ஐபிஎல் 2025-ல் மும்பை அணி தனது முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக விளையாட உள்ளது. இந்த போட்டியில் ஹர்திக் பாண்டியாவிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஐபிஎல் 2025 போட்டிகள் மார்ச் 22ஆம் தேதி தொடங்க உள்ளது. இதற்கான அட்டவணையை பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. பைனல் மே 25ம் தேதி நடைபெற உள்ளது.
முதல் போட்டியில் கொல்கத்தா மற்றும் ராயல் சேலஞ்ச் பெங்களூர் அணிகள் விளையாடிகிறது. இரண்டாவது போட்டியில் ராஜஸ்தான் மற்றும் சன்ரைசர்ஸ் அணியில் விளையாடுகிறது.
மூன்றாவது போட்டியில் சென்னையில் மும்பை இந்தியன்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோத உள்ளது. இந்த போட்டியின் மீது அதிக எதிர்பார்ப்பு உள்ளது.
ஆனால் இந்த போட்டியில் மும்பை அணியின் தற்போதைய கேப்டன் ஹர்திக் பாண்டியா விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு மெதுவாக ஓவர் வீசியதால் அபராதமும் ஒரு போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்டது.
இதனால் சென்னை அணிக்கு எதிரான போட்டியில் ஹர்திக் பாண்டியா கேப்டனாக செயல்பட மாட்டார். அவருக்கு பதில் வேறொருவர் கேப்டனாக நியமிக்கப்பட வேண்டும்.
இந்நிலையில் அந்த போட்டியில் ரோகித் சர்மா மும்பை அணியின் கேப்டனாக இருப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. இருப்பினும் ஹர்திக் பாண்டியா இல்லையென்றால் சூர்ய குமார் யாதவ் கேப்டனாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.