Mayiladuthurai Double Murder | மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறை அருகே பெரம்பூர் காவல் சரகத்திற்குட்பட்ட முட்டம் கிராமத்தில், கல்லூரி மாணவன், பாலிடெக்னிக் படித்து முடித்துவிட்டு வேலை தேடும் இளைஞன் ஆகிய இரண்டு பேரை சாராயம் சாராய வியாபாரிகள் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பையும், பதட்டத்தையும் ஏற்படுத்தியுள்ளது. முட்டம் வடக்குதெரு பகுதியில் ராஜ்குமார், தங்கதுரை, மூவேந்தன் ஆகியோர் தொடர்ந்து சாராயம் விற்பனை செய்து வந்துள்ளனர். இதனை தட்டி கேட்பவர்களை அடித்தும், கொலை மிரட்டல் விடுப்பதும் வாடிக்கையாக இருந்துள்ளது.
இது குறித்து அப்பகுதி மக்கள் சாராய வியாபாரிகள் மீது குற்றம்சாட்டியிருகின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு காவல்துறை சார்பில் முட்டம் பகுதியில் சாராய ரெய்டு நடைபெற்று, சாராய வியாபாரி ராஜ்குமாரை போலீசார் கைது செய்தனர். நேற்று முன்தினம் ராஜ்குமார் ஜாமீனில் வெளிவந்துள்ளார். வந்ததும் சாராய விற்பனையை செய்துள்ளார். அப்போது, தெருவில் ஏன் சாராயம் விற்கிறீர்கள்? என்று கேட்ட தினேஷ் என்ற சிறுவனை சாராய வியாபாரிகள் அடித்ததாக கூறப்படுகிறது. இதனை முட்டம் வடக்குத் தெருவை சேர்ந்த கல்யாண்குமார் மகன் ஹரிஷ், (பாலிடெக்னிக் படித்துவிட்டு வேலை தேடும் இளைஞர்), மற்றும் உறவினர் வீட்டிற்கு வந்திருந்த பேச்சாவடி பகுதியை சேர்ந்த பாலமுருகன் மகன் இன்ஜினியரிங் படிக்கும் மாணவன் ஹரிசக்தி தட்டிகேட்டுள்ளனர்.
இதனால் ஆத்திரமடைந்த சாராய வியாபாரிகள் ராஜ்குமார் மூவேந்தன், தங்கதுரை ஆகியோர் தகறாரில் ஈடுபட்டு, இளைஞர்கள் இருவரையும் சராமாரியாக கத்தியால் குத்தியுள்ளனர். இதில் ஹரிஷ் மற்றும் ஹரிசக்தி ஆகிய இரண்டு பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இச்சம்பவம் குறித்து மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்டாலின் சம்பவ இடத்தில் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு உயிரிழந்த நபர்களின் உறவினரிடம் விசாரணை மேற்கொண்டார். இருவரின் உடல்கள் பிரேத பரிசோதனைக்கு மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இரட்டை படுகொலை குறித்து பெரம்பூர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய சாராய வியாபாரிகளை தேடி வருகின்றனர்.
சாராய வியாபாரிகளால் இரட்டை கொலை அரங்கேறிய நிலையில் அரசு மருத்துவமனையில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். சாராய வியாபாரத்தை தடுக்காமல் சாராய வியாபாரிகளுக்கு போலீசார் உடந்தையாக உள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இச்சம்பவம் மயிலாடுதுறை மாவட்டத்தில் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் படிக்க - தமிழ்நாடு விவசாயிகளுக்கு குட் நியூஸ்..! சூப்பரான வாய்ப்பை மிஸ் செய்ய வேண்டாம்
மேலும் படிக்க - PM Kisan: 19வது தவணை யாருக்கு கிடைக்கும், யாருக்கு கிடைக்காது? செக் செய்வது எப்படி?
மேலும் படிக்க - தமிழ்நாடு விவசாயிகளுக்கு குட் நியூஸ் -பயிர் காப்பீடு அறிவிப்பு
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ