தமிழ்நாடு விவசாயிகளுக்கு குட் நியூஸ்..! சூப்பரான வாய்ப்பை மிஸ் செய்ய வேண்டாம்

Tamil Nadu government | நெல் அறுவடை இயந்திரங்களை உழவர் செயலி மூலம் வாடகைக்கு எடுத்துக் கொள்ளலாம் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. 

Written by - S.Karthikeyan | Last Updated : Feb 14, 2025, 06:56 AM IST
  • விவசாயிகளுக்கு தமிழ்நாடு அரசு குட் நியூஸ்
  • நெல் அறுவை இயந்திரம் வாடகைக்கு எடுத்துக் கொள்ளலாம்
  • உழவன் செயலி மூலம் வாடகைக்கு எடுக்கலாம் என அறிவிப்பு
தமிழ்நாடு விவசாயிகளுக்கு குட் நியூஸ்..! சூப்பரான வாய்ப்பை மிஸ் செய்ய வேண்டாம் title=

Tamil Nadu government Good News | விவசாயிகளுக்காக தமிழ்நாடு அரசு ஒரு சூப்பரான குட் நியூஸ் வெளியிட்டுள்ளது. விவசாயிகள் நெல் அறுவடை இயந்திரங்களை உழவர் செயலி மூலம் வாடகைக்கு எடுத்துக் கொள்ளலாம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வேளாண்துறை வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், தமிழ்நாட்டில் நடப்பு சம்பா மற்றும் தாளடிப் பருவங்களில் நெற்பயிர் 35.16 இலட்சம் ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இது கடந்த 2023-24ஆம் ஆண்டைவிட 22 இலட்சம் ஏக்கர் கூடுதலாகும். டெல்டா மாவட்டங்களில் நெற்பயிர் 13 இலட்சம் ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டைவிட ஒரு இலட்சம் ஏக்கர் கூடுதலாகும். தற்போது பரவலாக நெல் அறுவடை நடைபெற்று வருகின்ற நிலையில் விவசாயிகளின் தேவைக்கேற்ப உரிய இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு நெல் கொள்முதலும் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், நெல் அறுவடை இயந்திரங்கள் தட்டுப்பாடின்றி விவசாயிகளுக்குக் கிடைத்திடவும், விவசாயிகள் தங்கள் நெற்பயிரை காலத்தே அறுவடை செய்திடவும், வேளாண்மை பொறியியல் துறை மற்றும் தனியார் மூலம். மொத்தம் 4,505 நெல் அறுவடை இயந்திரங்களையும் 51 வைக்கோல் கூட்டும் கருவிகளையும் 51 வைக்கோல் கட்டும் கருவிகளையும் "உழவர் செயலி" இல் உள்ள சேவைகள் வாயிலாகப் பெற்றுக்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே, நெல் அறுவடை இயந்திரங்கள் தேவைப்படும் விவசாயிகள். உழவர் செயலியில் உள்ள விவரங்களை கீழ்க்கண்ட வழிமுறைகளைப் பின்பற்றி வாடகைக்கு எடுத்து பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

> ஆண்ட்ராய்டு கைபேசியில், கூகிள் ப்ளே ஸ்டோரில் இருந்து "உழவர் செயலியைப்" பதிவிறக்கம் செய்து நிறுவிக்கொள்ளுதல்.
> செயலியில் கேட்கப்படும் தங்களது சுயவிவரங்களைப் பதிவு செய்துகொள்ளுதல் (முதல்முறை மட்டும்),
> "வேளாண் இயந்திரங்கள் வாடகைக்கு" என்ற மெனுவை கிளிக் செய்து, அதிலுள்ள "தனியார் இயந்திர உரிமையாளர்கள் பற்றி அறிய' என்ற மெனுவை கிளிக் செய்தல்,
> தனியாரால் வாடகைக்கு விடப்படும் "Combine Harvestor / அறுவடை இயந்திரங்கள்" என்ற மெனுவை கிளிக் செய்தல்.
> அடுத்து வரும் திரையில், விவசாயிகள் தமது மாவட்டத்திணையும், வட்டாரத்தினையும் தேர்வு செய்து, 'SEARCH / தேடுக" என்ற சிவப்பு வண்ணக் கட்டத்தைக் கிளிக் செய்தல்.
> அவ்வட்டாரத்தில் உள்ள நெல் அறுவடை இயந்திரங்களை வாடகைக்குவிடத் தயாராக உள்ள உரிமையாளர்களின் பெயர். கைபேசி எண், நெல் அறுவடை இயந்திரத்தின் மாடல் உள்ளிட்ட விவரங்கள் பட்டியலிடப்படும்.
> அப்பட்டியலிலிருந்து. தங்களுக்குத் தேவையான தனியார் நெல் அறுவடை இயந்திரத்தின் உரிமையாளரின் கைபேசி எண்ணை கிளிக் செய்தால், உரிமையாளரின் கைபேசிக்கு நேரடியாக அழைப்பு செல்லும்,
> இயந்திர உரிமையாளருடன் நேரடியாக கைபேசி மூலம் கலந்துரையாடி, நெல் அறுவடை இயந்திரத்தினை விவசாயிகள் வாடகைக்கு எடுத்து பயன்படுத்திக் கொள்ளலாம்.

இவ்வாறு செய்யும்போது, ஒருவேளை தங்கள் வட்டாரத்தில் தனியார் நெல் அறுவடை இயந்திரங்கள் வாடகைக்குக் கிடைக்கவில்லையெனில், அம்மாவட்டத்திலேயே உள்ள பிற வட்டாரங்களிலோ அல்லது பிற மாவட்டங்களில் உள்ள ஏதேனுமொரு வட்டாரத்திலோ மேலே குறிப்பிடப்பட்ட முறையில் தனியார் நெல் அறுவடை இயந்திரங்களின் உரிமையாளர்களைத் தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.

மேலும், 4,505 நெல் அறுவடை இயந்திரங்களின் விவரங்களை வேளாண்மைப் பொறியியல் துறையின் இணையதளம் https://eed.tn.gov.in/tn/hervester// மூலமாக அறிந்து கைபேசி மூலம் தொடர்பு கொண்டும் பயனடையலாம் என்று தெரிவித்துக்கொள்ளப்படுகிறது. மேறும் விவரங்களுக்கு, வேளாண் பொறியியல் துறையின் தலைமைப் பொறியாளர் அலுவலக அலைபேசி எண் 8838224538 ஐ தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் படிக்க | TN Cabinet: அமைச்சரவையில் பொன்முடிக்கு கூடுதல் பொறுப்பு - ராஜகண்ணப்பனுக்கு மீண்டும் செக்!

மேலும் படிக்க | TN Budget 2025: பட்ஜெட்டில் ஸ்டாலின் போடும் பலே திட்டம்... 2026 தேர்தலே டார்கெட்!

மேலும் படிக்க | தமிழ்நாடு பட்ஜெட் 2025 : கலைஞர் உரிமைத் தொகை குறித்து வரப்போகும் முக்கிய அறிவிப்பு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News