உலகின் மிகப் பெரிய பணக்காரர் பட்டத்தை எலோன் மஸ்க் இழந்தார். ஒன்பது மாதங்களுக்கும் மேலாக முதன்முறையாக, எலோன் மஸ்க் உலகின் மிகப்பெரிய பணக்காரர் பட்டத்தை இழந்தார். டெஸ்லா இன்க். நிறுவனப் பங்குகள் 7.2% சரிந்ததையடுத்து, ப்ளூம்பெர்க் பில்லியனர்கள் குறியீட்டில் ஜெஃப் பெசோஸ் முதலிடத்திற்கு செல்ல, எலோன் மஸ்க் பின்தங்கினார். மஸ்க் இப்போது $197.7 பில்லியன் நிகர மதிப்பைக் கொண்டுள்ளார்; பெசோஸின் சொத்து மதிப்பு $200.3 பில்லியன் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜெஃப் பெசோஸ்
அமேசான்.காம் இன்க் நிறுவனர் பெசோஸ், 2021க்குப் பிறகு ப்ளூம்பெர்க்கின் பணக்காரர்களின் தரவரிசையில் முதலிடம் பிடித்தது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
அமேசான் மற்றும் டெஸ்லா பங்குகள் எதிரெதிர் திசையில் நகர்வதால், மஸ்க் மற்றும் பெசோஸ் இடையேயான செல்வ இடைவெளி, ஒரு கட்டத்தில் $142 பில்லியன் அளவுக்கு இருந்தது. இரண்டும் அமெரிக்க பங்குச் சந்தைகளைத் தூண்டிய அற்புதமான ஏழு பங்குகளில் ஒன்றாக இருந்தாலும், அமேசான் பங்குகள் 2022 இன் பிற்பகுதியில் இருந்து இரு மடங்கிற்கும் மேலாக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அமேசான் பங்குகளின் விலை சாதனை உயர்வை எட்டியுள்ளன நிலையில், டெஸ்லா அதன் 2021 உச்சத்திலிருந்து சுமார் 50% குறைந்துள்ளது. ஷாங்காயில் உள்ள அதன் தொழிற்சாலையிலிருந்து ஏற்றுமதிகள் ஒரு வருடத்திற்கும் மேலாக மிகக் குறைந்த அளவிற்கு சரிந்ததை ஆரம்ப தரவு காட்டிய பின்னர் திங்களன்று டெஸ்லா பங்குகள் வீழ்ச்சியடைந்தன.
கொரோனா தொற்றுநோய்
இதற்கிடையில், கொரோனா தொற்றுநோய் தொடங்கியதில் இருந்தே, அமேசானின் ஆன்லைன் வர்த்தகம் அதிகரித்து, விற்பனை பிரம்மாண்டமான வளர்ச்சியை கண்டு வருகிறது.
ப்ளூம்பெர்க் பட்டியலில் மஸ்க்
மஸ்க் தலைமை நிர்வாகியாக இருக்கும் டெஸ்லாவில் $55 பில்லியன் சம்பளப் பொதியை ரத்து செய்த பிறகு, மஸ்கின் செல்வம் மேலும் பாதிப்படையக்கூடும். வரலாற்றில் மிகப்பெரியதாக இருந்த மஸ்க்கின் இழப்பீட்டுத் திட்டத்தை சவால் செய்த முதலீட்டாளரின் செல்வத்தில் மேலும் சரிவு ஏற்படலாம்.
டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸில் உள்ள மஸ்கின் பங்குகளுடன், வேறு சொத்துகக்ளையும் சேர்த்து ப்ளூம்பெர்க் குறியீட்டு எண் கணக்கீடுகளை செய்தது. அதே நேரத்தில், பெசோஸின் செல்வத்தின் பெரும்பகுதி அமேசான் நிறுவனத்தில் உள்ள அவரது 9% பங்குகளில் இருந்து வருகிறது. கடந்த மாதம் 8.5 பில்லியன் டாலர் மதிப்புள்ள 50 மில்லியன் பங்குகளை அவர் விற்ற பிறகும், ஆன்லைன் சில்லறை விற்பனை நிறுவனத்தின் மிகப்பெரிய பங்குதாரர் பெசோஸ் தான்..
பெசோஸைப் பொறுத்தவரை, தரவரிசையில் முதலிடத்தில் இருப்பது அவருக்கு ஒன்றும் புதிதல்ல. 2017 ஆம் ஆண்டில் உலகின் மிகப் பெரிய பணக்காரராக மைக்ரோசாப்ட் இன்க் நிறுவனர் பில் கேட்ஸை முந்தினார்.
ஆனால் டெஸ்லா பங்குகளில் ஏற்பட்ட முன்னேற்றம், 2021 ஆம் ஆண்டு முதல், அவருக்கும் எலோன் மஸ்குக்கும் இடையில் போட்டியை பலப்படுத்தியது. அந்த ஆண்டின் பிற்பகுதியில் அவர் மிகவும் பின்தங்கினார், அதன்பிறகு தற்போது தான் நம்பர் 1 இடத்தை மீண்டும் பெற்றுள்ளார்.
மேலும் படிக்க | லிம்போ ஸ்கேட்டிங்கிலும் அசத்தி தனியார் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த மாணவர்கள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ