5 வருட சம்பளத்தை ஊழியர்களுக்கு போனஸாக வழங்கிய நிறுவனம்!

தைவானின் ஷிப்பிங் நிறுவனமான எவர்கிரீன் மெரைன் தனது நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு ஐந்து ஆண்டு சம்பளத்தை போனஸாக வழங்குவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.  

Written by - RK Spark | Last Updated : Mar 27, 2023, 01:42 PM IST
  • எவர்கிரீன் மரைன் தனது 3100 தொழிலாளர்களுக்கு பெரியளவில் போனஸ் வழங்குகிறது.
  • ஐந்து ஆண்டு சம்பளத்தை போனஸாக எவர்க்ரீன் நிறுவனம் வழங்குகிறது.
  • கடல்வழி வணிகத்தில் எவெர்க்ரீன் நிறுவனம் சிறந்து விளங்குகிறது.
5 வருட சம்பளத்தை ஊழியர்களுக்கு போனஸாக வழங்கிய நிறுவனம்!  title=

கடந்த 2021ம் ஆண்டில் தைவானின் ஷிப்பிங் நிறுவனமான எவர்கிரீன் மெரைன் நிறுவனத்தின் கண்டெயினர் சூயஸ் கால்வாயில் பிளாக் செய்யப்பட்டபோது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.  தற்போது நிறுவனம் லாபத்தில் பெரியளவில் முன்னேற்றம் அடைந்து அதன் 3100 தொழிலாளர்களுக்கு பெரிய அளவில் போனஸை வழங்கி மீண்டும் செய்தியில் இடம்பிடித்துள்ளது.  கொரோனா பெருந்தொற்று காலத்தில் இந்நிறுவனம் சிறப்பாக செயல்பட்டு பெரும் வருவாயை பெற்று நிறுவனத்தின் நிதி நிலை பெரியளவில் உயர்ந்துள்ளது.  கடல் வழி வணிகத்தில் இந்நிறுவனம் சிறந்து விளங்கி வருகிறது, வருவாயை ஈட்டுவதிலும் இந்நிறுவனம் சாதனை புரிந்து வருகிறது.  தைவான் ஷிப்பிங் நிறுவனமான எவர்கிரீன் மரைன் தனது 3100 தொழிலாளர்களுக்கு பெரியளவில் போனஸ்களை வழங்குவதாக ஆஸ்திரேலிய செய்தி இணையதளமான news.com.au தெரிவித்துள்ளது.  

evergreen

மேலும் படிக்க | ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனை! அதிர்ச்சி கொடுத்துள்ள உகாண்டா!

அதன்படி வெளியாகியுள்ள அறிக்கையின்படி, இந்த ஆண்டுக்கான சம்பள உயர்வு 2022-ல் 10 முதல் 11 மாத தொழிலாளர்களின் சம்பளத்திற்கு சமமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.   எவர்க்ரீன் நிறுவனத்தின் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு ஏறக்குறைய ஐந்தாண்டுகளின் வருமானத்திற்குச் சமமான போனஸ் வழங்கப்படுகிறது, நிறுவனத்தின் இந்த நடவடிக்கையால் ஊழியர்கள் மகிழ்ச்சியில் மூழ்கியுள்ளனர்.  எவர்கிரீன், கன்டெய்னர் கப்பலை இயக்கி வந்த நிறுவனம் 2021ல் சூயஸ் கால்வாயில் கரை ஒதுங்கியது. தொழிலாளர்களின் தனிப்பட்ட செயல்திறனுக்கு ஏற்ப போனஸ் விநியோகிக்கப்படும் என்று கூறியுள்ளது.  இந்நிறுவனத்தில் ஊழியர்களுக்கான ஆண்டு சம்பளம் $44,745 ( ரூ. 37,00,807) மற்றும் $171,154 ( ரூ. 1,41,55,950) வரை இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  

2022 ஆம் ஆண்டு முடிவடையும் நிதியாண்டில் $16.25 பில்லியன் ஈட்டிய பிறகு, எவர்கிரீன் லாபத்தில் 39.82% முன்னேற்றத்தைப் பதிவு செய்துள்ளது. எவர்க்ரீன் நிறுவனம் கடைசியாக அதன் ஊழியர்களுக்கு போனஸ் வழங்குவதற்காகவே சுமார் 93 மில்லியன் டாலர்கள் செலவு செய்திருப்பதாக சில அறிக்கைகள் தெரிவிக்கிறது. இந்த நிறுவனம் தற்போது அதன் ஊழியர்களுக்கு ஐந்து ஆண்டு சம்பளத்தை போனஸாக வழங்குவது குறித்து செய்தி வெளியானத்திலிருந்து நிறுவனத்தை பலரும் பாராட்டி வருகின்றனர்.

மேலும் படிக்க | தாலிபான் அமைச்சரவை கூட்டத்தில் சண்டை! அமைச்சரின் கையை உடைத்த தேர்வு வாரிய தலைவர்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News