ஈரோடு மாவட்டம், அந்தியூர் மற்றும் பவானி பகுதிகளில் உள்ள ஏரிகளுக்கு தண்ணீர் திறந்துவிட தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்!
ஈரோடு மாவட்டம், அந்தியூர் வட்டம் வரட்டுப்பள்ளம் நீர்தேக்கத்தில் இருந்து பழைய ஆயக்கட்டு ஏரிகளான கெட்டிசமூத்திரம், அந்தியூர், பிரம்மதேசம், வேம்பத்தி மற்றும் ஆப்பக்கூடல் ஆகிய ஏரிகளுக்கு தண்ணீர் திறந்துவிடுமாறு வேளாண் பெருங்குடி மக்களிடம் இருந்து தண்ணீர் திறந்துவிடுமாறு கோரிக்கைகள் வந்துள்ள நிலையில், வேளாம் பெருமக்களின் வேண்டுகோளினை ஏற்று, ஈரோடு மாவட்டம், அந்தியூர் வட்டம் வரட்டுப்பள்ளம் நீர்தேக்கத்தில் இருந்து பழைய ஆயக்கட்டு ஏரிகளான கெட்டிசமூத்திரம், அந்தியூர், பிரம்மதேசம், வேம்பத்தி மற்றும் ஆப்பக்கூடல் ஆகிய ஏரிகளுக்கு தண்ணீர் திறந்துவிட தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் உத்தரவு பிரப்பித்துள்ளார்.
தமிழக முதல்வர் உத்தரவின் படி கெட்டிசமூத்திரம், அந்தியூர், பிரம்மதேசம், வேம்பத்தி மற்றும் ஆப்பக்கூடல் ஆகிய ஏரிகளுக்கு வரும் 10.01.2019 - 21.01.2019 வரை தண்ணீர் திறந்துவிடப் படம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் ஈரோடு மாவட்டம் அந்தியூர் மற்றும் பவானி வட்டங்களில் 1039 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் எனவும் தமிழக அரசு செய்தி குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் விவசாயப்பெருமக்கள், நீரை சிக்கனமாக பயன்படுத்தி, நீர் மேலாண்மை மேற்கொண்டு உயர் மகசூல் பெற வேண்டும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார்.