Systematic Withdrawal Plan: பென்ஷன் இல்லாதவர்கள், ஓய்வு பெற்ற பிறகு வழக்கமான வருமானம் கிடைக்க ஏதுவாக திட்டமிட்டு முதலீடு செய்தல் அவசியம். இதற்கு பரஸ்பர நிதியம் என்னும் மியூச்சுவல் ஃபண்டின் முறையான திரும்பப் பெறுதல் திட்டம் (SWP) நல்ல தேர்வாக இருக்கும். முறையான முதலீட்டுத் திட்டத்தின் (SIP) மூலம் பரஸ்பர நிதியத்தில் முதலீடு செய்து பெரிய அளவில் கார்பஸைக் குவிப்பதற்கு உதவுவது போலவே, SWP திட்டத்தை சரியாகப் பயன்படுத்தினால், வழக்கமான வருமானம் கிடைக்கும் அதே நேரத்தில், உங்கள் முதலீட்டின் மதிப்பும் பெருகிக் கொண்டே இருக்கும்.
SWP திட்டம் என்றால் என்ன?
முறையான திரும்பப் பெறுதல் திட்டம் (SWP) என்பது ஒரு பரஸ்பர நிதித் திட்டமாகும். இதில் நீங்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் உங்கள் கார்பஸிலிருந்து ஒரு நிலையான தொகையை எடுக்கலாம். அதேசமயம் மீதமுள்ள முதலீட்டின் மீதான வருமானம் மூலம் அதன் மதிப்பும் தொடர்ந்து அதிகரித்து கொண்டே இருகும். இதை SIP திட்டத்தின் தலைகீழ் பதிப்பு என்றும் அழைக்கலாம். SIP மூலம் நீங்கள் குறிப்பிட்ட இடைவெளியில் பரஸ்பர நிதியத்தில் பணத்தை டெபாசிட் செய்யும் நிலையில், SWP மூலம் உங்கள் முதலீட்டின் ஒரு பகுதியை திரும்ப பெறுவதன் மூலம் வழக்கமான வருமானத்தைப் பெறலாம்.
ஓய்வுக்குப் பிறகு, எஸ்ஐபி முதலீட்டை தொடர முடியாத நிலையில், முதலீடு செய்வதை நிறுத்தி விட்டு, தங்கள் நிதித் தேவைகளைப் பூர்த்தி செய்யும் அதே வேளையில், அதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக பணத்தை திரும்ப பெறலாம். அதே சமயத்தில் மீதமுள்ள முதலீட்டுப் பகுதியின் மூலதன மதிப்பீடும் தொடர்ந்து வளர்ந்து கொண்டே இருக்கும்.
SWP மூலம் மாத வருமானம் பெறுவது எப்படி?
முறையான திரும்பப் பெறுதல் திட்டத்தின் (SWP) மூலோபாயத்தின் மூலம் வழக்கமான வருமானம் மற்றும் நிதி மதிப்பில் அதிகரிப்பு ஆகிய இரண்டையும் ஒரே நேரத்தில் எவ்வாறு செய்யலாம் என்பதை ஒரு உதாரணத்தின் உதவியுடன் புரிந்து கொள்ளலாம்.
ஓய்வூதியத்தின் போது உங்களிடம் ரூ. 60 லட்சம் இருந்தால், ஒவ்வொரு மாதமும் ரூ. 50,000 வருமானத்துடன் உங்கள் மூலதனத்தை எவ்வாறு வளர்த்துக்கொள்ளலாம் என்பதற்கான கணக்கீடு இங்கே கொடுக்கப்பட்டுள்ளது:
SWP திட்டத்தில் மொத்த முதலீடு: ரூ 60 லட்சம்
SWP திட்டம் மூலம் ஒவ்வொரு மாதமும் திரும்பப் பெறும் தொகை: ரூ 50 ஆயிரம்
SWP திட்ட காலம்: 20 ஆண்டுகள்
மதிப்பிடப்பட்ட வருடாந்திர வருவாய்: 12%
20 ஆண்டுகளில் SWP மூலம் கிடைக்கும் மொத்த வருவாய்: ரூ. 2.14 கோடி
20 ஆண்டுகளில் SWP திட்டம் மூலம் முதலீட்டிலிருந்து ஒவ்வொரு மாதமும் எடுக்கப்பட்ட மொத்தத் தொகை: ரூ. 1.20 கோடி
20 ஆண்டுகள் திரும்பப் பெற்ற பிறகு மீதமுள்ள நிதியின் மதிப்பு: ரூ. 1.54 கோடி
SWP திட்டத்தில் ரூ.60 லட்சம் முதலீட்டில் 12% ஆண்டு வருமானம் பெற்று, 20 ஆண்டுகளுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ.50 ஆயிரத்தைத் திரும்பப் பெற்றுக் கொண்டே இருந்தால் கூட, மீதமுள்ள முதலீட்டின் மீதான மூலதன மதிப்பீட்டின் காரணமாக, உங்களது நிதி தொடர்ந்து வளர்ந்து வருவதை புரிந்து கொள்ளலாம் . 20 ஆண்டுகளுக்குப் பிறகு நிதி ரூ.60. லட்சத்தில் இருந்து ரூ.1.54 கோடியாக அதிகரித்துள்ளது. இந்தக் கணக்கீடு 12% வருடாந்திர வருமானத்தை அடிப்படையாகக் கொண்டது என்பதை நினைவில் கொள்ளவும். உண்மையில் கிடைக்கும் வருமானம் இதை விட அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இருக்கலாம். இத்தகைய வருமானத்தைப் பெறுவதற்கான மிகவும் பிரபலமான வழி ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்வதாகும்.
பல்வேறு வகையான பரஸ்பர நிதிகளில் முறையான திரும்பப் பெறுதல் திட்டத்தை (SWP) செயல்படுத்தலாம். ஆனால் ஒரு முடிவை எடுப்பதற்கு முன், அந்த நிதியின் சாத்தியமான வருமானத்தை மதிப்பிடுவது மற்றும் அதனுடன் தொடர்புடைய அபாயங்களைப் புரிந்துகொள்வது முக்கியம். கடந்த 10 ஆண்டுகளில் அதன் விவரங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.
பரஸ்பர நிதிகளின் வகைகள் மற்றும் ஆண்டு வருமானம்
மிட் கேப் நிதிகளின் 10 ஆண்டு சராசரி ஆண்டு வருமானம்: 14.84%
மதிப்பு சார்ந்த நிதிகளின் 10 ஆண்டு சராசரி ஆண்டு வருமானம்: 13.32%
பெரிய மற்றும் மிட் கேப் நிதிகளின் 10 ஆண்டு சராசரி ஆண்டு வருமானம்: 12.90%
ELSS நிதிகளின் 10 ஆண்டு சராசரி ஆண்டு வருமானம்: 12.27%
ஃப்ளெக்ஸி கேப் ஃபண்டுகளின் 10 ஆண்டு சராசரி ஆண்டு வருமானம்: 11.83%
(ஆதாரம்: Value Research)
ஆபத்து மற்றும் வருவாய் இரண்டையும் கருத்தில் கொள்ள வேண்டும்
SWP உத்தியைப் பின்பற்றுவதற்கு முன், நீங்கள் முதலீடு செய்ய விரும்பும் பரஸ்பர நிதியத்தின் சாத்தியமான வருமானம் மற்றும் அபாயங்களை மதிப்பிடுவது முக்கியம். அதாவது, உங்கள் முதலீட்டு நோக்கம் மற்றும் ரிஸ்க எடுக்கும் திறனுக்கு ஏற்ப நிதியின் வகை மற்றும் திட்டத்தை நீங்கள் தேர்வு செய்யலாம்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையின் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே தவிர, முதலீட்டு ஆலோசனைகளை வழங்குவது அல்ல. பரஸ்பர நிதியம் என்னும் மியூச்சுவல் ஃபண்டின் கடந்தகால வருமானம், எதிர்காலத்திலும் தொடரும் என்பதற்கு உத்தரவாதம் இல்லை. SEBI அங்கீகரிக்கப்பட்ட முதலீட்டு ஆலோசகரை அணுகி ஆலோசித்த பின்னரே முதலீடு தொடர்பான முடிவுகள் எடுக்கப்பட வேண்டும்.)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ