சனி பெயர்ச்சிக்கு முன் சனி அஸ்தமனம்: அதிர்ஷ்ட மழையில் நனையப்போகும் ராசிகள் இவைதான்!!

Shani Ast: இன்னும் சில நாட்களில் சனி பகவான் அஸ்தமனம் ஆகவுள்ளார். இதனால் எந்த ராசிகளுக்கு அதிக நன்மைகள் கிடைக்கும்? யாருக்கு பிரச்சனைகள் அதிகரிக்கும்? சனி அஸ்தமனம் ராசிபலனை இங்கே காணலாம்.

Sani Peyarchi Palangal: அனைத்து கிரகங்களிலும் சனி பகவான் மிக முக்கியமான கிரகமாக கருதப்படுகிறார். சனி பகவான் மார்ச் மாதம் மீன ராசியில் பெயர்ச்சி ஆகவுள்ளார். சனி பெயர்ச்சிக்கு முன்னதாக சனி அஸ்தமனம் நிகழவுள்ளது. இதன் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும். சில ராசிகளுக்கு இதனால் அதிகப்படியான நற்பலன்கள் கிடைக்கும். சில ராசிகளுக்கு இதனால் பிரச்சனைகள் உண்டாகலாம். மேஷம் முதல் மீனம் வரை சனி அஸ்தமன ராசிபலனை இந்த பதிவில் காணலாம்.

1 /13

மேஷம்: மேஷ ராசிக்காரர்களுக்கு சனி அஸ்தமனம் காரணமாக வேலையில் முன்னேற்றம் ஏற்படும். குடும்ப உறுப்பினர்களின் முழுமையான ஒத்துழைப்பு கிடைக்கும். வேலையில் பதவி மற்றும் கௌரவம் அதிகரிக்கும். இருப்பினும், செலவுகள் அதிகரிக்கக்கூடும், மேலும் வணிகத்தில் அதிக கவனம் தேவைப்படும்.

2 /13

ரிஷபம்: ரிஷப ராசிக்காரர்களுக்கு குடும்ப உறுப்பினர்களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படக்கூடும். பரஸ்பர மோதல் காரணமாக, உங்கள் வேலையில் கவனம் செலுத்த முடியாமல் போகலாம். அலுவலக வேலையில் இருப்பவர்கள் அதிகாரிகளுடன் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். உடல்நிலையிலும் கவனம் தேவை.

3 /13

மிதுனம்: சனி பெயர்ச்சிக்கு முன்னதாக வரும் சனி அஸ்தமனத்தால் மிதுன ராசிக்காரர்கள் பல்வேறு வகையான பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம். இந்த நேரத்தில் பிறரிட்ம் பேசும்போது எச்சரிக்கையாக இருப்பது முக்கியம். ஏனெனில் அவசர முடிவுகள் சிரமங்களை உருவாக்கக்கூடும். சனி அஸ்தமன காலத்தில் வியாபாரத்தில் முதலீடு செய்வதைத் தவிர்க்கவும். இல்லையெனில் இழப்புகள் ஏற்படக்கூடும். பணச் செலவுகளில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.

4 /13

கடகம்: கடக ராசியில் பிறந்தவர்களுக்கு சனி அஸ்தமனம் நல்ல பலன்களை அளிக்கும். இந்த நேரத்தில் நல்ல பலன்கள் கிடைக்கும். ஆனால் வேலையில் கவனமாக இருக்க வேண்டும். வேலையில் சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். மூதாதையர் சொத்துக்களால் பயனடைவீர்கள். இருப்பினும், திருமண வாழ்க்கையில் பிரச்சினைகள் அதிகரிக்கக்கூடும்.

5 /13

சிம்மம்: சிம்ம ராசிக்காரர்கள் சனி பெயர்ச்சிக்கு முன் வரும் சனி அஸ்தமனத்தால் கலவையான பலன்களை பெறுவார்கள். சனி பகவான் அஸ்தம நிலையில் இருக்கும் போது சில விஷயங்களில் அதிக கவனம் செலுத்த வேண்டியிருக்கும். கவனக்குறைவால் பிரச்சினைகள் அதிகரிக்கக்கூடும். மேலும் நண்பர்களிடமிருந்து உங்களுக்கு ஆதரவு கிடைக்காது. வேலையில் இருப்பவர்கள் பணியிடத்தில் சிரமங்களை சந்திக்க நேரிடும். மேலும் நிதி நிலைமையும் திருப்திகரமாக இருக்காது. உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.

6 /13

கன்னி: கன்னி ராசியில் பிறந்தவர்கள் குடும்பத்தில் அமைதியைப் பேண வேண்டும். இல்லையெனில் குழந்தைகளின் முன்னேற்றத்தில் தடைகள் ஏற்படக்கூடும். மாணவர்கள் தங்கள் படிப்பில் குறிப்பாக கவனம் செலுத்த வேண்டியிருக்கும். தொழிலில் சூழ்நிலை திருப்திகரமாக இருக்காது. திருமண வாழ்க்கையில் பிரச்சினைகள் ஏற்படக்கூடும்.

7 /13

துலாம்: துலாம் ராசிக்காரர்களுக்கு சனி அஸ்தமனத்தின் தாக்கத்தால் அன்றாட வாழ்க்கையில் மாற்றங்கள் ஏற்படக்கூடும். பணியிடத்தில் அவசரத்தைத் தவிர்க்க வேண்டும். அப்படி செய்தால், பல வித நன்மைகள் கிடைக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். பங்குச் சந்தையில் லாபம் கிடைக்கும். இது நிதி நிலையை வலுப்படுத்தும்.

8 /13

விருச்சிகம்: சனி பெயர்ச்சிக்கு (Sani Peyarchi) முன் வரும் சனி அஸ்தமனம் விருச்சிக ராசிக்காரர்களுக்கு கலவையான பலன்களை அளிக்கும். விருச்சிக ராசிக்காரர்கள் தங்கள் குடும்ப வாழ்க்கையில் வேறுபாடுகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். குடும்ப உறவுகள் வலுவாக இருக்காது. வேலையில் இருப்பவர்களுக்கு வேலை அழுத்தம் அதிகரிக்கக்கூடும். இது வேலையை இழக்கும் அபாயத்திற்கும் வழிவகுக்கும். தொழிலில் சிக்கல்கள் அதிகரிக்கக்கூடும்.

9 /13

தனுசு: தனுசு ராசிக்காரர்களுக்கு சனி பகவானின் அஸ்தமனம் பல்வேறு நன்மைகளை அளிக்கும். சகோதர சகோதரிகளிடமிருந்து உங்களுக்கு ஆதரவு கிடைக்கும். உங்கள் பணி பாராட்டப்படும். நீண்ட பயணம் மேற்கொள்ளும் வாய்ப்பும் உண்டாகும். 

10 /13

மகரம்: மகர ராசிக்காரர்கள் சனி பகவான் அஸ்தமனத்தால் சில சிரமங்களை சந்திக்க நேரிடும். வேலையில் மூத்த அதிகாரிகளுடன் கருத்து வேறுபாடுகள் இருக்கும். இது வாழ்க்கையில் ஏற்ற தாழ்வுகளை ஏற்படுத்தக்கூடும். இந்த நேரத்தில் எதிரிகளின் செயல்பாடு அதிகரிக்கும். ஆகையால் கவனமாக இருப்பது நல்லது. உடல்நலமும் திருப்திகரமாக இருக்காது.

11 /13

கும்பம்: கும்ப ராசியில் பிறந்தவர்கள் சனி அஸ்தமன நிலையில் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இந்த நேரத்தில் உங்களுக்கு பண வரவு அதிகமாகும். வேலையில் லாபம் ஈட்ட வாய்ப்பு உள்ளது. புதிய வேலை தேடிக்கொண்டு இருக்கும் நபர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வியாபாரத்திலும் நல்ல லாபம் கிடைக்க வாய்ப்புள்ளது. இருப்பினும், திருமண வாழ்க்கையில் எந்த இணக்கமும் இருக்காது. இதன் காரணமாக சில பிரச்சினைகள் ஏற்படக்கூடும்.

12 /13

மீனம்: மீன ராசிக்காரர்களுக்கு, சனி பெயர்ச்சிக்கு பின் வரும் சனி அஸ்தமனம், குடும்ப வாழ்க்கையில் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தும். இருப்பினும், எதிரிகள் உங்களைத் தொந்தரவு செய்யலாம். மேலும் உங்கள் வாழ்க்கையில் சில சவால்களைச் சந்திக்க நேரிடும். சில நேரங்களில் பணம் பெறுவதில் தடைகள் ஏற்படலாம். வியாபாரத்திலும் சிக்கல்கள் அதிகரிக்கக்கூடும், போட்டியாளர்கள் உங்களுக்கு சவால்களை உண்டுபண்ணலாம்.

13 /13

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.