Tamil Nadu Government | நோய் தாக்குதல்களில் இருந்து பயிர்களை எப்படி பாதுகாக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு மிக முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.
Tamil Nadu Government Guidelines | விவசாயிகள் தமிழ்நாடு அரசின் வழிகாட்டுதல்களை பின்பற்றி பயிர்களை நோய் தாக்குதல்களில் இருந்து பாதுகாப்பது எப்படி? என தெரிந்து கொள்ளுங்கள். முழு விவரம் இங்கே
நாகப்பட்டினம் மாவட்டத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள பயறு வகைப் பயிர்களை (உளுந்து / பச்சைப்பயறு) தாக்கும் நோய்களுக்கான மேலாண்மை குறித்து கீழ்க்கண்ட வழிமுறைகளை பின்பற்றி விவசாயிகள் பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஆகாஷ் கூறியுள்ளார்.
பயறுவகை பயிர்கள் - உளுத்து / பச்சைப்பயறு : மஞ்சள் தேமல் நோய்க்கான அறிகுறிகள் : இலைகள் மஞ்சள் நிறமாக மாறி சிறுத்தும், சுருங்கியும் காணப்படும். நோய் மேலாண்மை: நோய் எதிர்ப்பு திறனுள்ள இரகங்கள் - வம்பன் 4, 6, 7, &- ஒரு லீட்டர் நீருடன் 3 மி.லி வேப்பெண்ணெய்யை கலந்து தெளிக்க வேண்டும்.
வயலைச் சுற்றி சோளப் பயிரை 3 வரிசைகளில் விதைக்க வேண்டும். இமிடாகுளோபிரிட் (17.8% SL) 100 மிலி (அல்லது) டைமீத்தோயேட் (00% EC) 200 மிலி தெளித்தல், மஞ்சள் ஒட்டும் பொறி அட்டைகள் 5 எண்கள்,
வேர் அழுகல் நோய்க்கான அறிகுறிகள் இலைகள் மஞ்சளாகி, வாடி குறுகிய காலத்தில் இறந்து விடும். தண்டின் பட்டைகள் அழுகி உரிந்து தொங்கி கொண்டிருக்கும்.
நோய் மேலாண்மை : டிரைக்கோடெர்மா ஆஸ்பரில்லம் 1 கிணேவை 20 கிலோ மக்கிய தொழு உரத்துடன் கலந்து விதைப்புக்குப்பின் 30 நாட்கள் கழித்து இடவும். நோய் தாக்கிய செடிகளின் வேர்ப்பகுதி நனையுமாறு கார்பன்டாசிம் 50% WP (1 கிராம் / லிட்டர் நீருடன்) கரைசலை ஊற்றுதல்,
சாம்பல் நோய்க்கான அறிகுறிகள் : வெண்மை நிற துகள்கள் இலைகள் முழுவதும் படர்ந்து நாளடைவில் கருமையாக மாறிவிடும். நோய் மேலாண்மை வேப்பம் விதைச்சாறு 5% அல்லது வேப்ப எண்ணெய் 3%-10 நாட்கள் இடைவெளியில் இருமுறைத் தெளித்தல் வேண்டும்.
பயறுவகை பயிர்களுக்கான உரப்பரிந்துரை: இறவை பயிராக இருப்பின் : ஒரு ஏக்கருக்கு 10 கிலோ தழைச்சத்து, 20 கிலோ மணிச்சத்து, 10 கிலோ சாம்பல் சத்து இந்தல் வேண்டும்.
மானாவாரி பயிராக இருப்பின் : ஒரு ஏக்கருக்கு 5 கிலோ நழைச்சத்து, 10 கிலோ மணிச்சத்து, 5 கிலோ சாம்பல் சத்து இடுதல் வேண்டும். மேற்கண்ட வழிமுறைகளை பின்பற்றி விவசாயிகள் பயன்பெறவேண்டும் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்