திராவிட சமுதாயத்தை திருத்தி உலகத்திலுள்ள பிற சமுதாயத்தினரை போல் அறிவும் மானமுள்ள சமுதாயத்தை உருவாக்குவதே தனது கடமை என்று கூறி எவ்வாறு தந்தை பெரியார் செயல்பட்டாரோ அதே போல முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் தமிழக மக்களுக்காக தொடர்ந்து உழைத்து கொண்டிருப்பதாக ஆ.ராசா பெருமிதம் அடைந்துள்ளார். மேலும் நீலகிரி மாவட்டத்தின் நீண்ட கால பிரச்சனையாக உள்ள கூடலூர், பந்தலூர் பகுதியின் செக்சன் 17, ஜென்ம பூமி பிரச்சனையை மூன்று மாதங்களுக்குள் முடித்துக் கொடுக்க தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளதாகவும் உறுதி அளித்தார். நீலகிரி மாவட்டத்தில் முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்து பழங்குடியின மக்கள் உள்ளிட்ட பல்வேறு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கும் விழா உதகையில் உள்ள பழங்குடியினர் பண்பாட்டு மைய வளாகத்தில் நடைபெற்றது.
மேலும் படிக்க | ரேஷன் கார்டில் இந்த பிரச்சனை இருந்தால் கலைஞர் உரிமைத் தொகை கிடைக்காது..!
இதில் நீலகிரி MP ஆ.ராசா, மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு ஆகியோர் கலந்து கொண்டு முடிவுற்ற பணிகளை தொடங்கி வைத்து பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினர். விழாவில் பேசிய நீலகிரி எம்பி ஆ. ராசா தமிழக முதலமைச்சர் அவர்கள் நீலகிரி மாவட்டத்திற்கு சிறப்பு கவனம் செலுத்தி திட்டங்களை நிறைவேற்றி கலைஞர் எப்படி இந்த மாவட்டத்திற்கு முக்கியதுவம் அளிப்பாரோ அதே போல முக்கியத்துவம் அளித்து வளர்ச்சிப் பணிகளை செய்து வருவதாக கூறினார். மேலும் நீலகிரி மாவட்டத்தில் பழங்குடியின மக்களுக்கு ஆயிரம் வீடுகள் கட்டிக் கொடுக்கும் திட்டம் செயல்படுத்தபட இருப்பதாக கூறிய ஆ.ராசா தமிழக சட்டமன்ற கூட்டத்தில் ஆளுநர் உரை மீதான விவாதத்தின் போது தமிழக முதல்வர் பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்திருப்பதாக கூறினார்.
குறிப்பாக தமிழகத்தில் இந்த ஆண்டு புதிதாக மூன்றாயிரம் பேருந்துகள் செயல்பாட்டுக்கு வரும், நகர்ப்புற சாலை மேம்பாடு திட்டத்திற்காக 3,750 கோடி ரூபாய் உடனடியாக வழங்கப்படும், தமிழ்நாடு முழுவதும் ஒரு லட்சம் பேருக்கு வீட்டுமனை பட்டா வழங்கப்படும் என்ற அறிவிப்புகளும், பெண்களுக்கு எதிரான குற்றங்களை விரைந்து விசாரித்து தண்டனை வழங்கும் வகையில் 7 தனி நீதிமன்றங்கள் அமைக்கப்படும் போன்ற அறிவிப்புகள் பெரும் வரவேற்பை பெற்றிருப்பதாக கூறினார். மேலும் திராவிட சமுதாயத்தை திருத்தி உலகத்திலுள்ள பிற சமுதாயத்தினரை போல் அறிவும் மானமுள்ள சமுதாயத்தை உருவாக்குவதே தனது கடமை என்று கூறி எவ்வாறு தந்தை பெரியார் செயல்பட்டாரோ அதே போல முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் தமிழக மக்களுக்காக தொடர்ந்து உழைத்து கொண்டிருப்பதாக பெருமிதம் தெரிவித்தார் ஆ.ராசா.
நீலகிரி மாவட்டத்தில் கூடலூர் மற்றும் பந்தலூர் பகுதிகளில் நிலவி வரும் Section17 ஜென்மம் பூமி நிலப்பிரச்சினை நீண்ட காலமாக இருப்பதாகவும் பிரச்சனை வருகின்ற மூன்று மாதங்களுக்குள் முடித்துக் கொடுக்க வேண்டும் என தமிழக முதல்வர் உத்தரவிட்டு இருப்பதாகவும், எனவே பிரச்சனையை தீர்ப்பது குறித்து அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி இருப்பதாகவும் தெரிவித்தார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ