1000 நாட்கள் திரையரங்கில் ஓடி வரும் தமிழ் திரைப்படம்! அதுவும் இவரது படமா?

தற்போது புதிய படங்களுக்கே திரையரங்கிற்கு மக்கள் வருவதில்லை. அப்படி இருக்கையில் ஒரு படம் மட்டும் 1000 நாட்களுக்கு மேலாக திரையரங்கில் ஓடி வருகிறது.

1 /6

தமிழகத்தில் சிம்பிவின் விண்ணை தாண்டி வருவாயா படம் தியேட்டரில் 1000 நாட்களுக்கு மேலாக ஓடி சாதனை படைத்துள்ளது. இது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

2 /6

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இன்று முன்னணி ஹீரோவாக இருப்பவர் சிம்பு. பல ஏற்ற இறக்கங்கள் இருந்த போதிலும் தொடர்ந்து படங்கள் நடித்து வருகிறார்.

3 /6

தனது தந்தை டி.ராஜேந்தர் இயக்கிய காதல் அழிவதில்லை படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான சிம்பு, தற்போது அவரது 50 படத்தில் நடிக்க தயாராகி வருகிறார்.

4 /6

சிம்புவிற்கு பெரிய ஹிட் கொடுத்த படம் விண்ணை தாண்டி வருவாயா. கவுதம் மேனன் இயக்கத்தில் சிம்பு, திரிஷா இந்த படத்தில் நடித்து இருந்தனர்.  2010ம் ஆண்டு இப்படம் வெளியானது.

5 /6

இந்நிலையில் சிம்புவின் விண்ணை தாண்டி வருவாயா காதலர் தினத்தை முன்னிட்டு பல திரையரங்கங்களில் வெளியிடப்படுவது வழக்கம். அப்படி ரிலீஸ் செய்யப்பட்ட இப்படம் PVR திரையரங்கில் 1000 நாட்களை தாண்டி ஓடிக்கொண்டு இருக்கிறது.  

6 /6

ரீ-ரிலீஸ் செய்யப்பட்ட ஒரு தமிழ் திரைப்படம் 1000 நாட்களை தாண்டி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருப்பது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இது இப்படத்திற்கு கூடுதல் பெருமை சேர்த்துள்ளது.