Tamil Nadu Weather News: வருகிற பிப்ரவரி 28 ஆம் தேதி முதல் மார்ச் 1, 2 மற்றும் 3, 4, தேதிகளில் பரவலாக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மீண்டும் கனமழை எச்சரிக்கை.
Heavy Rain Alert: தமிழகத்தில் கோடை வெப்பம் அதிகரித்து வரும் நிலையில், தற்போது புதிய அறிவிப்பாக தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்யக்கப்படும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சற்றுமுன் வெளியான முக்கிய அறிவிப்பின்படி மக்களே உஷாராக இருங்கள். மீண்டும் கனமழை எச்சரிக்கை. தமிழகத்தில் இன்று முதல் அடுத்த ஏழு நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பை சென்னை வானிலை ஆய்வு வெளியிட்டுள்ளது. இதில் குறிப்பாக எந்தெந்த தேதிகளில் மாவட்டங்களுக்கு கனமழை பெய்யக்கூடும் என்பதை பற்றி கூறப்பட்டு உள்ளது. தமிழக வானிலை குறித்து பார்ப்போம்.
தமிழகத்தில் கோடை வெப்பம் அதிகரித்து வரும் நிலையில், தற்போது புதிய அறிவிப்பாக தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்யக்கப்படும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி தமிழ்நாட்டில் கனமலையின் தீவிரம் உறுதியாகி இருக்கிறது. அதிலும் குறிப்பிட்ட சில மாவட்டங்களில் வருகிற பிப்ரவரி 28 ஆம் தேதி முதல் படிப்படியாக கனமழை அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது. பிப்ரவரி 28 ஆம் தேதி மிதமான மழையாக தொடங்கி மார்ச் 1, 2 மற்றும் மூன்றாம் தேதிகளில் பரவலாக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
தமிழ்நாட்டில் தென்கடலோர மாவட்டங்கள் ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி போன்ற மாவட்டங்களில் மழை கூடுதலாக பெய்ய வாய்ப்புள்ளது. எனவே வெளியே செல்லும்போது தேவையான பாதுகாப்புடன் செல்லுங்கள். தென்கடலோர மாவட்டங்களில் இருக்கக்கூடிய பல்வேறு பகுதிகளில் கனமலையானது பிப்ரவரி 28 ஆம் தேதி தொடங்கி மார்ச் 1, 2, 3 மற்றும் நான்காம் தேதிகள் வரை விட்டுவிட்டு பரவலாக கனமழை தொடர்ந்து பெய்ய வாய்ப்பு இருக்கிறது.
தென்கடலோர மாவட்டங்கள் முழுவதுமாக பலத்த மழை பதிவாகும் தூத்துக்குடி, திருநெல்வேலி, ராமநாதபுரம், கன்னியாகுமரி மாவட்டங்கள் மற்றும் தென்காசி மாவட்டத்தில் சில பகுதிகளில் பரவலக கனமலையானது பதிவாகும். தென்மாவட்டத்தில் பிப்ரவரி 28 ஆம் தேதியிலிருந்து மார்ச் நான்காம் தேதி வரைக்கும் பரவலாக தொடர்ந்து மழை நீடிக்கும்.
டெல்டா மாவட்டத்தில் நாகை, தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்களில் மட்டும் மழை பெய்யும். புதுக்கோட்டையில் சில பகுதிகளில் பரவலாக மிதமான மழை இருக்கும். நாகை, தஞ்சை, திருவாரூர் மாவட்டத்தில் சில பகுதிகளில் பரவலாக மிதமான மழையை எதிர்பார்க்கலாம். அதேபோல் மயிலாடுதுறை, அரியலூர், பெரம்பலூர், திருச்சியில் வானம் மேகமூட்டமாக இருக்கும் அந்தப் பகுதியில் லேசான மழையானது ஆங்காங்கே பதிவாக வாய்ப்பிருக்கிறது.
மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியிருக்கும் நீலகிரி, கோயம்புத்தூர், தேனி மாவட்டங்களில் வானம் மேகமூட்டமாக இருக்கும். அத்நேரம் தென்காசியில் மட்டும் இம்மாதம் இறுதியில் மழை எதிர்பார்க்கலாம். அதேபோல மதுரை, திண்டுக்கல், விருதுநகர், சிவகங்கை மாவட்டங்களில் வானம் மேகமூட்டமாக இருக்கும். சில பகுதிகளில் லேசான மழை எதிர்பார்க்கலாம்.
சென்னையை பொறுத்தவரைக்கும் வறண்ட வானிலை இருக்கும். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் வறண்ட வானிலை நிலவும்.