2025-26ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நிலையில், நடுத்தர வர்க்கத்தினருக்கு மிகப் பெரிய ஜாக்பாட் பரிசு குறித்த அறிவிப்பு பட்ஜெட்டில் வெளியானது.
புதிய வரி முறையின் கீழ், ஆண்டும் வருமானம் ரூ.12 லட்சம் வரை வரி இல்லை. புதிய வரிமுறையின் கீழ் வழங்கப்படும் நிலையான விலக்கான ரூ.75,000 என்ற அளவையும் கணக்கில் கொண்டால் ரூ. 12.75 லட்சம் வரை வருமானத்திற்கு, வரி விலக்கு அளிக்கப்படுகிறது.
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், நேற்று தாக்க செய்த பட்ஜெட்டில், கடைசி பந்தில் சிக்ஸர் அடித்தத்தை போல, வருமான வரிச் சட்டத்தின் 87A பிரிவின் கீழ் புதிய வரி ஆட்சியில் ரூ.12 லட்சம் வரையிலான வருமானத்தை அரசாங்கம் வரி விலக்கு அளிப்பதாக அறிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு ஜூலை மாதம் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டின் போது, புதிய வரி முறையின் கீழ், நிலையான விலக்கு ரூ.50 ஆயிரத்தில் இருந்து ரூ.75,000 ஆக உயர்த்தப்பட்டது. இந்நிலையில், ஆண்டு வருமானம் ரூ.12.75 லட்சம் ரூபாய் வரை வருமான வரி செலுத்த வேண்டியதில்லை. இதற்கு வரிச்சலுகை அளிக்கப்பட்டுள்ளது.
ஆண்டுக்கு ரூ.12.75 லட்சத்திற்கு அதிகமாக சம்பாதிப்பவர்களுக்கு புதிய வரி அடுக்குகள் பொருந்தும். ஆண்டு வருமானம் ரூ.12.75 லட்சத்தைத் தாண்டினால், புதிய வரி முறை அடுக்குகளின் அடிப்படையில் வரிகள் கணக்கிடப்படும்.
புதிய வரி முறையின் கீழ், முன்னதாக, ஆண்டுக்கு 7,00,000 ரூபாய் வரை வருமானம் ஈட்டும் தனிநபர்களுக்கு பூஜ்ஜியம் வரி என அறிவித்திருந்தது. இந்த பட்ஜெட்டில், பிரிவு 115BAC(1A) விதியின் கீழ் வரி செலுத்துவோருக்கு பிரிவு 87A பிரிவின் கீழ் வருமான வரி சலுகைக்கான வருமான வரம்பு ரூ.7,00,000 லிருந்து ரூ.12,00,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
புதிய வரி முறையில், ஆண்டு வருமானம் ரூ.4 - ரூ.8 லட்சம் உள்ளவர்களுக்கான 5% வரியையும், ஆண்டு வருமானம் ரூ.8 - ரூ.12 லட்சம் உள்ளவர்களுக்கான 10% வரியையும் அரசு தள்ளுபடி செய்யும். அதாவது ரூ.12 லட்சம் வரை வருமானம் ஈட்டுபவர்களுக்கு ரூ.80 ஆயிரம் வரை வரி மிச்சமாகும்.
புதிய வரி முறையில், ஆண்டு வருமானம் ரூ.4 - ரூ.8 லட்சம் உள்ளவர்களுக்கான 5% வரியையும், ஆண்டு வருமானம் ரூ.8- ரூ.12 லட்சம் உள்ளவர்களுக்கான 10% வரியையும் அரசு தள்ளுபடி செய்யும். அதாவது ரூ.12 லட்சம் வரை வருமானம் ஈட்டுபவர்களுக்கு ரூ.80 ஆயிரம் வரை வரி மிச்சமாகும்.
புதிய வரி முறையை அதிக அளவிலான மக்கள் பயன்படுத்தும் நோக்கில், அரசாங்கம் பெரிய வரிச் சலுகைகளை வழங்கியுள்ளது. புதிய வரி முறையில் நிலையான விலக்கு தவிர வேறு வருமான வரி விலக்கு எதுவும் கிடைக்காது. அதேசமயம், பழைய வரி முறையில், வீட்டுக் கடனுக்கான வட்டி தொகை, சுகாதார காப்பீடு, EPF, PPF , ஈக்விட்டியுடன் இணைக்கப்பட்ட சேமிப்புத் திட்டம், NPS உள்ளிட்ட அரசில் பல திட்ட முதலீடுகளில் வருமான வரி விலக்கு அளிக்கப்படுகிறது.
புதிய வரி முறை மற்றும் பழைய வரி முறைகளுக்கு இடையே தேர்ந்தெடுப்பது ஒரு தனிநபரின் வருமானத்தை பொறுத்தது. எளிமையை விரும்புபவர்களுக்கும் குறைந்த முதலீடுகள் உள்ளவர்களுக்கும் புதிய வரி முறை மிகவும் பொருத்தமானதாக இருக்கும். மாறாக, வரிவிலக்குகளுக்கான சாத்தியம் அதிகம் உள்ள வரி செலுத்துவோருக்கு பழைய வரி முறை நன்மை பயக்கும்.