Anti-Ageing Tips: 60+ வயதிலும்... இளமையாக இருக்க... டயட்டில் கண்டிப்பாக வேண்டியவை

Anti-Ageing Tips: வயது ஏற ஏற, முகத்தின் பொலிவு குறைய ஆரம்பித்து, சருமம் தளர்வாக மாற ஆரம்பிக்கிறது. இதனை தவிர்க்க, 40 வயது என்ன... 60 வயது ஆனால் கூட, சருமம் மாசு மருவின்றி, சுருக்கங்கள் இன்றி இளமையாக இருக்க சில உணவுகள் கை கொடுக்கும்.

 

முதுமை எதிர்ப்பு உணவுகள், இளமையை காத்துக் கொள்ள உதவுகிறது. ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ள உணவுகள், ஃப்ரீ ரேடிக்கல்களால் ஏற்படும் சேதத்திலிருந்து உடலைப் பாதுகாத்து, முதுமை ஏற்படாமல் தடுக்க உதவுகிறது. முதுமையை தடுத்து நிறுத்தும் ஆற்றல் கொண்ட சில உணவுகளை தெரிந்து கொள்ளலாம்.

1 /10

இன்றைய மோசமான வாழ்க்கை முறை மற்றும் உணவு முறை காரணமாக, 40 வயது கடந்தாலே, வயதான தோற்றம் ஏற்பட தொடங்குகிறது. சருமம் பொலிவிழத்தல், இளநரை, வழுக்கை போன்ற பிரச்சனைகள் ஏற்படத்தொடங்கி விடுகின்றன. இதனை தவிர்க்க, உதவும் சில உணவுகளை அறிந்து கொள்ளலாம்.

2 /10

மாதுளையில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன, இது ஃப்ரீ ரேடிக்கல்களால் ஏற்படும் சேதத்திலிருந்து உடலைப் பாதுகாக்கிறது. மேலும், மாதுளையில் காணப்படும் புனிகாஜின் சருமத்தில் கொலாஜன் உற்பத்திக்கு உதவுகிறது. இது முகத்தை சுருக்கங்களை போக்கி, சருமத்தை பளபளப்பாக ஆக்கிறது.

3 /10

வேர்க்கடலை நம் உடல் ஆரோக்கியத்தை பேணும் ஒரு சூப்பர்ஃபுட் எனலாம். ஏழைகளின் பாதாம் என அழைக்கப்படும் இதில், பல வகையான வைட்டமின்கள், தாதுக்கள், ஆக்ஸிஜனேற்றங்கள் இதில் காணப்படுகின்றன. இதில் வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் உள்ளது. இது வயது அதிகரிக்கும் போது எதிர்கொள்ளும் பிரச்சனைகளை குறைக்கும்.

4 /10

பூசணிக்காய் எல்லா காலங்களிலும் எளிதாகக் கிடைக்கும் ஒரு காய்கறி. உடலில் உள்ள நச்சுகளை நீக்கும் தன்மை கொண்ட பூசணியை தொடர்ந்து சாப்பிட்டு வருவதால், வயதாவதால் ஏற்படும் பல பிரச்சனைகளை தீர்க்கலாம். ஆண்டி ஆக்ஸிடண்ட் மற்றும் ஆரோக்கிய கொழுப்பு நிறைந்த பூசணி விதைகளும் முதுமையை தடுக்கும் அற்புத உணவு.  

5 /10

ஆரஞ்சு, எலுமிச்சை போன்ற சிட்ரஸ் பழங்களில் வைட்டமின் சி நிறைந்துள்ளது. கொலாஜன் உற்பத்தியில் வைட்டமின் சி முக்கிய பங்கு வகிக்கிறது. அத்தகைய சூழ்நிலையில், இதனை வழக்கமாக எடுத்துக் கொள்வதை சருமத்தை இளமையாக வைத்திருக்க மிகவும் உதவியாக இருக்கும்.

6 /10

வைட்டமின் ஈ, ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் உலர் பழங்களில் காணப்படுகின்றன. இவை அனைத்தும் சரும ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும் மற்றும் சருமத்தைஇளமையாக வைத்திருக்கும். கூந்தல் ஆரோக்கியமும் சிறப்பாக இருக்கும்.

7 /10

தக்காளியில் உள்ள லைகோபீன் எனப்படும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் சூரியக் கதிர்களால் சருமத்தை சேதப்படுத்தாமல் பாதுகாக்கிறது. மேலும், சரும செல்களை ஆரோக்கியமாக வைக்கிறது. சரும சுருக்கங்களை போக்கி சருமம் மாசு மருவின்றி திகழ உதவுகிறது.

8 /10

அவகேடோ என்னும் வெண்ணைய்ப்பழம் மோனோசாச்சுரேட்டட் கொழுப்பு மற்றும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், வைட்டமின் ஈ ஆகியவற்றின் சிறந்த மூலமாகும். இதை உட்கொள்வதன் மூலம், சருமம் நீரேற்றமாக இருக்கும், மேலும் ஃப்ரீ ரேடிக்கல்களின் அபாயமும் குறைகிறது.

9 /10

ப்ளூபெர்ரி என்னும் அவுரிநெல்லியில் அந்தோசயனின் என்ற தனிமம் உள்ளது. இது ஒரு சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்றியாகும். இது உடல் வீக்கத்தைக் குறைக்கிறது. ஆண்டி ஆக்ஸிடெண்ட் நிறைந்துள்ள இது, சருமத்தை இளமையாகயும் பளபளப்பாகவும் வைத்திருக்க உதவுகிறது.

10 /10

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.