கார் விபத்தில் இருந்து நூலிழையில் தப்பிய கங்குலி.. நடந்தது என்ன?

Ganguly Car Accident: இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி சென்ற கார் விபத்துக்குள்ளானது. 

Written by - R Balaji | Last Updated : Feb 21, 2025, 02:19 PM IST
  • சவுரவ் கங்குலி கார் விபத்து
  • நுலிழையில் உயிர் தப்பிய கங்குலி
கார் விபத்தில் இருந்து நூலிழையில் தப்பிய கங்குலி.. நடந்தது என்ன?  title=

Ganguly Car Accident: இந்திய அணியின் முன்னாள் கேப்டான் சவுரவ் கங்குலி சென்ற கார் இன்று  விபத்துக்குள்ளானது. அதில் அதிர்ஷ்டவசமாக அவர் தப்பி உள்ளார். 

கங்குலி சென்ற கார் விபத்து

மேற்கு வங்க மாநிலம் புர்த்வான் மாவட்டத்தில் உள்ள ஒரு பல்கலைக்கழக நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சென்று கொண்டிருந்தார். இதற்காக துர்காபூர் எக்ஸ்பிரஸ்வே சாலையில் சவுரவ் கங்குலி காரில் சென்று கொண்டு இருந்தார். அதே வழியில் ஒரு லாரியும் சென்று கொண்டிருந்தது. 

விபத்தை தவிப்பதற்காக அந்த லாரி திடீரென பிரேக் பிடித்ததாகக் கூறப்படுகிறது. இதனை எதிர்பாராத காங்குலி காரின் ஓட்டுநர் உடனடியாக பிரேக் பிடித்தார். இவரது கார் பின்னே வந்த கார்கள் எதிர்பார்காமல் அடுத்தடுத்து மோதி உள்ளன. 

மேலும் படிங்க: சாம்பியன்ஸ் டிராபி 2025: AFG vs SA போட்டியை எப்போது, ​​எங்கு இலவசமாக பார்க்கலாம்

இந்த விபத்தில் கார்களுக்கு பாதிப்படைந்தது. ஆனால் காரின் உள்ளே இருந்தவர்களுக்கு எவ்வித காயமும் இன்றி தப்பித்தனர். இதனை அடுத்து தாமதமாக கங்குலி அந்த பல்கலைக்கழக நிகழ்விற்கு சென்றார். அந்நிகழ்வில் பேசிய கங்குலி தனக்கு ஏற்பட்ட விபத்து குறித்து எதுவும் வெளிக்காட்டிக்கொள்ளவில்லை. 

நிகழ்ச்சியில் பேசிய கங்குலி 

அந்த நிகழ்ச்சியில், "நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். பர்த்வானில் இருப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. பர்த்வான் விளையாட்டு சங்கம் நீண்ட காலமாக எனது வருகையை கோரி வந்தது. தற்போது இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்வது மகிழ்ச்சி அளிக்கிறது. இங்கிருந்து பல திறமையான வீரர்கள் உருவாகி உள்ளனர். எதிர்காலத்திலும் மாவட்டத்தில் இருந்து திறமையானவர்களை தொடர்ந்து தேட வேண்டும்" எனத் தெரிவித்தார். 

சவுரவ் கங்குலி 1992ஆம் ஆண்டு ஒருநாள் போட்டியில் அறிமுகமானார். அவரது தலைமையில் 2002 சாம்பியன்ஸ் டிராபி இந்தியா வென்றது. அதேபோல் 2003 ஒருநாள் உலகக் கோப்பை இறுதி போட்டி வரை இந்திய அணி சென்றது குறிப்பிடத்தக்கது. இச்செய்தி அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தினாலும், கங்குலிக்கு காயம் ஏதும் ஏற்படாதது அவர்களுக்கு நிமதியை கொடுத்துள்ளது.     

மேலும் படிங்க: சஹால் - தனஸ்ரீ வர்மா விவாகரத்து உறுதி! நீதிமன்றம் உத்தரவு... மணமுறிவுக்கு என்ன காரணம்?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News