மத்திய பட்ஜெட் மூலம் 136 கோடி மக்களுக்கு பட்டை நாமம் போட்டுள்ளார் நிர்மலா சீதாராமன் - மனோ தங்கராஜ்

Nirmala Sitharaman | மத்திய பட்ஜெட் மூலம் 136 கோடி உழைக்கும் மக்களுக்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்டை நாமம் போட்டிருப்பதாக திமுக முன்னாள் அமைச்சர் மனோ தங்கராஜ் காட்டமாக விமர்சித்துள்ளார். 

Written by - S.Karthikeyan | Last Updated : Feb 2, 2025, 01:29 PM IST
  • பட்ஜெட் மூலம் ஏழைகளுக்கு பட்டை நாமம்
  • பணக்காரர்களுக்கான பட்ஜெட் இது என விமர்சனம்
  • நிர்மலா சீதாராமனை விமர்சித்து மனோ தங்கராஜ் பதிவு
மத்திய பட்ஜெட் மூலம் 136 கோடி மக்களுக்கு பட்டை நாமம் போட்டுள்ளார் நிர்மலா சீதாராமன் - மனோ தங்கராஜ் title=

Nirmala Sitharaman, Mano Thangaraj | மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய பட்ஜெட் 2025 -ஐ சனிக்கிழமை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். வருமான வரி உச்ச வரம்பு உயர்வு, கிசான் கிரெடிட் கார்டு உச்ச வரம்பு உயர்வு உள்ளிட்ட பல அறிவிப்புகளை வெளியிட்டார். ஆனால் தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களுக்கு எந்த அறிவிப்பும் பட்ஜெட்டில் இடம்பெறவில்லை. அதேநேரத்தில் இந்த ஆண்டு இறுதியில் தேர்தல் நடக்கும் பீகார் மாநிலத்துக்கு 7க்கும் மேற்பட்ட அறிவிப்புகளை வெளியிட்டார். இந்த பட்ஜெட்டை முன்னாள் அமைச்சர் மனோ தங்கராஜ் கடுமையாக விமர்சித்துள்ளார். 136 கோடி உழைக்கும் மக்களுக்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்டை நாமம் போட்டிருப்பதாக காட்டமாக கூறியுள்ளார். 

இது தொடர்பாக தன்னுடைய எக்ஸ் தளத்தில் மனோ தங்கராஜ் வெளியிட்டிருக்கும் பதிவில், தனி நபர் மற்றும் நிறுவனங்கள் என இந்தியாவில் வருமான வரி வரம்பிற்கு உட்பட்டு வரி செலுத்துவோர் 8.6 கோடி பேர். அதில், மாதம் 1 லட்சம் சம்பாதிக்கும் மக்களுக்கு வரிச் சலுகை அளிக்கப்பட்டுள்ளது. வரி செலுத்த வாய்ப்புள்ளோருக்கு விலக்கு! பாராட்டுகள்! 

இந்திய மக்கள் தொகை 144 கோடி பேர். இந்த பட்ஜெட்டில் சாதாரண உழைப்பாளிகள், விவசாயிகள், சிறு வியாபாரிகள், சிறு-குறு தொழில் செய்வோர், முதியோர் என மீதமுள்ள 136 கோடி மக்களுக்கு என்ன பயன்? 

இவர்கள் சோப்பு சீப்பு முதல் பெட்ரோல் டீசல் வரை அனைத்திற்கும் வரி செலுத்துகின்றனர். வீட்டு வரி, சொத்து வரி, ஜிஎஸ்டி வரி, சுங்க வரி, முத்திரைத் தாள் வரி, சாலை வரி, என அடுக்கடுக்காக வரி செலுத்தப்படுகிறது. இவர்கள் பயன்பெறும் வகையில் என்ன அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது?

- பெட்ரோல் டீசல் நிறுவனங்கள் பல ஆயிரம் கோடி லாபம் ஈட்டுகின்றன. பெட்ரோல் டீசல் விலை குறைப்பு செய்யப்பட்டுள்ளதா?

- மக்கள் பணத்தில் போடப்பட்ட சாலைகளில் பயணிக்கும் வாகனங்களிடம் வசூலிக்கப்படும் டோல் கேட் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளதா?

- அரசு பேருந்துகளிடம் வசூலிக்கப்படும் டோல் கேட் கட்டணத்திற்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளதா?

- அரசின் சாலை மற்றும் கட்டமைப்பு பணிகளில் வசூலிக்கப்படும் 18% ஜிஎஸ்டி குறைக்கப்பட்டுள்ளதா?

- சாதாரண மக்கள் வாங்கும் இரு சக்கர வாகனங்களுக்கு வரிச்சலுகை அளிக்கப்பட்டுள்ளதா?

- சாதாரண மக்களிடம் மொபைல் ரீசார்ஜ்  கட்டணத்தில் வசூலிக்கப்படும் 18% ஜிஎஸ்டி குறைக்கப்பட்டுள்ளதா?

- சர்க்கரை நோயாளிகளுக்கான இன்சுலின், இதர மருந்துகள் மாற்றுத் திறனாளிகளுக்கான செயற்கை அவயங்களுக்கான ஜிஎஸ்டிக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளதா?

எதுவுமில்லை - இந்தியாவின் முதுகெலும்பான 136 கோடி சாதாரண மக்களுக்கு இது துளியும் பயனில்லாத பட்ஜெட" என தெரிவித்துள்ளார். 

அதேபோல், பீகார் மற்றும் டெல்லி சட்டமன்ற தேர்தலை மனதில் வைத்து மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டிருப்பதாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, கனிமொழி எம்பி, திருமாவளவன் உள்ளிட்ட தமிழ்நாட்டு தலைவர்கள் கடுமையாக விமர்சித்துள்ளனர். தமிழ்நாடு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்டிருக்கும் கண்டன பதிவில் தமிழ்நாட்டை மத்திய அரசு வேண்டுமென்றே புறக்கணிப்பதாக குற்றம்சாட்டியுள்ளார். சிறப்பாக செயல்படும் தமிழ்நாடு போன்ற மாநிலங்கள் தொடர்ச்சியாக புறக்கணிக்கப்படுவதாகவும், சரியாக செயல்படாத மாநிலங்கள் தொடர்ச்சியாக அதிக நிதி மற்றும் சலுகைகளை மத்திய அரசிடம் பெறுவதாகவும் குற்றம்சாட்டியுள்ளார். 

மேலும் படிங்க:தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளுக்கு 4 நாட்கள் விடுமுறை! மதுப்பிரியர்கள் அதிர்ச்சி!

மேலும் படிங்க: பட்ஜெட்டில் இருக்கும் பிரச்னைகள் என்னென்ன...? புட்டுபுட்டு வைத்த தவெக தலைவர் விஜய்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News