ஒரே நாளில் 2 முறை நீதிமன்றத்தில் ஆஜரான அமைச்சர் செந்தில் பாலாஜி.. காரணம் என்ன?

Senthil Balaji Bail Update: சட்ட விரோத பணப்பரிமாற்ற தடைச்சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கில், சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி ஆஜரானார்.

Written by - Shiva Murugesan | Last Updated : Oct 5, 2024, 07:45 AM IST
ஒரே நாளில் 2 முறை நீதிமன்றத்தில் ஆஜரான அமைச்சர் செந்தில் பாலாஜி.. காரணம் என்ன? title=

Senthil Balaji Latest News: அமலாக்கத்துறை வழக்கு விசாரணைக்காக அமைச்சர் செந்தில் பாலாஜி இரண்டு முறை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜரானார். ஜாமீனில் வெளியே வந்திருக்கும் செந்தில் பாலாஜி 2 முறை விசாரணைக்காக ஆஜராக காரணம் என்ன என்பதைக் குறித்து பார்ப்போம்.

சட்ட விரோத பணப்பரிமாற்ற தடைச்சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கில், உச்ச நீதிமன்ற ஜாமீனில் விடுதலையான அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை வழக்கு விசாரணைக்காக கடந்த வாரம் ஆஜராகி இருந்தார். 

இந்த வழக்கு முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி கார்த்திகேயன் முன்பு மீண்டும் நேற்று (அக்டோபர் 4, வெள்ளியன்று) விசாரணைக்கு வந்தபோது அமைச்சர் செந்தில் பாலாஜி ஆஜராகி இருந்தார். அதேநேரத்தில் அமலாக துறை சாட்சியான மணிவண்ணனும் ஆஜராகி இருந்தார். 

இந்நிலையில் விசாரணையை தள்ளி வைக்க வேண்டுமென செந்தில் பாலாஜி தரப்பு மூத்த வழக்கறிஞர் இளங்கோவின் கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிபதி சாட்சி விசாரணை மேற்கொள்ளப்படும் எனக் கூறி விசாரணையை பிற்பகலுக்கு தள்ளி வைத்தார். பிற்பகல் வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது செந்தில் பாலாஜி மீண்டும் ஆஜரானார். 

தடையவியல் துறை உதவி இயக்குனர் மணிவண்ணனிடம் செந்தில் பாலாஜி தரப்பு வழக்கறிஞர் மேற்கொண்ட குறுக்கு விசாரணை நிறைவடையாததால், வழக்கு விசாரணையை அக்டோபர் 29 ஆம் தேதிக்கு நீதிபதி தள்ளி வைத்தார். சட்ட விரோத பணப்பரிமாற்ற வழக்கில் நிபந்தனை ஜாமீனில் வெளிவந்துள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி மீண்டும் அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகி கையெழுத்திட்டார். 

நிபந்தனை ஜாமீனில் வெளிவந்த அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் கையெழுத்திட வேண்டுமென உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதை அடுத்து மூன்றாவது முறையாக அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகி அமைச்சர் செந்தில் பாலாஜி கையெழுத்திட்டு சென்றார். 

சட்டவிரோதப் பணத் தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையால் கைதுசெய்யப்பட்டு, 15 மாதங்கள் கழித்து கடந்த மாதம் (செப்டம்பர்) 26 ஆம் அன்று செந்தில் பாலாஜி ஜாமீனில் வெளியே வந்தார். சிறையிலிருந்து வெளிவந்த அவருக்கு பயங்கர வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும் அடுத்த இரண்டே நாளில் அவர் மீண்டும் அமைச்சராக்கப்பட்டார்.

மேலும் படிக்க - Senthil Balaji : செந்தில் பாலாஜி புழல் சிறையில் இருந்து வெளியே வந்தார் - தொண்டர்கள் உற்சாக வரவேற்பு

மேலும் படிக்க - செந்தில் பாலாஜி அப்போ சீட்டிங், பிராடு... இப்போ ஸ்டாலினுக்கு தியாகியா? - ஜெயக்குமார் சரமாரி கேள்வி

மேலும் படிக்க - செந்தில் பாலாஜிக்கு மீண்டும் அமைச்சர் பதவி ஏன்?- விஜய பிரபாகரன் கேள்வி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News