குரு வக்ர நிவர்த்தி: 3 நாட்களில் நல்ல காலம் ஆரம்பம்... இந்த ராசிகளுக்கு வெற்றிகள் குவியும்

Guru Vakra Nivarthi Palangal: இன்னும் 3 நாட்களில் குரு வக்ர நிவர்த்தி அடையவுள்ளார். இதனால் அதிக நற்பலன்களை அடையவுள்ள ராசிகள் எவை? இதை பற்றி இந்த பதிவில் விரிவாக காணலாம்.

Guru Peyarchi Palangal: சுப கிரகமாக உள்ள குரு பகவான் அனைத்து ராசிக்காரர்களுக்கும் பல வித நற்பலன்களை அளிக்கிறார். ஒருவர் மீது குருவின் பார்வை இருந்தால், அவர் வாழவில் பல உச்சங்களை தொடுகிறார். பிப்ரவரி 4 ஆம் தேதி நடக்கவுள்ள குரு வக்ர நிவர்த்தியால் அதிகப்படியான நற்பலன்களை அடையவுள்ள ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.

1 /11

கல்வி, செல்வம், திருமண வாழ்க்கை, குழந்தைகள், செழிப்பு ஆகியவற்றின் காரணி கிரகமாக இருக்கும் குரு பகவான் சுப கிரகமாக பார்க்கப்படுகிறார். ஒருவர் மீது குரு பார்வை இருந்தால், அவர் வாழ்வில் அனைத்து வித நன்மைகளையும் பெறுகிறார்.

2 /11

குரு பகவான் தற்போது ரிஷப ராசியில் உள்ளார். அவர் மே மாதம் நடக்கவுள்ள குரு பெயர்ச்சிக்கு பிறகு மிதுன ராசிக்கு பெயர்ச்சி ஆவார். அதற்கு முன்னதாக பிப்ரவரி நான்காம் தேதி அவர் ரிஷபத்தில் வக்ர நிவர்த்தி அடையவுள்ளார்.

3 /11

குரு வக்ர நிவர்த்தியின் தாக்கம் பெரும்பாலும் அனைத்து ராசிகளிலும் காணப்படும். எனினும், சில ராசிகளுக்கு குரு பகவான் கூடுதல் நன்மைகளை வழங்குவார். இவர்கள் வாழ்வில் அதிக ஆதாயங்கள் இருக்கும். அந்த அதிர்ஷ்ட ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.

4 /11

மேஷம்: குரு வக்ர நிவர்த்தி மேஷ ராசிக்காரர்களுக்கு லாபகரமான பலன்களை அளிக்கும். வணிகத்தில் முன்னேற்றம் ஏற்படலாம். பண வரவு அதிகமாகும். அலுவலக பணிகளிலில் இருப்பவர்களுக்கு ஊதிய உயர்வும் பதவி உயர்வும் கிடைக்க வாய்ப்புள்ளது. குடும்பத்தில் மகிழ்ச்சியும் அன்பும் இருக்கும். வெளிநாடு செல்ல திட்டமிட்டிருந்தால், அது இப்போது நடக்கும். இந்த வெளிநாட்டு பயணத்தால் ஆதாயமான பலன்கள் கிடைக்கும்.

5 /11

கடகம்: கடக ராசிக்காரர்களுக்கு, குரு வக்ர நிவர்த்தி மற்றும் மே மாதம் நடக்கவுள்ள குரு பெயர்ச்சியின் தாக்கதால் சாதகமான பலன்கள் கிடைக்கும். சமூகத்தில் கௌரவம் அதிகரிக்கும். தைரியம் அதிகரிக்கும். உங்கள் சகோதரருடன் உங்களுக்கு சிறந்த ஒருங்கிணைப்பு இருக்கும். குருவின் அருளால் குருவின் பார்வையில் பல விஷயங்கள் எளிதாகிவிடும். கடக ராசியில் பிறந்தவர்களுக்கு, குரு வக்ர நிவர்த்தி மிகவும் நல்லதாக இருக்கும்.

6 /11

கன்னி: பிப்ரவரி மாத குரு வக்ர நிவர்த்தியும் மே மாத குரு பெயர்ச்சியும் கன்னி ராசிக்காரர்களுக்கு அனுகூலமான பலன்களை அளிக்கும். அதிர்ஷ்டத்தின் முழுமையான ஆதரவு கிடைக்கும். வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். உறவினர்கள் மற்றும் நண்பர்களின் ஆதரவும் அன்பும் கிடைக்கும். குருவின் பார்வை உங்கள் மீது தாக்கத்தை ஏற்படுத்தும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கும்.

7 /11

மகரம்: குரு வக்ர நிவர்த்தி மற்றும் மே மாதம் நடக்கவுள்ள குரு பெயர்ச்சி ஆகியவை மகர ராசிக்காரர்களுகு மங்களகரமானதாக இருக்கும். குழந்தைகள் மூலம் நல்ல செய்திகள் கிடைக்கும். சரியான முடிவுகளை எடுப்பீர்கள். பல வித பயணங்களை மேற்கொள்வீர்கள். இதனால் அனுகூலமான பலன்கள் உருவாகும். குரு அருளால் செல்வம் பெருகும். உறவினர்கள் மற்றும் நண்பர்களுடனான உறவு மேம்படும். 

8 /11

கும்பம்: கும்ப ராசிக்காரர்களுக்கு குரு வக்ர நிவர்த்தி அதிக நன்மைகளை அளிக்கும். இவர்களது வாழ்வில் வெற்றிகள் குவியும், நீண்ட நாட்களாக தடைப்பட்டிருந்த பல பணிகள் இப்போது நல்லபடியாக நடந்து முடியும். பொருளாதார நிலை மேன்மையடையும்.

9 /11

மாணவர்கள் கல்வியில் வெற்றி பெற, 'குரு பிரம்மா குரு விஷ்ணு, குரு தேவோ மகேஸ்வர; குரு சாஷாத் பரப்பிரம்மா, தஸ்மை ஸ்ரீகுருவே நமஹ' என்ற இந்த ஸ்லோகத்தை தினமும் பாராயணம் செய்யலாம்.

10 /11

குரு பகவானின் விசேஷ அருள் பெற, வியாக்கிழமைகளில் ஆலயங்களுக்கு சென்று குரு பகவானின் சன்னிதியில் கொண்டைக்கடலை மாலை போடலாம். இது தவிர, வீட்டிலும் கொண்டைக்கடலை சுண்டல் செய்து நைவேத்தியம் செய்யலாம்.

11 /11

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்தூள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.