முதல் டி20: இன்று நடைபெறுமா? இல்லையா?

Last Updated : Oct 7, 2017, 09:37 AM IST
முதல் டி20: இன்று நடைபெறுமா? இல்லையா? title=

இந்தியா – ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 போட்டி இன்று இரவு 7 மணியளவில் ராஞ்சியில் தொடங்குகிறது.

ஒருநாள் தெடரில் ஆஸ்திரேலியாவை 4-1 என கணக்கில் வீழ்த்தி இந்தியா தொடரை கைப்பற்றியது, எனினும் டி20 தொடரில் அனைத்து போட்டிகளிலும் வெல்வதை குறிக்கோளாய் கொண்டு கோலி-ன் படை களமிரங்க உள்ளது.

கடந்த ஆண்டு ஜனவரி மாதம் ஆஸ்திரேலியவில் நடைப்பெற்ற இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைப்பெற்ற டி20 போட்டிகளில் சொந்த மண்ணில் வைத்து 3-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தியது. 

இதுவரையில் இரு அணிகளுக்கும் இடையே 12 டி20 போட்டிகள் நடைப்பெற்றுள்ளது. இதில் இந்தியா 9 போட்டிகளில் வெற்றிப்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே இந்தியாவிடம் ஆசி., ஒருநாள் தொடரை இழந்த நிலையில் இந்த டி20 தொடரை வெல்லும் முனைப்பில் ஆஸ்திரேலியா களமிரங்குகிறது.

இந்நிலையில் ராஞ்சியில் அடுத்த இரு நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. எனவே இன்று நடைபெறவிருக்கும் டி20 போட்டி கேள்விகுறியாகவே உள்ளது!

Trending News