இந்த மாதம் வெளியாக இருக்கும் தமிழ் திரைப்படங்கள்.
இந்த ஆண்டு தொடக்கம் முதலே நல்ல படங்கள் வெளியாகி சினிமா ரசிகர்களை திருப்திபடுத்தி வருகின்றன. இந்நிலையில், பெங்களுக்கு ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அஜித்தின் விடமுயற்சி ரிலீஸ் ஆகாமல் தள்ளிப்போனது. இங்கு விடாமுயற்சி உட்பட ரசிகர்கள் மிகவும் எதிர்ப்பார்க்கப்பட்ட திரைப்படங்கள் இந்த மாதம் வெளியாக உள்ளன. அது குறித்து இங்கு பார்க்கலாம்.
நடிகர் அஜித் குமார், த்ரிஷா, அர்ஜுன் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடிப்பில் உருவாகிவுள்ள திரைப்படம் விடாமுயற்சி. பெங்களுக்கு வெளியாகும் என மிகவும் எதிர்ப்பார்க்கப்பட்ட இத்திரைப்படம் சில காரணங்களால் ரிலீஸ் ஆகவில்லை. இந்த நிலையில் இத்திரைப்படம் வரும் 6ஆம் தேதி வெளியாக உள்ளது.
இயக்குநர் ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணன் இயக்கத்தில் உருவான திரைப்படம் காதல் என்பது பொதுவுடைமை. தன்பாலின ஈர்ப்பாளர்களின் உணர்வுகளையும் காதலையும் எப்படி கையாள்கிறது என்பதை மையமாக கொண்டு இப்படம் உருவாகி உள்ளது. இம்மாத தொடக்கத்தில் வெளியாக இருந்த இப்படம் விடாமுயற்சி வெளியாவதால் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டது. இந்நிலையில், இத்திரைப்படம் காதலர் தினத்தன்று பிப்ரவரி 14ஆம் தேதி வெளியாக உள்ளது.
நடிகர் தனுஷ் இயக்கயத்தில் உருவாகிவுள்ள திரைப்படம் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம். இப்படத்தின் மூலம் தனுஷின் சகோதரி மகன் பவிஷ் ஹீரோவாக அறிமுகமாகிறார். இந்த படமும் இம்மாத முதல் வாரத்தில் வெளியாக இருந்தது. ஆனால் விடாமுயற்சி வெளியாவதால் இத்திரைப்படம் பிப்ரவரி 21ஆம் தேதி வெளியாக உள்ளது.
இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடித்துள்ள இத்திரைப்படத்தை அஸ்வத் மாரிமுத்து இயக்கி உள்ளார். இவர் ஓ மை கடவுளே படத்தை இயக்கியவர் ஆவார். இத்திரைப்படம் இம்மாதம் இறுதியில் வெளியாக வாய்ப்புள்ளது.
இயக்குனர் அறிவழகனின் இயக்கத்தில் உருவாகிவுள்ளது சப்தம் திரைப்படம். இத்திரைப்படத்தில் நடிகர் ஆதி நடித்துள்ளார். ஹாரர் திரில்லராக உருவாகிவுள்ள இப்படம் பிப்ரவரி 28ஆம் தேதி வெளியாக உள்ளது.
நடிகர் ஜெய், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் கோபி இயக்கத்தில் உருவாகிவுள்ள திரைப்படம் கருப்பர் நகரம். இத்திரைப்படம் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதமே வெளியாக இருந்தது. ஆனால் சில காரணங்களால் தள்ளிப்போன நிலையில், இம்மாதம் ரிலீஸ் ஆக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.