3 பேரை காரில் கடத்திய கும்பல் - '36 மணி நேரத்தில்' அதிரடி காட்டிய தனிப்படை போலீசார்

கோவையில் பணம் கொடுக்கல், வாங்கல் பிரச்சினையில் 14 வயது சிறுவன் உட்பட மூவரை கடத்திச் சென்ற கும்பலை போலீசார் கைது செய்தனர்.

Written by - Gowtham Natarajan | Last Updated : Apr 15, 2022, 09:07 PM IST
  • பணம் கொடுக்கல், வாங்கல் பிரச்சினையில் விபரீதம்
  • 14 வயது சிறுவன் உட்பட 3பேரை காரில் கடத்திய கும்பல்
  • 36 மணி நேரத்தில் தனிப்படை போலீசார் அதிரடி
3 பேரை காரில் கடத்திய கும்பல் - '36 மணி நேரத்தில்' அதிரடி காட்டிய தனிப்படை போலீசார்  title=

கர்நாடகா மாநிலம் பெங்களூர் மகுடி சாலை காசோலி கிராஸ் பகுதியை சேர்ந்தவர் முகமது சாஸாத். இவர் பழைய இரும்பு மற்றும் மின்னணு கழிவு பொருட்கள் வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில் முகமது சாஸாத் தனது காரில் டிரைவர் முகமது யாசீன்,மகன் சையப் (14) உள்ளிட்டோருடன் சரவணம்பட்டி அருகே சென்று கொண்டிருந்தபோது காரில் பின் தொடர்ந்து வந்த கும்பல் இடைமறித்து மூவரையும் கடத்திச் சென்றனர். இது தொடர்பான புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த கோவில்பாளையம் போலீசார் தனிப்படை அமைத்து விசாரணையை முன்னெடுத்தனர்.

Kidnapping

இந்நிலையில் கோவில்பாளையம் போலீசார் அத்திப்பாளையம் பகுதியில் தீவிர ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்த போது,அவ்வழியாக இரு காரில் வந்தவர்களிடம் விசாரணை மேற்கொண்டதில் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்தனர்.  இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவர்களை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர்.

விசாரணையில் அவர்கள் பெங்களூரை சேர்ந்த ஹசீம் அகமது (34), சையது அசார் (32), ஜூபைர் அகமது (27), முகமது மோசீன் (35) என்பதும், பணம் கொடுக்கல் வாங்கல் தகராறு காரணமாக முகமது சாஸாத், அவரது மகன் சையப், அவரது டிரைவர் முகமது யாசீன் உள்ளிட்டோரை காரோடு கடத்தியதும் தெரியவந்தது. 

மேலும் படிக்க | வீட்டில் 'சாத்தான்' ? - மூதாட்டி மற்றும் இளம்பெண் மோசமான நிலையில் மீட்பு

இதனையடுத்து கடத்தப்பட்ட மூவரையும் அவர்களிடமிருந்து பத்திரமாக மீட்ட தனிப்படை போலீசார், நால்வரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து கடத்தலுக்கு பயன்படுத்திய இரு கார்களையும் பறிமுதல் செய்தனர். இந்த வழக்கில் கடத்தப்பட்ட  நபர்களை 36 மணி நேரத்தில் தனிப்படை போலீசார் அதிரடியாக மீட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | தங்கச் சங்கிலிக்காக ‘நண்பனின் தாயை’ இரும்பு ராடால் அடித்து கொல்ல முயன்றவர் கைது..!

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

 

 

 

Trending News