Today Rasipalan: இன்று பிப்ரவரி 18ம் தேதி மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம் மற்றும் மீனம் ஆகிய ராசிகளின் தினசரி ஜாதகத்தை தெரிந்து கொள்ளுங்கள்.
விலகிச் சென்றவர்கள் விரும்பி வருவதற்கான சூழ்நிலைகள் அமையும். மனதில் புதுவிதமான சிந்தனைகள் உருவாகும். தந்தைவழி உறவுகள் ஆதரவாக இருப்பார்கள். தம்பதிகளிடையே அன்னியோன்யம் அதிகரிக்கும். பிரபலமானவர்களின் ஆறுதலும், நட்பும் கிடைக்கும். தவறிய சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். மகிழ்ச்சி நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை : மேற்கு அதிர்ஷ்ட எண் : 8 அதிர்ஷ்ட நிறம் : இளநீல நிறம் அஸ்வினி : சிந்தனைகள் மேம்படும். பரணி : அன்னியோன்யம் அதிகரிக்கும். கிருத்திகை : வாய்ப்புகள் கிடைக்கும்.
போட்டித் தேர்வுகளில் சாதகமான முடிவுகள் உண்டாகும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். கடன் பிரச்சனைகள் குறையும். இழுபறியில் இருந்துவந்த காரியங்கள் முடிவுக்கு வரும். எதிர்பாராத தனவரவுகள் ஏற்படும். மனதளவில் சில முடிவுகளை எடுப்பீர்கள். குடும்பத்தில் சந்தோஷம் உண்டாகும். வெற்றி நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை : வடக்கு அதிர்ஷ்ட எண் : 6 அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம் கிருத்திகை : சாதகமான நாள். ரோகிணி : பிரச்சனைகள் குறையும். மிருகசீரிஷம் : வரவுகள் கிடைக்கும்.
மனதில் புதுவிதமான மாற்றங்கள் ஏற்படும். உறவினர்களின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். உயர் கல்வி விஷயங்களில் ஆலோசனைகள் கிடைக்கும். திறமைக்கேற்ப பாராட்டுகளும், அங்கீகாரங்களும் கிடைக்கும். ஆன்மிகம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். குழந்தைகளின் வழியில் மகிழ்ச்சி உண்டாகும். உயர்வு நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு அதிர்ஷ்ட எண் : 5 அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம் மிருகசீரிஷம் : மாற்றமான நாள். திருவாதிரை : ஆலோசனைகள் கிடைக்கும். புனர்பூசம் : மகிழ்ச்சியான நாள்.
தரும காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். சிந்தனை போக்கில் மாற்றம் ஏற்படும். பயனற்ற பேச்சுக்களை குறைத்து கொள்ளவும். விலை உயர்ந்த பொருட்களில் கவனம் வேண்டும். பெற்றோர்கள் இடத்தில் அனுசரித்துச் செல்லவும். செயல்பாடுகளில் சில மாற்றம் உண்டாகும். உடன் இருப்பவர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். தனவருவாயில் ஏற்ற, இறக்கம் உண்டாகும். அனுபவம் மேம்படும் நாள். அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு அதிர்ஷ்ட எண் : 6 அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம் புனர்பூசம் : மாற்றம் ஏற்படும். பூசம் : பொருட்களில் கவனம் ஆயில்யம் : ஏற்ற,இறக்கமான நாள்.
அக்கம், பக்கம் இருப்பவர்களின் ஒத்துழைப்புகள் மேம்படும். உடலில் ஒருவிதமான சோர்வுகள் மூலம் சுறுசுறுப்பின்மை உண்டாகும். உறவினர்களின் வருகை ஏற்படும். எதையும் சமாளிக்கும் பக்குவம் உண்டாகும். பேச்சுக்களில் அனுபவ அறிவு வெளிப்படும். வர்த்தக பணிகளில் லாபகரமான சூழல்கள் அமையும். மாணவர்களுக்கு உயர்கல்வி தொடர்பான ஆலோசனைகள் கிடைக்கும். ஆதரவு மேம்படும் நாள். அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு அதிர்ஷ்ட எண் : 3 அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம் மகம் : ஒத்துழைப்பான நாள். பூரம் : பக்குவம் பிறக்கும். உத்திரம் : ஆலோசனைகள் கிடைக்கும்.
இழுபறியான வரவுகள் கிடைக்கும். புதிய வேலை சார்ந்த முயற்சிகள் ஈடேறும். மற்றவர்களுக்கு தேவையான பணிகளை செய்து முடிப்பீர்கள். புதிய செயல் திட்டங்களை அமைப்பீர்கள். சோர்வு நீங்கி சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். எதிர்ப்புகளை வெற்றி கொள்வீர்கள். உணர்வுப்பூர்வமாக பேசுவதை குறைத்துக் கொண்டு சூழ்நிலை அறிந்து செயல்படவும். அன்பு மேம்படும் நாள். அதிர்ஷ்ட திசை : தெற்கு அதிர்ஷ்ட எண் : 7 அதிர்ஷ்ட நிறம் : காவி நிறம் உத்திரம் : வரவுகள் கிடைக்கும். அஸ்தம் : சுறுசுறுப்பான நாள். சித்திரை : பேச்சுக்களில் கவனம்.
நீண்ட நாள் எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். செலவுகளை கட்டுப்படுத்த முயற்சிக்கவும். திருமண பேச்சுவார்த்தை சாதகமாக முடியும். உத்தியோகத்தில் மாற்றமான சூழல் நிலவும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். மறைமுக பிரச்சனைகள் குறையும். கூட்டாளிகள் பற்றிய புரிதல் அதிகரிக்கும். ஊக்கம் நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு அதிர்ஷ்ட எண் : 8 அதிர்ஷ்ட நிறம் : இளநீல நிறம் சித்திரை : எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். சுவாதி : மாற்றமான நாள் விசாகம் : புரிதல் அதிகரிக்கும்.
பேச்சுக்களில் அனுபவ அறிவு வெளிப்படும். சமூக பணிகளில் ஈடுபாடுகள் உண்டாகும். வியாபார முதலீடுகளில் கவனம் வேண்டும். செயல்பாடுகளில் சுதந்திர தன்மை மேம்படும். ஆடம்பரமான விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். புதுவிதமான கண்ணோட்டங்கள் பிறக்கும். எதிர்பாராத சில பயணங்கள் மூலம் அலைச்சல் அதிகரிக்கும். நன்மை நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை : தெற்கு அதிர்ஷ்ட எண் : 3 அதிர்ஷ்ட நிறம் : இளம்மஞ்சள் நிறம் விசாகம் : அனுபவம் வெளிப்படும். அனுஷம் : ஆர்வம் அதிகரிக்கும். கேட்டை : அலைச்சல் அதிகரிக்கும்.
வியாபாரம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். மறைமுக எதிர்ப்புகளை வெற்றி கொள்வீர்கள். பலம் மற்றும் பலவீனங்கள் பற்றி புரிந்து கொள்வதற்கான சூழ்நிலைகள் உண்டாகும். எண்ணிய சில பணிகள் திட்டமிட்ட விதத்தில் நிறைவுபெறும். உத்தியோகம் சார்ந்த பணிகளில் சாதகமான சூழ்நிலைகள் உண்டாகும். பக்தி நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு அதிர்ஷ்ட எண் : 5 அதிர்ஷ்ட நிறம் : இளம்ஆரஞ்சு நிறம் மூலம் : சிந்தனைகள் அதிகரிக்கும். பூராடம் : புரிதல் உண்டாகும். உத்திராடம் : சாதகமான நாள்.
பொதுக்காரியங்களில் ஈடுபாடு ஏற்படும். தொழில் சம்பந்தமாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். அரசு வழியில் எதிர்பார்க்கும் கடன் உதவி கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். நிலுவையில் இருந்துவந்த பணிகளை செய்து முடிப்பீர்கள். உடல் ஆரோக்கியம் மேம்படும். ஆக்கப்பூர்வமான நாள். அதிர்ஷ்ட திசை : வடக்கு அதிர்ஷ்ட எண் : 4 அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம் உத்திராடம் : ஈடுபாடு அதிகரிக்கும். திருவோணம் : முன்னேற்றமான நாள். அவிட்டம் : ஆரோக்கியம் மேம்படும்.
நினைத்த காரியம் எண்ணிய விதத்தில் முடியும். உத்தியோகத்தில் உயர்வு உண்டாகும். ஜாமீன் விஷயங்களில் கவனம் வேண்டும். புதிய முயற்சிகளில் சிந்தித்துச் செயல்படவும். வேலைக்கான முயற்சிகள் ஈடேறும். மருத்துவத்துறையில் இருப்பவர்களுக்கு புதிய அனுபவம் உண்டாகும். உறவினர்களால் மதிப்புகள் மேம்படும். முயற்சி ஈடேறும் நாள். அதிர்ஷ்ட திசை : மேற்கு அதிர்ஷ்ட எண் : 8 அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம் அவிட்டம் : உயர்வு உண்டாகும். சதயம் : சிந்தித்துச் செயல்படவும். பூரட்டாதி : மதிப்புகள் மேம்படும்.
எதிர்காலம் பற்றிய சிந்தனைகள் இருக்கும். கவனக்குறைவால் சில விரயம் உண்டாகும். சந்தர்ப்ப சூழ்நிலைகள் அறிந்து செயல்படவும். வாழ்க்கைத்துணையுடன் அனுசரித்துச் செல்வது நல்லது. வீட்டு பராமரிப்பு செலவுகள் ஏற்படும். மற்றவர்களால் சில நெருக்கடியான சூழல் உண்டாகும். உத்தியோகத்தில் பொறுப்புகள் மேம்படும். சிந்தனை மேம்படும் நாள். அதிர்ஷ்ட திசை : தெற்கு அதிர்ஷ்ட எண் : 3 அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம் பூரட்டாதி : விரயம் உண்டாகும். உத்திரட்டாதி : அனுசரித்துச் செல்லவும். ரேவதி : பொறுப்புகள் மேம்படும்.