8th Pay Commission: மத்திய அரசு,10 வருடங்களுக்கும் ஒரு முறை, புதிய சம்பள கமிஷனை ஏற்படுத்தும் பாரம்பரியத்தை கடைபிடிக்கும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை, 1.2 கோடிக்கும் மேற்பட்ட மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியத்தை திருத்தும் 8வது ஊதிய குழுவை அமைக்க, மத்திய அரசு ஜனவரி மாதம் ஒப்புதல் அளித்தது. அதேபோல், கடந்த 2014ம் ஆண்டில் மத்திய அரசு 7வது சம்பள கமிஷனை அமைத்து 2016ம் ஆண்டில் அதனை அமல்படுத்தியது.
புதிய ஊதிய கமிஷனுக்கான ஒப்புதலைத் தொடர்ந்து, ஒரு கோடிக்கும் மேற்பட்ட மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் ஊதிய திருத்தங்களுக்காக ஆவலுடன் காத்திருக்கிறார்கள். மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் 8வது ஊதிய கமிஷன் மூலம் எப்போது, எப்படி சம்பள திருத்தங்களை எதிர்பார்க்கலாம் என்பதை இந்த பதிவில் அறிந்து கொள்ளலாம்.
8வது ஊதியக் குழு: 92%-186% ஊதிய உயர்வு
புதிய ஊதியக் குழு 1.92 முதல் 2.86 வரையிலான ஃபிட்மென்ட் காரணியைக் கருத்தில் கொள்ளலாம் என்றும், 1.92, 2, 2.08 மற்றும் 2.86 ஆகியவை நிபுணர்களிடையே விருப்பமான தேர்வாக இருக்கும் என்றும் பல நிபுணர்கள் கணித்துள்ளனர். இந்த ஃபிட்மென்ட் காரணிகளைக் கருத்தில் கொண்டால், ஊதியத் திருத்தங்கள் 92%-186% வரை இருக்கலாம்
8வது ஊதியக் குழுவின் கீழ் சாத்தியமான சம்பள உயர்வு கணக்கீடு கீழே கொடுக்கப்பட்டுள்ளது:
ஃபிட்மென்ட் காரணி | குறைந்தபட்ச அடிப்படை சம்பளம் | குறைந்தபட்ச அடிப்படை ஓய்வூதியம் |
1.92 | ரூ.34,560 | ரூ.17,280 |
2 | ரூ.36,000 | ரூ.18,000 |
2.08 | ரூ.37,440 | ரூ.18,720 |
2.86 | ரூ.51,480 | ரூ.25,740 |
7வது சம்பளக் குழுவின் கீழ் குறைந்தபட்ட ஊதியம், ஓய்வூதியம்
தற்போது, 7வது சம்பளக் குழுவின் கீழ் மத்திய அரசு ஊழியர்களுக்கான குறைந்தபட்ச அடிப்படை சம்பளம் 18,000 ஆகவும், ஓய்வூதியதாரர்களுக்கான குறைந்தபட்ச அடிப்படை ஓய்வூதியம் 9,000 ஆகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | PM Kisan: 19வது தவணை யாருக்கு கிடைக்கும், யாருக்கு கிடைக்காது? செக் செய்வது எப்படி?
புதிய சம்பளக் குழு எப்போது அமல்படுத்தப்படும்?
புதிய சம்பளக் குழு 2025-26 நிதியாண்டின் ஒரு பகுதியாக 2025 ஏப்ரல் மாதத்தில் தனது பணியைத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று பல ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. மேலும், ஊதிய கமிஷனின் அறிக்கை நவம்பர் 30 ஆம் தேதிக்குள் இறுதி செய்யப்படும் என்றும், மத்திய அரசாங்கம் அதை டிசம்பரில் மேலும் பரிசீலிப்பதற்காக மதிப்பாய்வு செய்யும் எனவும் தகவல்கள் கூறுகின்றன. மேலும் புதிய சம்பளக் குழுவை 2026 ஜனவரி மாதத்தில் அமல்படுத்தும் வாய்ப்பு உள்ளது எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
7வது சம்பள கமிஷன்
7வது சம்பள கமிஷனின் காலம் டிசம்பர் 31, 2025 அன்று முடிவடைகிறது. 7வது சம்பள கமிஷன் 2014 பிப்ரவரியில் UPA அரசாங்கத்தால் உருவாக்கப்பட்டது. ஆனால் அதன் பரிந்துரைகள் 2016 ஜனவரி மாதம் பாஜக தலைமையிலான NDA அரசாங்கம் ஆட்சிக்கு வந்தபோது செயல்படுத்தப்பட்டன. 4வது, 5வது மற்றும் 6வது ஊதியக் குழுக்களும் 10 ஆண்டு சுழற்சியில் அமைக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
பொறுப்பு துறப்பு: இந்த பதிவு தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதன் 8வது ஊதியக்குழுவின் மூலம் கிடைக்கக்கூடிய ஊதிய உயர்வு அல்லது ஓய்வூதிய உயர்வுக்கு எந்தவித உத்தரவாதமும் அளிக்கப்படவில்லை. சமீபத்திய மற்றும் துல்லியமான தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அரசாங்க தளங்களை அணுக பரிந்துரைக்கப்படுகிறது.
மேலும் படிக்க | தமிழ்நாடு விவசாயிகளுக்கு குட் நியூஸ் -பயிர் காப்பீடு அறிவிப்பு
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ