வழக்கமான வருமானத்தைத் தரும் பாதுகாப்பான முதலீடு என்ற வகையில், FD முதலீடு சிறந்த தேர்வாக இருக்கும். சிறந்த வருமானத்துடன், வரி விலக்கும் கிடைக்கும். பிப்ரவரி 7, 2025 அன்று, ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை 25 அடிப்படை புள்ளிகள் குறைத்தது. இதைத் தொடர்ந்து சில வங்கிகள் வட்டி விகிதத்தைக் குறைக்கத் தொடங்கியுள்ளன. ஆனால் சில வங்கிகள் மூத்த குடிமக்களுக்கு 5 வருட FDக்கு 9.1% வரை வட்டி அளிக்கின்றன. ரூ. 3 கோடிக்கும் குறைவான FD முதலீடுகளுக்கு இந்த வட்டி விகிதங்கள் பொருந்தும்.
பழைய வரி முறையின் கீழ் ITR தாக்கல் செய்யும் மூத்த குடிமக்களுக்கு, 5 வருட FD இல் முதலீடு செய்வது நன்மை பயக்கும். ஏனெனில் இந்த FD முதலீடுகளுக்கு பிரிவு 80C-ன் கீழ் வரிவிலக்கு பெறுகின்றன. ஆனால் புதிய வரி முறையை தேர்வு செய்பவர்களுக்கு இந்த விலக்கு கிடைக்காது. எனவே, 5 ஆண்டு FD திட்டங்களில் முதலீடு செய்வது என்பது வரி சேமிப்பு மற்றும் முதலீடு ஆகிய இரண்டிற்கும் பயனளிப்பதாக இருக்கும். மூத்த குடிமக்கள் தங்களது வருமானத்தை பொறுத்து எந்த வரி முறை ஏற்றதாக இருக்கும் என்பதை கவனமாக தீர்மானிக்க வேண்டும்.
இந்திய ரிசர்வ் வங்கி பிப்ரவரி 2025 இல் ரெப்போ விகிதத்தை 25 அடிப்படை புள்ளிகள் (25 பிபிஎஸ்) குறைத்துள்ளது. ரெப்போ விகிதம் 6.50% லிருந்து 6.25% ஆக குறைக்கப்பட்டுள்ளது. இதற்குப் பிறகு, ஒருபுறம் பல வங்கிகள் வீட்டுக் கடன் உட்பட அனைத்து வகையான கடன்களுக்கான வட்டி விகிதத்தை குறைத்துள்ளன. மறுபுறம், நிலையான வைப்புத்தொகையின் (FD) வட்டி விகிதங்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
சூர்யோதாய் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி (Suryoday Small Finance)
சூர்யோதாய் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி என்னும் சிறுநிதி வங்கி ரூ.3 கோடிக்கும் குறைவான டெபாசிட்டுகளுக்கான நிலையான வைப்பு (எஃப்டி) வட்டி விகிதங்களைத் திருத்தியுள்ளது. திருத்தப்பட்ட வட்டி விகிதங்கள் பிப்ரவரி 1, 2025 முதல் அமலுக்கு வரும். வங்கி இப்போது FD முதலீடுகளுக்கு பொதுக் குடிமக்களுக்கு ஆண்டுக்கு 4% முதல் 8.60% வரையிலும், மூத்த குடிமக்களுக்கு ஆண்டுக்கு 4.50% முதல் 9.10% வரையிலும் வட்டி வழங்குகிறது.
சிட்டி யூனியன் வங்கி
சிட்டி யூனியன் வங்கி ரூ.3 கோடிக்கும் குறைவான FD மீதான வட்டி விகிதத்தை மாற்றியுள்ளது. திருத்தத்திற்குப் பிறகு, வங்கி 7 நாட்கள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான பிக்ஸட் டெபாஸிட்களுக்கு 5% முதல் 7.50% வரை வட்டி விகிதங்களை வழங்குகிறது. வங்கி தற்போது மூத்த குடிமக்களுக்கு ஆண்டுக்கு 5% முதல் 8% வரை வட்டி விகிதங்களை வழங்குகிறது. வங்கி 333 நாட்களுக்குக்கான எஃப்டிக்களுக்கு அதிக வட்டி விகிதத்தை வழங்குகிறது. பொது மக்கள் 333 நாட்களுக்கு ஆண்டுக்கு 7.50% வட்டியைப் பெறலாம். அதேசமயம் மூத்த குடிமக்கள் 333 நாட்களுக்கு ஆண்டுக்கு 8% வட்டியைப் பெறுகிறார்கள்.
கர்நாடகா வங்கி
கர்நாடகா வங்கி 3 கோடி ரூபாய்க்கும் குறைவான தொகைக்கான FD வட்டி விகிதங்களை திருத்தியுள்ளது. வங்கி தற்போது 7 நாட்கள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான பொதுக் குடிமக்களுக்கு ஆண்டுக்கு 3.50% முதல் 7.50% வரை வட்டி விகிதங்களை வழங்குகிறது. மூத்த குடிமக்களுக்கு, வங்கி அதே காலத்திற்கான எஃப்டி முதலீடுகளுக்கு 3.75% முதல் 8% வரை வட்டி விகிதங்களை வழங்குகிறது. 401 நாட்களுக்கான FD முதலீடுகளுக்கு ஒரு வருடத்திற்கு 7.50% என்ற அதிகபட்ச வட்டி விகிதத்தை வங்கி வழங்குகிறது.
DCB வங்கி
டிசிபி வங்கி ரூ.3 கோடிக்கும் குறைவான எஃப்டிகளுக்கான வட்டி விகிதத்தை குறைத்துள்ளது. இருப்பினும், குறிப்பிட்ட காலத்திற்கான FD முதலீடுகளுக்கு மட்டுமே வட்டி விகிதங்கள் குறைக்கப்பட்டுள்ளன. திருத்தத்திற்குப் பிறகு, DCB வங்கி FD தொகைகளுக்கு ஆண்டுக்கு 3.75% முதல் 8.05% வரை வட்டி விகிதங்களை வழங்குகிறது. 7 நாட்கள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான காலத்திற்கான FD முதலீடுகளுக்கு இந்த வட்டி விகிதம் பொருந்தும். 19 மாதங்கள் முதல் 20 மாதங்கள் வரையிலான எஃப்டியில் பொதுக் குடிமக்களுக்கு அதிகபட்ச வட்டி விகிதமாக 8.05% வட்டி வழங்கப்படுகிறது. அதே காலகட்டத்தில், மூத்த குடிமக்கள் ஆண்டுக்கு 8.55% சம்பாதிக்கலாம். திருத்தப்பட்ட FD விகிதங்கள் பிப்ரவரி 14, 2025 முதல் அமலுக்கு வந்துள்ளது.
ஷிவாலிக் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி
ஷிவாலிக் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி தனது நிலையான வைப்புத்தொகைக்கான (FD) வட்டி விகிதத்தை குறைத்துள்ளது. அதன் இணையதளத்தின்படி, ஷிவாலிக் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி இப்போது பொதுக் குடிமக்களுக்கு ஆண்டுக்கு 3.50% முதல் 8.55% வரையிலும், மூத்த குடிமக்களுக்கு ஆண்டுக்கு 4% முதல் 9.05% வரையிலும் FD மீதான வட்டி விகிதங்களை வழங்குகிறது. பொது மக்கள் 12 மாதங்கள், 1 நாள் மற்றும் 18 மாதங்களுக்கும் குறைவான கால அவகாசத்தில் ஆண்டுக்கு 8.55% என்ற அதிகபட்ச வட்டி விகிதத்தைப் பெறலாம்.
மேலும் படிக்க | PPF முதலீடு... ஓய்வு காலத்தில் மாதம் ரூ.48,000 பென்ஷன் பெறலாம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ