செரிமான ஆரோக்கியம் பாதிக்கப்படும் போது ஏற்படும் பிரச்சனைகளில் ஒன்று அசிடிட்டி. நமது வயிறு அதிகப்படியான இரைப்பை அமிலத்தை உற்பத்தி செய்யத் தொடங்கும் போது அமிலத்தன்மை அல்லது அசிடிட்டி பிரச்சனை ஏற்படுகிறது. இது வயிற்றுப் பகுதியில் எரிச்சல் மற்றும் அசௌகரியத்தை ஏற்படுத்துகிறது. நெஞ்செரிச்சல், அஜீரணம், புளித்த ஏப்பம் போன்ற பிரச்சனைகளும் அடிக்கடி காணப்படுகிறது.
அசிட்டிட்டி பிரச்சனை எப்போதாவது ஏற்படுவது இயல்பு தான். ஆனால் அடிக்கடி ஏற்படுவது இரைப்பை உணவுக்குழாய் ரிஃப்ளக்ஸ் நோய் (GERD) அல்லது பெப்டிக் அல்சர் போன்ற பிரச்சனைகளைக் குறிக்கின்றன. ஆசிட்டி பிரச்சனையை அலட்சியமாக எண்ணக் கூடாது. இதனை தவிர்க்க மருத்துவரை கலந்தாலோசிக்காமல், தானாகவே, சந்தையில் கிடைக்கும் ஆண்டிஆசிட் மருந்துகளை எடுத்துக் கொள்ளும் வழக்கம் உள்ளது. ஆனால், இது நல்லதல்ல
ஆன்டாசிட் மருந்துகள்
ஆன்டாசிட் என்பது 5 முதல் 10 வினாடிகளில் அமிலத்தன்மையிலிருந்து நிவாரணம் அளிப்பதாக கூறப்படும் சந்தையில் கிடைக்கும் ஒரு மாத்திரை அல்லது தூள் ஆகும். பலர் இதன் மூலம் உடனடி நிவாரணம் பெறுகிறார்கள். ஆனால் பல சுகாதார நிபுணர்கள் (Health Tips) அதனை அடிக்கடி பயன்படுத்துவது குறித்து கவலை தெரிவிக்கின்றனர்.
ஆன்டாசிட்கள் எவ்வாறு வேலை செய்கின்றன?
ஆன்டாசிட்கள் வயிற்று அமிலத்தை நடுநிலையாக்குவதன் மூலம் அசௌகரியம் மற்றும் நெஞ்செரிச்சலைக் குறைக்கின்றன. இருப்பினும், மோசமான உணவு, மன அழுத்தம் அல்லது GERD அல்லது வயிற்றுப் புண் போன்ற இரைப்பை குடல் கோளாறுகள் போன்ற பிரச்சனைகளை அவை தீர்க்காது. மேம்போக்கான நிவாரணத்தை மட்டுமே அளிக்கும்.
ஆன்டாசிட் மருந்துகளின் பக்க விளைவுகள்
ஆன்டாக்சிட் மருந்துகளை நீண்ட காலம் பயன்படுத்துவது, அடிக்கடி அமிலத்தன்மை ஏற்படவழிவகுக்கும், அங்கு மருந்து செயல்பட்ட பிறகு அமில உற்பத்தி அதிகரிக்கிறது. இது தவிர, இது அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை உறிஞ்சுவதையும் பாதிக்கலாம், இது ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் பாதிக்கிறது. அடிக்கடி ஆன்டாக்சிட் மருந்துகள் மூலம் நிவாரணம் பெறுவதற்குப் பதிலாக, உங்கள் வாழ்க்கை முறை மற்றும் உணவுப் பழக்கங்களை மேம்படுத்திக் கொள்வதுடன், தேவைப்பட்டால் மருத்துவரிடம் செல்லுங்கள்.
ஆசிடிட்டி ஏற்படுவதற்கான சில முக்கிய காரணங்கள்
1. ஆரோக்கியமற்ற மோசமான உணவு (காரமான மற்றும் எண்ணெய் உணவு)
2. அதிக பதற்றம்
3. அதிகமாக டீ மற்றும் காபி குடிப்பது
4. மது அருந்துதல்
5. அளவிற்குஅதிகமாக உண்பது
6. புகைபிடித்தல்
7. உடல் பருமன்
8. உடல் செயல்பாடுகள் இல்லாமை
9. சாப்பிட்ட உடனேயே படுத்துக் கொள்ளும் பழக்கம்
10. தண்ணீர் குறைவாக குடிக்கும் பழக்கம்.
மேலும் படிக்க | சிறுநீரக பிரச்சனை முதல் நீரிழிவு வரை... அளவுக்கு அதிகமான இளநீர் நல்லதல்ல
அசிடிட்டி பிரச்சனை ஏற்படாமல் இருக்க செய்ய வேண்டியவை
1. எண்ணெய் மற்றும் காரமான உணவுகளை குறைவாக உண்ணுதல்
2. தயிர் போன்ற புரோபயாடிக்குகளை உணவுடன் சாப்பிடுங்கள்
3. இரவு தூங்குவதற்கு 2-3 மணி நேரத்திற்கு முன் உணவு உண்ணுங்கள்
4. வெறும் வயிற்றில் டீ அல்லது காபி குடிக்காதீர்கள் மற்றும் அதன் உட்கொள்ளலைக் கட்டுப்படுத்துங்கள்.
5. மதுவை முற்றிலும் விலக்குங்கள்
6. அதிகமாக சாப்பிட கூடாது
7. புகைபிடிப்பதை நிறுத்துங்கள்
8. உடல் பருமனைக் குறைத்தல்
9. உடற்பயிற்சி செய்யுதல்
10. சாப்பிட்ட பிறகு 15 நிமிடங்கள் நடக்கவும்
11. தினமும் 7 முதல் 8 கிளாஸ் தண்ணீர் குடிக்கவும்.
மேலும் படிக்க | குழந்தைகள் பேக் செய்யப்பட்ட சிப்ஸ் சாப்பிட்டால் இவ்வளவு ஆபத்தா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ