இந்திய அணி சமீபமாக நடந்து முடிந்த டெஸ்ட் போட்டிகளில் கடுமையாக சொதப்பியது. நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சொந்த மண்ணில் தோல்வி அடைந்தது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் தொடரில் படுதோல்வி அடைந்தது என டெஸ்ட் தொடர்களில் மிக மோசமான விளையாடியது.
இதற்கு ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் விமசகர்கள் மத்தியில் கடும் விமர்சனங்கள் எழுந்தன. மூத்த வீரர்களாக ரோகித் சர்மா, விராட் கோலி மீது கடும் விமர்சனங்கள் வைக்கப்பட்டன. குறிப்பாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் தனது 81வது சதத்தை விளாசிய விராட் கோலி, அதன் பிறகு கடுமையாக சொதப்பினார்.
ரஞ்சி விளையாட வலியுறுத்தல்
தொடர்ந்து ஒரே மாதிரியாக விக்கெட்டை இழந்தது விமர்சனங்களுக்கு உள்ளானது. மூத்த வீரர்கள் ரசிகர்கள் என அனைவரும் மூத்த வீரர்களான விராட் கோலி, ரோகித் சர்மா ஆகியோ உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாட வேண்டும் என கூறி வந்தனர்.
மேலும் படிங்க: IND vs ENG: ஹர்திக் பாண்டியா செய்த புதிய சாதனை! இதுவரை யாரும் செய்ததில்லை!
இந்திய கட்டுப்பட்டு வாரியமும் (பிசிசிஐ) இந்திய அணியின் வீரர்கள் யாராக இருந்தாலும் ஃபார்மில் இல்லையென்றால் கண்டிப்பாக உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாட வேண்டும் என்ற விதிமுறையை விதித்தது.
ரஞ்சியிலும் சொதப்பல்
அதன்படி இந்திய அணியின் வீரர்கள் ரஞ்சியில் விளையாடி வருகின்றனர். விராட் கோலியும் 2012ஆம் ஆண்டுக்கு பிறகு மீண்டும் டெல்லி அணிக்கு திரும்பி உள்ளார். ஆனால் அங்கு சென்றும் விராட் கோலி 6 ரன்னில் வெளியேறினார். இது பல்வேறு விமர்சனங்களை பெற்று வருகிறது.
இந்த நிலையில், இந்திய அணியின் முன்னாள் வீரர் அம்பத்தி ராயுடு அவருக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து எக்ஸ் தளத்தில், தற்போதைக்கு விராட் கோலி ரஞ்சி போட்டிகளில் விளையாட தேவை இல்லை.
விராட் கோலிக்கு மதிப்பு கொடுங்கள்
81வது சதம் அடித்தபோதும் அவரது நுட்பம் நன்றாகவே இருந்தது. இனியும் அது நன்றாகவே இருக்கும். அவரை யாரும் வற்புறுத்த வேண்டாம். அவருக்கு சிறிது நேரம் தேவை. அவருக்கு கொஞ்சம் மரியாதை அளியுங்கள். அவரை நம்புங்கள். அவரை தனியாக இருக்க விடுங்கள் என பதிவிட்டுள்ளார்.
மேலும் படிங்க: "டெல்லி டீமில் இருக்க ரூ.1 லட்சம் கேட்டார்கள்".. விராட் கோலி பகிர்ந்த பகீர் செய்தி!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ