EPFO Update: தனியார் துறை ஊழியர்களுக்கான குறைந்தபட்ச ஓய்வூதியம் அதிகரிக்குமா?

EPFO Minimum Monthly Pension: தனியார் துறை ஊழியர்களுக்கான குறைந்தபட்ச மாத ஓய்வூதியம் 2014 ஆம் ஆண்டு திருத்தப்பட்டு மாதத்திற்கு ரூ.1,000 என்ற அளவில் உள்ளது.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Feb 23, 2025, 08:46 AM IST
  • தனியார் துறை ஊழியர்கள் விரைவில் ரூ.7,500 EPS ஓய்வூதியத்தைப் பெறலாம்.
  • நீண்ட காலமாக நிலுவையில் உள்ள கோரிக்கை.
  • 2014ம் ஆண்டில், மத்திய அரசு குறைந்தபட்ச ஓய்வூதியத்தை மாதத்திற்கு ரூ.1,000 ஆக நிர்ணயித்தது.
EPFO Update: தனியார் துறை ஊழியர்களுக்கான குறைந்தபட்ச ஓய்வூதியம் அதிகரிக்குமா? title=

ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் (EPFO) கீழ் உள்ள தனியார் துறை ஊழியர்கள் நீண்ட காலமாக தங்கள் குறைந்தபட்ச ஓய்வூதியத்தை அதிகரிக்கக் கோரி வருகின்றனர். 2014 முதல் மாதத்திற்கு ரூ.1,000 என்ற அளவில் திருத்தப்பட்ட நிலையில், அப்போதிலிருந்து  மாறாமல் உள்ளது.  EPS-95 ஓய்வூதியதாரர்களின் குழு சமீபத்தில் கடந்த ஜனவரி 10ம் தேதி அன்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து, குறைந்தபட்ச மாத ஓய்வூதிய மாதத்திற்கு ரூ.7,500 என்ற அளவில் அதிகரிக்க வேண்டும் என வலியுறுத்தியது.

நீண்ட காலமாக நிலுவையில் உள்ள கோரிக்கை

EPFO அமைப்பால் நிர்வகிக்கப்படும் பணியாளர் ஓய்வூதியத் திட்டம் (EPS-95), 1995ம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. 2014ம் ஆண்டில், மத்திய அரசு குறைந்தபட்ச ஓய்வூதியத்தை மாதத்திற்கு ரூ.1,000 ஆக நிர்ணயித்தது. இந்நிலையில், ஓய்வூதியத்தை அதிகரிக்குமாறு அரசாங்கத்திடம் பலமுறை கோரிக்கை வைத்து வருகிறது. விலைவாசி அதிகரித்து வரும் நிலையில், இந்த தொகை செலவுகளை ஈடுசெய்ய இது போதுமானதாக இல்லை என்று வாதிடுகின்றனர். 

மேலும், குறைந்தபட்ச ஓய்வூதியத்தை நிர்ணயிக்க அரசு 2014ம் ஆண்டில்  முடிவு செய்த போதிலும், சுமார் 36.60 லட்சத்திற்கும் அதிகமான ஓய்வூதியதாரர்கள் மாதத்திற்கு ரூ.1,000 க்கும் குறைவாகவே  ஓய்வூதியம் பெறுகின்றனர் என போராட்டக் குழு கூறுகின்றனர். EPS - 95 திட்டத்தை நம்பியுள்ள ஓய்வு பெற்றவர்களுக்கு நிதி பாதுகாப்பை உறுதி செய்ய கணிசமான அதிகரிப்பு அவசியம் என்று அவர்கள் வாதிடுகின்றனர்.

தனியார் துறை ஊழியர்கள் விரைவில் ரூ.7,500 EPS ஓய்வூதியத்தைப் பெறலாம்

ஓய்வூதியத்தை அதிகரிக்க தொடர்ந்து கோரிக்கை வைக்கும் EPS-95 தேசிய போராட்டக் குழு, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுடனான சந்திப்பின் போது, ​​தூதுக்குழுவின் கோரிக்கைகள் கருணையுடன் மதிப்பாய்வு செய்யப்படும் என்று அரசு உறுதியளித்ததாகக் கூறியது. அதன் பின்னர், அரசாங்கம் உறுதியான நடவடிக்கை எடுத்து ஓய்வூதிய உயர்வை விரைவில் அறிவிக்க வேண்டும் என்று குழு வலியுறுத்தியுள்ளது.

தொழிலாளர் அமைப்புகளின் கோரிக்கை

EPS-95 ஓய்வூதியதாரர்கள் மாதத்திற்கு ரூ.7,500 குறைந்தபட்ச ஓய்வூதியத்தைக் கோரும் அதே வேளையில், நிதியமைச்சருடன் பட்ஜெட்டுக்கு முந்தைய ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற தொழிற்சங்கங்கள் ஓய்வூதியத்தை ரூ.5,000 என்ற அளவில் அதிகரிக்க வேண்டும் என பரிந்துரைத்தன. இருப்பினும், EPS-95 தேசிய போராட்டக் குழு, மிகக் குறைந்த தொகையை முன்மொழிந்ததற்காக தொழிலாளர் அமைப்புகளை  விமர்சித்தது. ஓய்வூதியதாரர்களின் அடிப்படை நிதித் தேவைகளை கூட பூர்த்தி செய்ய போதுமானதாக இருக்காது என்று கூறியது.

மேலும் படிக்க | PPF முதலீடு... ஓய்வு காலத்தில் மாதம் ரூ.48,000 பென்ஷன் பெறலாம்

EPS என்றால் என்ன?

ஊழியர் வருங்கால வைப்பு நிதி (EPF) என்பது ஒரு ஓய்வூதிய சேமிப்புத் திட்டமாகும், இதில் உறுப்பினர்கள் தங்கள் அடிப்படை சம்பளத்தில் 12 சதவீதத்தை தங்கள் வருங்கால வைப்பு நிதிக்கு பங்களிக்கின்றனர். ஊழியர்கள் நிறுவனம் அல்லது முதலாளிகள் இதற்கு சமமாக பங்களிக்கின்றனர். இருப்பினும், முதலாளியின் பங்களிப்பில் 8.33 சதவீதம் ஊழியர் ஓய்வூதியத் திட்டத்திற்கு (EPS) ஒதுக்கப்படுகிறது, மீதமுள்ள 3.67 சதவீதம் EPF கணக்கிற்கு செல்கிறது.

அரசாங்கம் குறைந்தபட்ச ஓய்வூதியத்தை ரூ.7,500 ஆக உயர்த்துமா?

ஓய்வூதியம் பெறுவோர் மற்றும் தொழிலாளர் சங்கங்களின் அதிகரித்து வரும் அழுத்தத்தால், EPS ஓய்வூதியத்தை திருத்துவது குறித்து அரசாங்கம் பரிசீலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தக் கோரிக்கையை மறுபரிசீலனை செய்வதாக நிதியமைச்சர் உறுதியளித்திருப்பது ஓய்வூதியதாரர்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும், அரசாங்கம் அவர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுமா என்பது நிச்சயமற்றதாகவே உள்ளது.

மேலும் படிக்க |  8வது ஊதியக்குழு முக்கிய கோரிக்கைகள்: கூடுதல் ஓய்வூதியம் முதல் பதவி உயர்வு வரை..... காத்திருக்கும் ஜாக்பாட் அறிவிப்புகள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News