பாகிஸ்தானில் (Pakistan) பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதைக் காரணம் காட்டி பாகிஸ்தான் அணியுடனான கிரிக்கெட் தொடரை, நியூசிலாந்தும், இங்கிலாந்தும் ரத்து செய்தன.
இரு அணிகளும் வெளியேறியதால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (PCB) பெரும் நிதி இழப்பை சந்திக்க நேரிடும் என ஊடகங்களில் வெளியான செய்திகள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் மேலும் ஒரு பேரிடியாக, பிரியாணி செலவு தொடர்பாக வந்துள்ள ₹27 லட்சத்திற்கான பிரியாணி பில், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
கிட்டத்தட்ட 18 ஆண்டுகளுக்குப் பிறகு, நியூசிலாந்து (New Zealand) அணி செப்டம்பர் 11 அன்று பாகிஸ்தான் வந்தடைந்தது. மூன்று ஒருநாள் மற்றும் ஐந்து டி 20 சர்வதேச போட்டிகளில் விளையாட திட்டமிடப்பட்டிருந்த நிலையில், பாகிஸ்தானில் பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக, தொடரில் பங்கேற்க போவதில்லை என அறிவித்து விட்டு, 8 நாட்கள் தங்கியிருந்த நியூசிலாந்து அணி, சென்ற சனிக்கிழமை மாலை இஸ்லாமாபாத்தில் இருந்து தனி விமானத்தில் துபாய்க்கு புறப்பட்டது.
நியூசிலாந்து அணியின் பாதுகாப்பிற்காக, இஸ்லாமபாத் மற்றும் ராவல்பிண்டியில் பாகிஸ்தான் இராணுவத்துடன் 500 க்கும் மேற்பட்ட காவல் துறை அதிகாரிகள் பணியில் அமர்த்தப்பட்டனர். ஒவ்வொருவருக்கும் ஒரு நாளைக்கு இரண்டு முறை பிரியாணி வழங்கப்பட்டது. இதன் பில் தொகை சுமார் ₹ 27 லட்சம் என கூறப்படுகிறது.
ALSO READ | மீண்டும் கிரிக்கெட் போட்டிகளை நடத்த தடை செய்யப்படுகிறதா பாகிஸ்தான்?
ஐந்து போட்டிகள் கொண்ட T20 தொடருக்காக லாகூருக்குச் செல்வதற்கு முன், ராவல்பிண்டியில் நடந்த மூன்று ஒருநாள் போட்டிகளின் முதல் போட்டியில் டாஸ் போடுவதற்கு சிறிது நேரத்துக்கு முன்பு இந்த தொடரிலிருந்து விலகுவதாக நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் திடீரென அறிவித்தது. இதனால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், ரசிகர்கள் மிகவும் அதிர்ச்சி அடைந்தனர்.
நியூசிலாந்தின் அணியின் திடீர் இந்த முடிவு திடீர் முடிவு, பாகிஸ்தான் கிரிகெட் வாரியத்தை திக்கு முக்காட செய்தாலும், இந்த முடிவு எங்களின் வளர்ச்சியை எந்த வகையிலும் பாதிப்பை ஏற்படுத்தாது என்று நம்புவதாக அறிக்கை வெளியிட்டது. அண்டை நாடான ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியைப் பிடித்துள்ளதால், மற்ற நாடுகளை பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள தயங்குகின்றனர் என்றும், உலக கிரிக்கெட்டில் மீண்டும் எங்கள் மீதான நம்பகத்தன்மையை ஏற்படுத்த நாங்கள் அதிக முயற்சியை மேற்கொண்டோம் எனவும் கூறியது.
ALSO READ | தமிழக வீரர் நடராஜனுக்கு கொரோனா : தொடருமா IPL?
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR