ஒருங்கிணைந்த பென்ஷன் திட்டத்திற்கு ₹8500 கோடி... ஏப்ரல் 1 முதல் நாடு முழுவதும் அமல்

Unified Pension Scheme: பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் கொண்டுவர வேண்டும் என மத்திய அரசு ஊழியர்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்து வந்த நிலையில், மத்திய அரசு கடந்த ஆண்டு ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் தொடர்பான அறிவிப்பை வெளியிட்டது. 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Feb 22, 2025, 07:45 PM IST
  • OPS திட்டத்தின் பல அம்சங்களை கொண்ட UPS.
  • கூடுதல் சுமையை ஏற்க தயாராக உள்ள அரசு.
  • நீண்டகாலமாக நிலுவையில் உள்ள கோரிக்கை.
ஒருங்கிணைந்த பென்ஷன் திட்டத்திற்கு ₹8500 கோடி... ஏப்ரல் 1 முதல் நாடு முழுவதும் அமல் title=

Unified Pension Scheme: பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் கொண்டுவர வேண்டும் என மத்திய அரசு ஊழியர்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்து வந்த நிலையில், மத்திய அரசு கடந்த ஆண்டு ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் தொடர்பான அறிவிப்பை வெளியிட்டது. தேசிய ஓய்வூதிய முறையின் (NPS) கீழ், உத்திரவாத ஓய்வூதியம் அளிக்கும், UPS ஒரு விருப்ப திட்டமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் ஏற்கனவே NPS திட்டத்தின் கீழ் உள்ள மத்திய அரசு ஊழியர்களுக்குப் பயனளிக்கும். UPS என்னும் ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் 2025 ஏப்ரல் 1ம் தேதி முதல் அமலுக்கு வரும். 

கூடுதலாக ரூ.1,500 கோடி நிதி

ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்காக, அடுத்த நிதியாண்டிற்கான பட்ஜெட்டில் மத்திய அரசு ரூ.7,000 கோடியை ஒதுக்கியுள்ளது. மேலும் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தின் (UPS) கீழ் அதன் ஊழியர்களுக்கான ஓய்வூதியமாக 50% உறுதி செய்யப்பட்ட பங்களிப்பை மதிப்பிட்ட பிறகு, இதற்கு கூடுதலாக ரூ.1,500 கோடியை கூடுதலாக வழங்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

அரசின் பங்களிப்பு 18.5% ஆக அதிகரிக்கும்

ஏப்ரல் 1ம் தேதி முதல் அமலுக்கு வரும் UPS திட்டத்தின் கீழ், ஊழியர்களின் பங்களிப்பு 10% (அடிப்படை ஊதியம் + அகவிலைப்படி நிவாரணம்) ஆக மாறாமல் இருக்கும். அரசாங்கத்தின் பங்களிப்பு தற்போதுள்ள 14% (சந்தையுடன் இணைக்கப்பட்ட தேசிய ஓய்வூதிய முறை அல்லது NPS திட்டத்தின் கீழ்) என்ற அளவில் இருந்து 18.5% ஆக அதிகரிக்கும். NPS திட்டத்தின் கீழ் ஏற்கனவே ஓய்வு பெற்றவர்களும் இந்த நன்மைக்கு தகுதியுடையவர்கள். கடந்த காலத்தில் ஓய்வு பெற்றவர்களுக்கு அவர்கள் ஏற்கனவே திரும்ப பெற்ற பணத்தை சரிசெய்த பிறகு நிலுவைத் தொகை வழங்கப்படும்.

கூடுதல் சுமையை ஏற்க தயாராக உள்ள அரசு 

ஏப்ரல் 1 முதல் NPS (UPS) திட்டத்தின் கீழ் வரும் ஊழியர்களுக்கு கூடுதல் பங்களிப்பிற்காக அரசாங்கம் ரூ.7,000 கோடி வழங்குவது, அதனால் ஏற்படும் கூடுதல் சுமையை ஏற்க மத்திய அரசு தயாராக உள்ளது என்பதை எடுத்துக்காட்டுகிறது என்று அதிகாரி ஒருவர் கூறினார். திட்டத்திற்கான நிதி தேவையை இப்போது மதிப்பிடுவது கடினமாக இருந்தாலும், அடுத்த ஆண்டு மேலும் ரூ.1,000-1,500 கோடி தேவைப்படலாம் என்று முதற்கட்ட மதிப்பீடு தெரிவிக்கிறது என்று அரசு அதிகாரி மேலும் கூறினார்.

நிதி சுமை மேலும் அதிகரிக்கும்

ஓய்வூதிய நிதியில், அரசாங்கத்தின் பங்களிப்பு 14% பங்களிப்பு அடிப்படையில் மத்திய அரசின் ஆண்டு பங்களிப்பு நிதியாண்டு 2021-ல் ரூ.12,917 கோடியாகவும், 2024ம் நிதியாண்டில் ரூ.17,297 கோடியாகவும் இருந்தது. பங்களிப்பு விகிதம் 18.5% ஆக அதிகரிப்பதால் அரசாங்கத்திற்கு ஏற்படும் கூடுதல் செலவு ஒவ்வொரு ஆண்டும் சம்பள கமிஷன் உயர்வு அடிப்படையில் தொடர்ந்து அதிகரிக்கும். வருடாந்திர சம்பள உயர்வு மற்றும் புதிய ஆட்சேர்ப்பு காரணமாக நிதி சுமை மேலும் அதிகரிக்கும். உத்தரவாத ஓய்வூதியத்தை வழங்கினாலும், பங்களிப்பு இல்லாத முந்தைய பழைய ஓய்வூதிய முறையைப் போல (OPS) அதிக நிதிச் சுமையை ஏற்படுத்தாமல் UPS திட்டம் அரசாங்கத்தினால் நிர்வகிக்கக்கூடியதாக இருக்கும் என்று அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

மேலும் படிக்க | PM Kisan 19வது தவணை 2 நாட்களில் வருகிறது: தவணைத் தொகையை செக் செய்யும் எளிய வழி இதோ

OPS திட்டத்தின் பல அம்சங்களை கொண்ட UPS 

OPS திட்டத்தின் பல அம்சங்களை UPS கொண்டிருக்கும். குறைந்தபட்சம் 25 ஆண்டுகள் சேவையை முடிக்கும் அனைத்து ஊழியர்களுக்கும், ஓய்வு பெற்ற பிறகு, கடைசியாகப் பெற்ற சம்பளத்தில் (கடந்த 12 மாத சேவையின் சராசரி அடிப்படை ஊதியம்) 50% என்ற அளவில் உத்திரவாத ஓய்வூதியத்தை இது வழங்கும். மேலும், ஓய்வூதியம் பெறுபவரின் கணவன் அல்லது மனைவிக்கு அவர்/அவள் இறந்த பிறகு கடைசியாகப் பெற்ற ஓய்வூதியத்தில் 60% குடுமப் ஓய்வூதியமாக வழங்கப்படும். மேலும், குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் சேவையைக் கொண்ட அனைத்து ஊழியர்களுக்கும் மாதத்திற்கு ரூ.10,000 உறுதியான ஓய்வூதியம் கிடைக்கும்.

நீண்டகாலமாக நிலுவையில் உள்ள கோரிக்கை

பிரதமர் நரேந்திர மோடி ஜூன் 2024 மூன்றாவது முறையாக ஆட்சிக்கு வந்த பிறகு, நீண்டகாலமாக நிலுவையில் உள்ள கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், NPS திட்டத்தின் கீழ் மத்திய அரசின் 2.3 மில்லியன் ஊழியர்களுக்கான புதிய உத்திரவாத ஓய்வூதியத் திட்டதிற்கு ஆகஸ்ட் மாதம் அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

மேலும் படிக்க | PF உறுப்பினர்களுக்கு 3 குட் நியூஸ்: வட்டி விகிதம், ஓய்வூதிய உயர்வு... 6 நாட்களில் முக்கிய அறிவிப்பு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News