ஏழை, எளிய, நடுத்தர மக்களுக்கு குறைந்த விலையில் மருந்துகள்! தமிழக அரசு மெகா திட்டம்

Chief Minister Pharmacy Low Prices Medicines: ஏழை, எளிய நடுத்தர மக்கள் மற்றும் கிராமப்பகுதி மக்களுக்கு குறைந்த விலையில் தரமான மருந்துகள் வழங்க "முதல்வர் மருந்தகம்" கடைகள் மாநிலம் முழுவதும் திறக்கப்படும்.

Written by - Shiva Murugesan | Last Updated : Feb 18, 2025, 10:37 AM IST
ஏழை, எளிய, நடுத்தர மக்களுக்கு குறைந்த விலையில் மருந்துகள்! தமிழக அரசு மெகா திட்டம் title=

Mudhalvar Marundhagam Latest Update: முதல்வர் மருந்தக மூலம் மலிவான விலையில் தரமான மருந்துகள் வழங்கப்படும் என்று கூற்றவுத்துறை அமைச்சர் பெரிய கருப்பன் தெரிவித்துள்ளார். சென்னை கீழ்பாக்கத்தில் என்.வி நடராஜன் மாளிகை தமிழ்நாடு கூற்று ஒன்றிய அலுவலகத்தில் கூற்றவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரிய கருப்பன் (K. R. Periyakaruppan) தலைமையில் "முதல்வர் மருந்தகம் திறப்பு விழா" தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. 

மூன்று லட்சம் ரூபாய் வரை மானியம்

பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் பெரிய கருப்பன் கடந்த ஆட்சி காலத்தில் இல்லாத அளவிற்கு வங்கிக் கடன்கள், பயிர் கடன்கள் வழங்கப்பட்டு வருகிறது என்று கூறினார். மேலும் தொடர்ந்து பேசிய அமைச்சர் பெரிய கருப்பன் கூட்டுறவுத்துறை மூலம் புதிதாக ஆயிரம் முதல்வர் மருந்தகங்கள் திறக்கப்பட உள்ளதாக கூறினார். புதியதாக முதல்வர் மருந்தகம் திறக்கும் தொழில் முடிவுக்கு மூன்று லட்சம் ரூபாய் வரை அரசு மானிய வழங்க்கப்படும் என்றும், வரும் 24 ஆம் தேதி முதலமைச்சர் ஆயிரம் மருந்தகளை திறந்து வைக்க உள்ளார் எனவும் தெரிவித்தார். 

செய்தியாளர்கள் மத்தியில் கூற்றவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரிய கருப்பன் கூறியது, 

தமிழகமெங்கும் ஆயிரம் எண்ணிக்கையிலான மருந்தகம் அமைக்கப்படும் என்று முதல்வர் அவர்கள் அறிவிப்பு செய்தார். அதன்படி அறிவிக்கப்பட்டிருக்கின்ற ஆயிரம் முதல்வர் மருந்தகங்களில் சுமார் 980-க்கு மேற்பட்ட மருந்தகங்களுக்கு அனைத்து தகுதிகளும் சான்றுகளும் வழங்கப்பட்டு அவைகள் திறப்பதற்கு தயாராக இருக்கிறது. 

விரைவில் எஞ்சியுள்ள "முதல்வர் மருந்தகம்" எண்ணிக்கையும் பூர்த்தி செய்யப்படும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. அதை குறிப்பாக ஏழை, எளிய நடுத்தர மக்கள், அதிலும் குறிப்பாக கிராமப்பகுதி மக்களுக்கு மிகுந்த பலனை தருகிறது என்ற காரணத்தினால் தான் மேலும் ஒரு ஆயிரம் முதல்வர் மருந்தகங்களை மாநிலம் முழுவதும் திறந்திட வேண்டும் என்று அறிவிப்பு செய்யப்பட்டு உள்ளது எனக் கூறினார்.

முதல்வர் மருந்தகம் திட்ட விவரம் என்ன? யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

D.Pharm அல்லது B.Pharm படிப்பினை முடித்து மருந்தாளுனராக உரிமம் பெற்ற தொழில் முனைவோர்கள் முதல்வர் மருந்தகத்திற்கு ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம். 

மேற்படி சான்றிதழ் இல்லாமல் இருப்பின் மேற்கண்ட உரிமம் பெற்ற நபரின் இசைவுக் கடிதத்தை பெற்று சமர்பிக்க வேண்டும். 

மேற்படி உரிமம் உள்ள கூட்டுறவுச் சங்கங்களும் இதில் விண்ணப்பிக்கலாம்

முதல் கட்டமாக 1000 முதல்வர் மருந்தகங்கள் தொடங்கப்படும்

கடன் பெற விருப்பம் உள்ள தொழில் முனைவோர்களுக்கு கூட்டுறவு ங்கிகள் மூலம் கடன் பெற வசதிகள் செய்துதரப்படும்.

தேர்ந்தெடுக்கப்படும் தொழில் முனைவோர்களுக்கு 3 இலட்சம் அரசு மானியம் வழங்கப்படும். அதில் 50 சதவீதம் உட்கட்டமைப்பு வசதிக்காக ரொக்கமாகவும் 50 சதவீதம் மருந்துகளாகவும் வழங்கப்படும்.

சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் அனைத்தும் இணைய வழியில் பரிசீலிக்கப்படும்.

மேலும் படிக்க - சொந்த தொழில் தொடங்க ரூ. 3 லட்சம் மானியம்! தமிழக அரசின் அசத்தல் திட்டம்!

மேலும் படிக்க - முதல்வர் மருந்தகம் நீங்களும் திறக்கலாம்... B.Pharm பட்டம் அவசியமில்லை - விண்ணப்பிப்பது எப்படி?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News