மு.க.ஸ்டாலின் முதல்வராக பதவியேற்பில் கண் கலங்கிய துர்கா ஸ்டாலின்!

முதல் அமைச்சராக முக ஸ்டாலின் பதவிப்பிரமாணம் செய்தபோது அவரது மனைவி துர்கா ஸ்டாலின் கண்களில் கண்ணீர் துளிர்த்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்துவதாக இருந்தது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : May 7, 2021, 11:52 AM IST
மு.க.ஸ்டாலின் முதல்வராக பதவியேற்பில் கண் கலங்கிய துர்கா ஸ்டாலின்! title=

தமிழக சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணி கட்சி அமோக வெற்றி பெற்றது. இந்த தேர்தலில் திமுக கூட்டணி 159 இடங்களில் வெற்றி பெற்றது. இதில் திமுகவுக்கு மட்டும் 125 இடங்கள் கிடைத்தது. உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட கூட்டணி கட்சியைச் சேர்ந்த 8 எம்.எல்.ஏ.க்களையும் சேர்த்து 133 எம்.எல்.ஏ.க்கள் திமுகவில் மொத்தமாக உள்ளனர்.

இதற்கிடையில் தமிழக முதல் அமைச்சராக திமுக (DMK) தலைவர் மு.க.ஸ்டாலின் (MK Stalin) இன்று பதவி ஏற்றார். அவரை தொடர்ந்து துரைமுருகன் உள்ளிட்ட திமுக எம்.எல்.ஏக்கள் 33 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர். ஒவ்வொருவரும் உறுதிமொழியை வாசித்து அமைச்சர்களாக பதவியேற்றனர். இன்றைய பதவியேற்பு விழா கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெற்றது. ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அனைவருக்கும் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். அத்துடன் ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார் ஆளுநர்.

ALSO READ | Live Update: தமிழகத்தின் புதிய முதல்வரானார் மு.க.ஸ்டாலின்: ஆளுநர் மாளிகையில் பதவியேற்பு விழா

இந்நிலையில் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் பதவியேற்பு விழாவில் அவரது மனைவி துர்கா ஸ்டாலின், மகன் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட குடும்பத்தார் கலந்து கொண்டனர். அப்போது 'ஸ்டாலின் முத்துவேல் கருணாநிதி எனும் நான்' என்று கூறிய மு.க.ஸ்டாலின் முதலமைச்சருக்கான பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்புப் பிரமாணமும் எடுத்துக்கொண்டார்.  

அப்போது மு.க.ஸ்டாலின் உறுதிமொழியை ஏற்ற போது, அவரது மனைவி துர்கா ஸ்டாலின் கண்களில் கண்ணீர் துளிர்த்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்துவதாக இருந்தது. பின்னர் யாரும் கவனிக்காவண்ணம் அவர் கண்களை துடைத்துக் கொண்டார். இந்த விழாவில் கலந்து கொண்ட திமுக இளைஞரணி செயலாளரும், எம்.எல்.ஏவும் ஆன உதயநிதி ஸ்டாலினும் ஸ்டாலின் பதவியேற்பின் போது கண்கலங்கினார். 

ALSO READ | தனது ட்விட்டர் பக்கத்தில் 'Chief Minister of Tamil Nadu' என மாற்றினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!

அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, கல்வி, பொழுதுபோக்கு, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News