SIP அல்லது மொத்த முதலீடு... பரஸ்பர நிதியத்தில் பணத்தை அள்ள சிறந்த வழி எது?

பரஸ்பர நிதியம் என்னும் மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்ய விருபம்புபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதற்கான முக்கிய காரணம் அதில் கிடைக்கும் வருமானம். 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Feb 2, 2025, 01:38 PM IST
  • சந்தையில் குறைந்த ரிஸ்க் எடுக்கும் போது நல்ல வருமானத்தைப் பெற விரும்பினால், SIP சிறந்த தேர்வாக இருக்கும்.
  • பரஸ்பர நிதிய முதலீடுகளை இரண்டு வழிகளில் செய்யலாம்.
  • சந்தையைப் பற்றிய நல்ல புரிதல் இருந்தால் மட்டுமே பணத்தை மொத்தமாக முதலீடு செய்ய வேண்டும்.
SIP அல்லது மொத்த முதலீடு... பரஸ்பர நிதியத்தில் பணத்தை அள்ள சிறந்த வழி எது? title=

பரஸ்பர நிதியம் என்னும் மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்ய விருபம்புபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதற்கான முக்கிய காரணம் அதில் கிடைக்கும் வருமானம். பரஸ்பர நிதிய முதலீடுகளை இரண்டு வழிகளில் செய்யலாம். ஒன்று SIP மற்றும் மற்றொன்று Lumpsum என்னும் மொத்தமாக பணத்தை முதலீடு செய்தல். SIP திட்டம் மூலம் மாதம் தோறும் ஒரு நிலையான தொகையை முதலீடு செய்கிறீர்கள். அதேசமயம் மொத்த தொகையில் பணம் மொத்தமாக முதலீடு செய்யப்படுகிறது. எந்த முதலீட்டு முறையை நீங்கள் தேர்வு செய்ய வேண்டும், இது உங்களுக்கு அதிக லாபம் தரும்? அதைப் பற்றி இங்கே தெரிந்து கொள்ளலாம்.

எஸ்ஐபி முதலீடு

1. SIP முதலீடு, பரஸ்பர நிதிகளில் முதலீடு செய்வதற்கான மிகவும் பிரபலமான வழியாகும். SIP முதலீட்டின் மிகப்பெரிய நன்மை என்னவென்றால், உங்கள் வசதிக்கேற்ப ஒவ்வொரு மாதமும் ஒரு நிலையான தொகையை முதலீடு செய்யலாம். 500 ரூபாயிலும் ஆரம்பிக்கலாம்.

2. SIP முதலீட்டின் நன்மை என்னவென்றால், நீங்கள் அதில் நெகிழ்வுத்தன்மையைப் பெறுவீர்கள், அதாவது, உங்கள் வருமானத்திற்கு ஏற்ப காலப்போக்கில் அதில் முதலீட்டை அதிகரிக்கலாம் அல்லது குறைக்கலாம், தேவைப்பட்டால், நீங்கள் எப்போது வேண்டுமானாலும் பணத்தை எடுக்கலாம்.

3. எஸ்ஐபியில் நீண்ட காலத்திற்கு பணத்தை முதலீடு செய்து, வருமானம் அதிகரிக்கும் போது முதலீட்டை கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்துக் கொண்டே இருந்தால், தொடர் முதலீட்டின், எஸ்ஐபி மூலம் மிகப்பெரிய நிதியை உருவாக்க முடியும் என்று நிதி நிபுணர்கள் நம்புகின்றனர்.

இருப்பினும், SIP முதலீட்டின் உள்ள குறை  என்னவென்றால், சந்தையில் ஏற்படும் பெரிய வீழ்ச்சியின் பலனை பயன்படுத்திக் கொள்ள முடியாது. இது தவிர, நீங்கள் ஏதேனும் SIP தவணையை செலுத்த மறந்துவிட்டால், நீங்கள் அபராதம் செலுத்த வேண்டியிருக்கும்.

மேலும் படிக்க | பென்ஷன் இல்லை என்ற டென்ஷன் வேண்டாம்... மாத வருமானம் ரூ.50,000 கிடைக்க உதவும் SWP திட்டம்

லம்ப்சம் என்னும் மொத்த முதலீடு

மியூச்சுவல் ஃபண்டுகளில் மொத்தப் பணத்தை லம்ப்சம் மூலம் முதலீடு செய்யும் போது. மொத்த தொகையை முதலீடு செய்வதன் நன்மை என்னவென்றால், நீங்கள் சந்தை நிலவரத்தை மனதில் கொண்டு முதலீடு செய்யலாம் மற்றும் அதன் ஏற்ற தாழ்வுகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம். இதில் உங்களுக்கு எந்த விதமான அபராதமும் விதிக்கப்படாது. நீங்கள் ஒரு குறிப்பிட்ட தேதியில் தொடர்ந்து முதலீடு செய்யத் தேவையில்லை என்றாலும், உங்களிடம் மொத்தப் பணம் இருக்கும்போதெல்லாம், மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்யலாம்.

ஆனால், பெரிய மூலதனம் இருந்தால், சந்தையைப் பற்றிய நல்ல புரிதல் இருந்தால் மட்டுமே பணத்தை மொத்தமாக முதலீடு செய்ய வேண்டும் என்று நிதி நிபுணர்கள் நம்புகிறார்கள். இதில் ஒரு சிறிய தவறும் உங்களுக்கு தீங்கு விளைவிக்கும். ஆனால் நீங்கள் புதியவர் மற்றும் சந்தையில் குறைந்த ரிஸ்க் எடுக்கும் போது நல்ல வருமானத்தைப் பெற விரும்பினால், SIP சிறந்த தேர்வாக இருக்கும்.

(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையின் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே தவிர, முதலீட்டு ஆலோசனைகளை வழங்குவது அல்ல. பரஸ்பர நிதியம் என்னும் மியூச்சுவல் ஃபண்டின் கடந்தகால வருமானம், எதிர்காலத்திலும் தொடரும் என்பதற்கு உத்தரவாதம் இல்லை. SEBI அங்கீகரிக்கப்பட்ட முதலீட்டு ஆலோசகரை அணுகி ஆலோசித்த பின்னரே முதலீடு தொடர்பான முடிவுகள் எடுக்கப்பட வேண்டும்.)

மேலும் படிக்க | ஸ்விகி, சொமேட்டோ ஊழியர்களுக்கு இலவச இன்சூரன்ஸ் - நிர்மலா சீதாராமன் சர்பிரைஸ் அறிவிப்பு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News