Mahendra Singh Dhoni IPL 2024: பிரபல கிரிக்கெட் வர்ணனையாளரான ஹர்ஷா போக்ளே தோனிக்கும் தமிழ்நாட்டுக்கும் உள்ள பிணைப்பு பற்றி கூறும்போது ஒருமுறை இப்படிச் சொல்லியிருந்தார்."தமிழ்நாட்டில் எம்ஜிஆர் மற்றும் ரஜினிகாந்தை கொண்டாடும் வரிசையில் தற்போது தோனியும் இருக்கிறார்" என கூறியிருந்தார். இது 100 சதவீதம் உண்மை எனலாம். கிரிக்கெட் வீரர்கள் என்றாலே தமிழ்நாடு என்றில்லை இந்தியா முழுவதுமே அவர்கள் மீதான மோகம் ஜாஸ்திதான்.
தமிழ்நாட்டிலும் சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி ஏன் வெளிநாட்டு வீரர்களையும் கொண்டாடும் ரசிகர்கள் கூட்டம் அதிகம் இருந்தாலும் அவர்களை எல்லாம் தாண்டி, அதாவது கிரிக்கெட் ரசிகர்களை எல்லாம் தாண்டி அனைத்து தரப்பு மக்களாலும் கொண்டாடப்படும் வீரராக தோனி உயர்ந்து நிற்கிறார். இந்திய அணிக்கு மூன்று ஐசிசி கோப்பைகளை வென்றுகொடுத்தது ஒருபுறம் என்றால், சிஎஸ்கே அணிக்கு அவர் தலைமையில் கிடைத்த 5 கோப்பைகளும் ரசிகர்களை அவரை நோக்கி ஈர்த்த முக்கிய விஷயம் எனலாம்.
சுத்தி நின்று ஊரே பார்க்க...
அதாவது வெற்றி தோல்விகளை தாண்டி போட்டியின் மீதும், வாழ்க்கையின் மீதும் மகேந்திர சிங் தோனி கொண்டுள்ள அந்த வித்தியாசமான மற்றும் நேர்த்தியான பார்வையும் அணுகுமுறையும்தான் கோடிக்கணக்கான மக்களை அவர் மீது மதிப்பு வைக்க தூண்டியுள்ளது எனலாம். தற்போது 42 வயதில் நாடு முழுவதும் சென்று விளையாடினால் அவர் விளையாடுவதை பார்க்க ஆயிரக்கணக்கில் மக்கள் கூட்டம் கூட்டமாக மைதானத்திற்கு வருகை தருகின்றனர்.
மேலும் படிக்க | இனி டாஸ் கிடையாது! கிரிக்கெட்டில் பிசிசிஐ கொண்டுவந்துள்ள புதிய மாற்றம்!
நேற்று கூட இந்த சீசனில் சேப்பாக்கத்தின் கடைசி லீக் ஆட்டம் நேற்று நடைபெற்றது. அந்த போட்டியில் சிஎஸ்கே நேற்று தோல்வியடைந்திருந்தால் தோனியின் கடைசி போட்டியாக கூட அது அமைந்திருக்கும். இருப்பினும் வெற்றி பெற்றுள்ளதால் பிளே ஆப் வாய்ப்பு அதிகமாகியுள்ளது. குவாலிஃபயர் 2, இறுதிப்போட்டியும் சேப்பாக்கத்தில்தான் நடைபெறுகிறது என்பதால் தோனி மீண்டும் சேப்பாக்கத்தில் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னையில் கோயில் கட்டப்படும்...
இந்நிலையில், சென்னையில் கூடிய விரைவில் தோனிக்கு கோயில் கட்ட வாய்ப்புள்ளது என மூத்த இந்திய வீரரும், முன்னாள் சிஎஸ்கே வீரருமான அம்பதி ராயுடு (Ambati Rayudu) தெரிவித்துள்ளார். ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் பேசிய ராயுடு கூறுகையில், "அவர் சென்னையின் கடவுள், வரும் ஆண்டுகளில் தோனியின் கோயில்கள் சென்னையில் கட்டப்படும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.
2011இல் உலகக் கோப்பையை வென்று ஒட்டுமொத்த இந்தியாவுக்கே மகிழ்ச்சியைக் கொண்டு வந்தவர், மேலும் பல ஐபிஎல் மற்றும் சாம்பியன்ஸ் லீக் பட்டங்களுடன் சென்னைக்கு மகிழ்ச்சியைக் கொண்டு வந்தவர். அவர் தனது வீரர்களின் மீது நம்பிக்கையை வெளிப்படுத்துபவர். எப்போதும் அணிக்காக அதைச் செய்தவர். , நாட்டுக்காகவும் சரி, சிஎஸ்கேகாகவும் சரி..." என்றார்.
ஆர்சிபியை வீழ்த்துமா சிஎஸ்கே
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 13 போட்டிகளில் விளையாடி 7 போட்டிகளில் வெற்றி பெற்றும், 6 போட்டிகளில் தோல்வியையும் சந்தித்துள்ளது. இன்னும் ஒரே ஒரு லீக் போட்டி மட்டுமே மீதம் உள்ளது. வரும் மே 18ஆம் தேதி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெறும் அந்த லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியுடன் (RCB vs CSK) சிஎஸ்கே மோத உள்ளது.
ஆர்சிபி, டெல்லி, லக்னோ, குஜராத் அணிகள் பிளே ஆப் கனவோடு காத்திருக்கும் நிலையில், அனைத்து அணிகளிலும் மண்ணைத் தூவி பிளே ஆப் சுற்றுக்கு செல்ல வேண்டும் என்றால் சிஎஸ்கே அடுத்த போட்டியில் ஆர்சிபியை வீழ்த்த வேண்டும். ஆர்சிபி தனது அடுத்த போட்டியில் சிஎஸ்கேவை அதிக நெட் ரன்ரேட் உடன் வென்றால் மட்டுமே பிளே ஆப் சுற்று வாய்ப்பு கிடைக்கும். மற்ற அணிகளின் வெற்றி தோல்விகளும் ஆர்சிபியின் பிளே ஆப் வாய்ப்பை உறுதிப்படுத்தும்.
மேலும் படிக்க | CSK vs RR : என்னது Match Fixingஆ? மீண்டும் சர்ச்சையில் சிக்கிய சிஎஸ்கே!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ