என்னிடம் கேட்காதீர்கள்... பொதுச்செயலாளரை தான் கேட்க வேண்டும் - செங்கோட்டையன் பேச்சு

Tamilnadu News: தான் சாதாரண தொண்டன் என்றும் தன்னிடம் கேட்கும் கேள்விகளை பொதுச்செயலாளரிடம் தான் நீங்கள் கேட்க வேண்டும் என செங்கோட்டையன் பேசியிருப்பது தற்போது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Written by - Sudharsan G | Last Updated : Feb 17, 2025, 08:00 PM IST
  • மூத்த தலைவர் என்றால் எல்லா கருத்தையும் பேசி விட முடியாது - செங்கோட்டையன்
  • நான் சாதாரண தொண்டன் - செங்கோட்டையன்
  • நீதிமன்ற வழக்கு தொடர்பாக சி.வி.சண்முகம் தான் பதில் கூறுவார் - செங்கோட்டையன்
என்னிடம் கேட்காதீர்கள்... பொதுச்செயலாளரை தான் கேட்க வேண்டும் - செங்கோட்டையன் பேச்சு title=

Tamilnadu Latest News Updates: திருச்சியில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் (Sengottaiyan) இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர்,"புது கேள்விகள் எல்லாம் கேட்டால் நான் எப்படி பதில் கூறுவது. அந்தியூர் சட்டமன்ற தொகுதி தொடர்ந்து வெற்றி பெற்ற தொகுதி. அங்கு சில துரோகிகளால் தான் வெற்றி வாய்ப்பை இழந்தோம். அதை ஏற்கனவே தெளிவுப்படுத்திவிட்டேன்.

Tamilnadu News: 'பொதுச்செயலாளரை தான் கேட்க வேண்டும்'

பா.ஜ.க உடன் அதிமுக கூட்டணி வைக்க வேண்டும் என ஒ.பன்னீர்செல்வம் பேசி இருப்பது குறித்து ஓ.பி.எஸ் இடம்தான் கேட்க வேண்டும். கட்சியின் மூத்த தலைவர் என்றால் எல்லா கருத்தையும் பேசி விட முடியாது. அரசியலில் மூத்த தலைவர், இளைய தலைவர் என்பதெல்லாம் இல்லை. அமைதியாக அவர் அவர் வேலையை பார்த்து கொண்டிருந்தால் நல்லது. நீதிமன்ற வழக்கு தொடர்பாக சி.வி.சண்முகம் தான் பதில் கூறுவார். அவர் தான் எல்லா பதிலும் கூறுகிறார்.

நான் சாதாரண தொண்டன் என்னிடம் கேட்கும் கேள்விகளை பொதுச்செயலாளரிடம் தான் கேட்க வேண்டும். அதிமுக - பா.ஜ.க கூட்டணி வைக்குமா என்பது குறித்தும் பொதுச்செயலாளரிடம் தான் கேட்க வேண்டும். விவசாயிகள் நடத்திய அத்திக்கடவு - அவினாசி கூட்டுக்குடிநீர் திட்டத்திற்கான பாராட்டு விழாவை நான் புறக்கணிக்கவில்லை, அதில் கலந்து கொள்ளவில்லை என தான் ஏற்கனவே கூறினேன்" என பதிலளித்தார்.

Tamilnadu News: மாவட்ட பொறுப்பாளர்கள் - செங்கோட்டையன் பெயர் இல்லை

முன்னதாக, தேர்தலை முன்னிட்டு அதிமுக நியமித்துள்ள மாவட்டப் பொறுப்பாளர்கள் பட்டியலில் செங்கோட்டையனின் பெயர் இடம்பெறவில்லை. இது தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. 2026ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு ஒவ்வொரு கட்சியினரும், தங்களின் களப்பணிகளை தொடங்கிவிட்டன. திமுக ஏற்கெனவே பல்வேறு களப்பணிகளை தொடங்கிவிட்டது. களத்தில் புதிய கட்சியான தவெகவும் அதன் அடிப்படை கட்டமைப்பை தொடங்கியிருக்கும் சூழலில், பலரின் கவனமும் அதிமுகவின் அடுத்த கட்ட நகர்விலேயே இருக்கிறது எனலாம்.

Tamilnadu News: நெருக்கடியில் எடப்பாடி பழனிசாமி?

அதிமுகவின் பொதுச்செயலாளர் பதவி மற்றும் இரட்டை இலை விவகாரம் குறித்த விசாரணை மேற்கொள்ள தேர்தல் ஆணையத்திற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை சென்னை உயர் நீதிமன்றம் சமீபத்தில் நீக்கியிருந்தது. இது எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. 

அதிமுகவில் பொதுச்செயலாளர் பதவிக்கு தேர்தல் நடத்த வேண்டும், இதனை யாரும் மாற்றக்கூடாது என்பது விதி என கூறும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு, எடப்பாடி பழனிசாமி தற்போது அதில் மாற்றம் செய்துள்ளது ஏற்கத்தக்கது இல்லை என்றும் அதுவரை இரட்டை இலை சின்னத்தை முடக்க வேண்டும் என்றும் தேர்தல் ஆணையத்திடம் முறையிட்டிருந்தனர். இந்த மனுவின் மீது தேர்தல் ஆணையம் விசாரணை மேற்கொள்ளவே இபிஎஸ் தரப்பு முதலில் தடை பெற்றிருந்தது. தற்போது அந்த தடை நீங்கியிருக்கிறது.

Tamilnadu News: சுற்றிவளைக்கும் ஓபிஎஸ்

இந்த சூழலில், சசிகலா, டிடிவி தினகரன் மட்டுமின்றி தான் உள்பட மூவரும் அதிமுகவில் இணைய தயாராக இருப்பதாகவும், அதற்கு எவ்வித நிபந்தனையும் இல்லை என்றும் ஓ.பன்னீர்செல்வம் சமீபத்தில் தெரிவித்திருந்தார். மேலும் அனைத்து பிரிவினரும் அதிமுகவில் இணைவதும், அதிமுக பாஜகவுடன் இணைவதுமே அனைவருக்கும் நல்லது என்றும் அவர் பேசியிருந்தார். மேலும், எல்லா கேள்விகளுக்கும் பதில் சொல்ல வேண்டியவர் செங்கோட்டையன்தான் என்றும் ஓ.பி.எஸ் பேசியிருந்தார். இந்நிலையில், தற்போது அதிமுகவை சுற்றி தமிழ்நாடு அரசியல் களம் பரபரப்பாகி உள்ளது.

மேலும் படிக்க | நடிகர் பிரகாஷ்ராஜ் ஆக நினைத்த அதிமுக Ex MLA தம்பி... தட்டி தூக்கிய போலீஸ்!

மேலும் படிக்க | பயிர்களை பாதுகாப்பது எப்படி? விவசாயிகளுக்கு தமிழ்நாடு அரசு மிக முக்கிய அறிவுறுத்தல்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News