் எந்த நாடு பாதிக்கப்படும்?
எந்தெந்த நாடுகளுக்கு இறக்குமதி வரியை கனடா உயர்த்தப்போகிறார் எனப் பார்த்தால், கனடா, மெக்ஸிகோ உள்ளிட்ட பல நாடுகளுக்கு கிட்டத்தட்ட 25% இறக்குமதி வரி விதிக்கப்போவதாக கூறியுள்ளார். தற்போது அங்கு 1%, 2% இறக்குமதி வரி இருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது. இதன்மூலம் குறிப்பாக மெக்ஸிகோவும் கனடாவும் தான் கடுமையான விளைவினை சந்திக்கப் போகிறது.
இறக்குமதி வரி 25 சதவீதம் என வந்துவிட்டால், மெக்ஸிகோவிலும் கனடாவிலும் பொருளாதார தேக்க நிலை உருவாகக்கூடிய பொருளாதார அவசர நிலை ஏற்படக்கூடிய சூழல் இருக்கிறது. எனவே இறக்குமதி வரியை உயர்த்தக்கூடாது என்ற வகையிலே பல்வேறு தூதர்கள், அதிகாரிகள் மூலமாக ட்ரம்பை சமாதானப்படுத்த முயற்சி செய்து வருகிறார்கள். ஆனால் ட்ரம்ப் திட்டவட்டமாக இருக்கிறார்.
கனடா, மெக்ஸிகோ உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு இறக்குமதி வரியை உயர்த்த போவதாக கூறியிருக்கிறார். இந்தியா மற்றும் சீனாவும் அதிலே அடங்கும். ஆனால் இந்தியா, சீனாவுக்கு தற்போதைக்கு இறக்குமதி வரி உயர்வு குறித்து எந்தவித தகவலும் இல்லை. ஆனால் விரைவில் அதற்கான அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.
நீங்கள் (உலக நாடுகள்) வரிகளை அல்லது கட்டணங்களை செலுத்துவதில் விருப்பம் இல்லை என்றால், இங்கேயே அமெரிக்காவில் உங்கள் ஆலையை கட்ட வேண்டும். அதுதான் சாதனை அளவில் நடக்கப் போகிறது. உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்போகிறோம் என்று அவர் கூறினார்.
இனி வொர்க் பிரம் ஹோம் கிடையாது
அதேநேரம் மற்றொரு மிக முக்கியமான அறிவிப்பாக வொர்க் பிரம் ஹோம் (Work From Home) முறையே முற்றிலுமாக ஒழிக்க போகிறேன் இனிமேல் ஏறும் வீட்டிலிருந்து வேலை செய்யக்கூடாது. அனைவரும் அலுவலகத்திற்கு வரவேண்டும்.
அரசு பணியாளர்களுக்கு எச்சரிக்கை
அதேபோல தேவையற்ற அரசு பணியாளர்களை வீட்டுக்கு அனுப்பவும் திட்டமிட்டிருக்கிறேன். அதற்காகத் தான் டிபார்ட்மெண்ட் ஆஃப் எபிசியன்சி செயல் திறன் என்ற ஒரு செயலாக்க துறையை உருவாக்கி இருக்கிறோம். இலான் மஸ்க் தலைமையிலே அது செயல்பட்டு வருகிறது எனவும் கூறியுள்ளார்.
அதே போன்று பெடரல் ஒர்க்கர்ஸ் பாதுகாப்பு என்ற சேஃப்டி ஆஃப் பெடரல் ஒர்க்கர்ஸ் என்று தனியாக இருந்த பாதுகாப்பு உரிமைகள் எல்லாம் ரத்து செய்யப்போகிறேன் என்று கூறி அரசு ஊழியர்கள் மத்தியிலே ஒரு பயத்தை ஏற்படுத்தி இருக்கிறார்.
மேலும் படிக்க - அமெரிக்கா வாழ் இந்தியர்கள் அச்சம்! கொலம்பியாவை அடுத்து இந்தியா? ட்ரம்ப் ஆடும் ஆட்டம்
மேலும் படிக்க - VIDEO: டான்ஸ் ஆடிய டிரம்ப்! பதவியேற்பு விழாவில் எலான் மஸ்க் செய்கையால் சர்ச்சை!
மேலும் படிக்க - H 1B விசா டிரம்ப் அதிரடி: இந்தியர்களுக்கு பாதகமா? சாதகமா? முழு விபரம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ