அரசு ஊழியர்கள் ஓய்வூதியம் தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படுமா என்ற கேள்விக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு பதிலளித்துள்ளார். புதிய ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று விளக்கம் அளித்துள்ளார்.

Written by - RK Spark | Last Updated : Jan 12, 2025, 01:27 PM IST
  • அரசு ஊழியர்களுக்கு புதிய முறையில் ஓய்வூதியம்?
  • சட்டசபையில் தங்கம் தென்னரசு பதில்.
  • பழைய ஓய்வூதியம் இருக்காது என்று தகவல்.
அரசு ஊழியர்கள் ஓய்வூதியம் தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு! title=

2025ஆம் ஆண்டுக்கான முதல் சட்டமன்றக் கூட்டத்தொடர் கடந்த ஜனவரி 6ஆம் தேதி தொடங்கியது. அதை தொடர்ந்து நேற்று முடிவு பெற்றது. இதில் புதிய தீர்மானங்கள், திட்டங்கள் குறித்த விவாதங்கள் நடைபெற்றது. மேலும் சமீபத்தில் இறந்த தலைவர்களுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் தொடர்பாக சட்டமன்ற உறுப்பினர்கள் விவாதத்தில் ஈடுபட்டனர். இந்த அமர்வில் முதல்வர் ஸ்டாலின் தனது உரையை ஆற்றினார். தமிழக மக்கள் பயன்பெறும் வகையில் அரசு செயல்படுத்தி வரும் பல்வேறு முயற்சிகள் மற்றும் திட்டங்களை அவர் எடுத்துரைத்தார். மேலும் பெண்களுக்கு எதிராக அதிகரித்து வரும் குற்றங்களை தடுக்கும் வகையில் புதிய சட்டங்களை கொண்டு வந்துள்ளார்.

மேலும் படிக்க | Pongal 2025: பொங்கலுக்கு இந்த 2 நாளும் விடுமுறை - அரசின் கடைசி நேர அப்டேட்

எம்எல்ஏ எழிலரசன் கேள்வி

இதையடுத்து, அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவது குறித்து சட்டப்பேரவையில் எம்எல்ஏ எழிலரசன் கேள்வி எழுப்பினார். இதற்கு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம் அளித்தார். மத்திய அரசு புதிய ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தை (யுபிஎஸ்) அறிமுகப்படுத்தியுள்ளது என்று அவர் சட்டசபையில் தெரிவித்தார். இது முதன்மையாக அரசு ஊழியர்களுக்கு அடிப்படை ஓய்வூதியத்தை உறுதிப்படுத்த வடிவமைக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கு தேவையான அதிகாரப்பூர்வ வழிகாட்டுதல்கள் மற்றும் விரிவான நடைமுறைகளை மத்திய அரசு இன்னும் வெளியிடவில்லை என்று அமைச்சர் குறிப்பிட்டார். அவை கிடைத்ததும், நமது மாநிலத்திற்கு ஏற்ற ஓய்வூதிய திட்டத்தை வகுக்க, முதலமைச்சருடன் கலந்தாலோசித்து புதிய குழு அமைக்கப்படும். இந்தக் குழுவின் பரிந்துரைகளின்படி, தமிழகத்தில் ஓய்வூதியத் திட்டத்தை திறம்பட செயல்படுத்த தேவையான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ளும் என்று சட்டசபையில் உறுதியளித்தார்.

பழைய ஓய்வூதிய திட்டம் வருமா?

தமிழ்நாட்டிற்கு புதிய ஓய்வூதியத் திட்டம் உருவாக்கப்பட்டு வருகிறது. ஆனால், பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை அரசு ஊழியர்களிடையே அதிகரித்து வருகிறது. இருந்தும் தமிழக அரசு இந்த கோரிக்கைகளுக்கு செவிசாய்க்கவில்லை. இந்நிலையில், பழைய ஓய்வூதியத் திட்டம் மற்றும் புதிய ஓய்வூதியத் திட்டம் ஆகிய இரண்டிலிருந்தும் கணிசமாக வேறுபடும் யுபிஎஸ் எனப்படும் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. மத்திய அரசின் அறிவிப்பின்படி, இந்த ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் ஏப்ரல் 1, 2025 முதல் அமலுக்கு வருகிறது. இந்தத் திட்டத்தின் கீழ், ஊழியர்களுக்கு நிறைய பலன்கள் கிடைக்க உள்ளது.

ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் என்றால் என்ன?

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை, ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்துக்கு ஒப்புதல் அளித்துள்ளது. தற்போது, ​இந்தியாவில் இரண்டு வகையான ஓய்வூதியத் திட்டங்கள் செயல்படுகின்றன, ஒன்று பழைய ஓய்வூதியத் திட்டம் இன்னொன்று புதிய ஓய்வூதியத் திட்டம். இந்த திட்டங்கள் ஒரு மாநிலத்திற்கும் மற்றொரு மாநிலத்திற்கும் வேறுபடும். இந்த புதிய ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் 10 ஆண்டுகள் வரை பணியாற்றிய ஊழியர்களுக்கு மாதாந்திர ஓய்வூதியமாக ரூ. 10,000 கிடைக்கும். அரசு ஊழியர் பனியின் போது இறந்தால், அவர்களின் அடிப்படை சம்பளத்தில் 60 சதவீதம் குடும்பத்துக்கு ஓய்வூதியமாக வழங்கப்படும் என இத்திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், இறந்த ஊழியர்களின் குடும்பங்களுக்கு உடனடியாக வேலை வாய்ப்பை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளையும் அரசு மேற்கொள்ளும்.

மேலும் படிக்க | ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் : தேர்தல் ஆணையம் போட்ட முக்கிய கண்டிஷன்..!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News