Daily Routine To Gain Success : மனிதர்கள் அனைவருக்குமே வாழ்வில் வெற்றி பெற வேண்டும், காதலை அடைய வேண்டும் கடைசியில் மன நிம்மதியை பெற வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால், இது அனைவருக்கும் கிடைத்து விடுகிறதா என்று கேட்டால் இல்லை என்ற பதில் தான் பெரும்பாலான சமயங்களில் வரும். இப்போதுள்ள இந்த வேகமான உலகத்தில் நமக்கு நின்று யோசிப்பதற்கும், உணர்ச்சிகளை கையாள்வதற்கும் நேரமே இருப்பதில்லை. எனவே, ஒரு விஷயத்தை கடந்து போக நினைக்காமல் அதை மறக்க மட்டுமே நினைக்கிறோம். இதனால் எங்கு தொடங்குகிறோமோ அங்கேயே மாட்டிக் கொண்டது போன்ற உணர்வு நமக்கு ஏற்படுகிறது. இதை வரவிடாமல் தடுத்துவிட்டாலே நம்மை தேடி வெற்றியும் காதலும் மன அமைதியும் வந்து சேரும். இதை இதை வாழ்வில் நுழைத்துக் கொள்ள நீங்கள் செய்ய வேண்டிய ஒரு வேலை இருக்கிறது. அதை தினமும் 10 முதல் 15 நிமிடம் செய்தால் கண்டிப்பாக நீங்கள் என்னைய விஷயங்கள் கையட்டும் தூரத்தில் இருக்கும். அது என்ன தெரியுமா?
உங்களைப் பற்றி நீங்கள் அறிதல்:
நம்மில் பெரும்பாலானோருக்கு, நம்மைப் பற்றிய பல விஷயங்கள் தெரியாமலேயே போய்விடுகிறது. வாழ்வில் இதை செய்ய வேண்டும் அதை செய்ய வேண்டும் என கனவு கோட்டை கட்டினாலும், நம்மிடம் இருக்கும் தவறுகளை சரி செய்யவில்லை என்றால் எதுவும் மாறாது. கேட்பதற்கு கசப்பாக இருந்தாலும், நிதர்சனத்தில் இதுதான் உண்மை. இப்படி நம்மைப் பற்றியே நாம் அறிந்து கொள்வதற்கு சரியான பயிற்சியாக இருப்பது ‘தன்னை அறிதல்’. இந்த பயிற்சியில் என்ன செய்ய வேண்டும்?
செய்ய வேண்டியவை:
தினமும் 10-15 நிமிடங்களை உங்களுக்காக நீங்கள் ஒதுக்க வேண்டும். அந்த நாள் முடிவடையும்போது உங்கள் சிந்தனை எப்படி இருக்கிறது, நீங்கள் எப்படி உணர்கிறீர்கள், நீங்கள் அந்த நாளில் செய்த விஷயங்கள் என்னென்ன என்பதை நினைவுகூர்ந்து பார்க்க வேண்டும். முடிந்தால் நாட்குறிப்பாக கூட இதை எழுதலாம்.
வெற்றிக்கு எப்படி உதவும்?
உங்களுக்கென்று ஒரு கனவு இருக்கிறது அல்லவா? அதை அடைய நீங்கள் தினந்தோறும் சில முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் அப்படி செய்தால் தான் ஒரு நாள் உங்களுக்கு வெற்றி கிட்டும் என்பது உங்களுக்கே தெரியும். அந்த முயற்சிகளை நீங்கள் தினமும் எடுக்கிறீர்களா இல்லையா என்பதை பின்னோக்கிப் பார்க்க இந்த பயிற்சி உதவும். அதேபோல நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் எது தவறாக இருக்கிறது? எது சரியாக இருக்கிறது? எது உங்களுக்கு ஒத்துப் போகும் வகையில் உள்ளது என்பதை பார்க்கவும் இந்த பயிற்சி உதவும். உங்கள் முயற்சியில் தெளிவு கிடைக்க வேண்டுமென்றால் இந்த பயிற்சியை எடுக்கலாம்.
காதல்:
காதல் அன்பு போன்ற விஷயங்களை பெற, நீங்கள் உங்கள் உணர்ச்சிகளுடன் ஒட்டுதலாக இருக்க வேண்டும் என்பது அவசியம். உங்களை நீங்கள் முதலில் நன்கு புரிந்து கொண்டால்தான், உங்களை சுற்றி இருப்பவர்களை நீங்கள் நன்றாக அறிய முடியும். அப்போதுதான் அவர்களிடமிருந்து அன்போ காதலோ உங்களுக்கு கிடைக்கும். அப்போதுதான் உங்கள் உணர்ச்சியுடன் பொருந்திய நபரையும் நீங்கள் சந்திக்க நேரும்.
மன அமைதி:
மன அமைதியை பெறுவதற்கு நம் மனது முதலில் எந்த சத்தமும் இல்லாமல் அமைதியாக இருக்க வேண்டியது அவசியம். இப்படி 10-15 நிமிடங்கள் நாம் நமக்குள் பேசிக்கொள்வது, நம்மைப் பற்றி சில விஷயங்களை கையாள்வது மன அழுத்தத்தை குறைத்து மனதில் ஓடிக் கொண்டிருக்கும் பிற குரல்களை அடக்கும்.
மேலும் படிக்க | 2025ல் ஆழமான மன அமைதியை பெற சிம்பிளான 7 பயிற்சிகள்!
மேலும் படிக்க | வெற்றி பெற நினைப்பவர்கள் ‘இந்த’ 7 விஷயங்களை தினமும் செய்ய வேண்டும்!!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ