சிம்மத்திற்கு பெயர்ச்சியாகும் சுக்கிரன், சிம்ம ராசியினரையே படுத்தி எடுப்பார்! 6 ராசிகளுக்கு எச்சரிக்கை!

July 31st Venus Transit :ஜூலை 31-ம் தேதி சூரியனின் ராசிக்குள் பிரவேசிக்கும் சுக்கிரன், ஆகஸ்ட் 25-ம் தேதி வரை அந்த ராசியில் சஞ்சரிபார். சுக்கிரனின் இந்த சஞ்சாரத்தால் 6 ராசிக்காரர்கள் எச்சரிக்கையாக இருப்பது நல்லது...  

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jul 24, 2024, 12:32 PM IST
  • ஜூலை 31 சுக்கிரன் பெயர்ச்சி
  • சுக்கிரன் சஞ்சாரத்தால் 4 ராசிகளுக்கு எச்சரிக்கை
  • சூரியனின் ராசியில் சுக்கிரன்
சிம்மத்திற்கு பெயர்ச்சியாகும் சுக்கிரன், சிம்ம ராசியினரையே படுத்தி எடுப்பார்! 6 ராசிகளுக்கு எச்சரிக்கை! title=

Shukra Gochar In Aadi Month : அழகுக்கும் ஆடம்பரத்துக்கும் காரகரான சுக்கிரன் கிரகம், ஜூலை மாத இறுதியில் சிம்ம ராசிக்கு பெயர்ச்சியாகிறார். அங்கு ஏற்கனவே இருக்கும் புதனுடன் இணையும் சுக்கிரன் சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களைக் கொடுப்பார். புதன் கொடுத்தால், சுக்கிரன் கெடுப்பார். ஆகஸ்ட் மாத மத்தியில் சூரியன், சிம்ம ராசிக்கு பெயர்ச்சியாகும் ஆவணி மாதத்தில் சூரியனுடன் சேரும் போதும் சுக்கிரன் சில ராசிகளுக்கு பிரச்சனைக்கான காரணகர்த்தாவாக மாறுவார்.

இந்நிலையில், சுக்கிரன் பெயர்ச்சி காரணமாக ஆகஸ்ட் மாதத்தில், கடகம், சிம்மம், தனுசு, மகரம், மிதுனம், விருச்சிகம் உட்பட 6 ராசிக்காரர்கள் கடும் மன உலைச்சலுக்கு உள்ளாவார்கள். சுக்கிரனின் சஞ்சாரத்தால் அவயோகம் பெறும் ராசிகளில் உங்கள் ராசியும் உள்ளதா என்பதையும் தெரிந்து கொண்டு எச்சரிக்கையாக இருக்கவும்.

மிதுன ராசி: ஜூலை 31 சுக்கிரன் பெயர்ச்சி பலன்கள்

மிதுன ராசியினருக்கு சிம்மத்தில் பெயரும் சுக்கிரனால் மனக் குழப்பங்கள் ஏற்படும். சுக்கிரன் பெயர்ச்சி காரணமாக குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சியும் அமைதியும் அதிகரிக்கும். ஜூலை 31 முதல் ஆகஸ்ட் 25-ம் தேதி வரை மிதுன ராசிக்காரர்கள் சற்று கவனமாக இருக்க வேண்டும். ஆரோக்கியம் பாதிக்கப்படலாம், செலவுகளைக் கட்டுப்படுத்துங்கள், செய்த முதலீடு லாபம் தராமல் போகலாம்.  

மேலும் படிக்க | சனி சந்திர கிரகணத்தால் மோசமாய் பாதிக்கப்படும் 4 ராசிகளுக்கு சனி பரிகாரங்கள்!

கடக ராசி: சுக்கிரன் பெயர்ச்சி பலன்கள்

சுக்கிரனின் சஞ்சாரம் வேலையில், தொழிலில் நிம்மதியின்மையைக் கொடுக்கும். ஆடம்பரத்திற்காக அதிகம் செலவிடுவதால் பிரச்சனை அதிகரிக்கும். கடக ராசிக்காரர்கள் சுக்கிரனின் சஞ்சாரத்தால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். திடீர் செலவுகள் அதிகரிக்கலாம். சுக்கிரனின் எதிர்மறையான தாக்கம் மனதில் கவலைகலை அதிகரிக்கும்.  

சிம்ம ராசி: ஜூலை 31 சுக்கிரன் பெயர்ச்சி பலன்கள்

ஜூலை 31 சுக்கிரன் பெயர்ச்சி காரணமாக உத்தியோகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். சிம்ம ராசியில் சுக்கிரன் சஞ்சரிக்கும் காலத்தில் திருமண வாழ்க்கை சுமூகமாக இருக்காது. வாழ்க்கைத் துணையுடன் கருத்து வேறுபாடு மற்றும் வாக்குவாதங்கள் அதிகரித்து, அது உச்சகட்டத்தை எட்டலாம், அவமதிப்பும் அவமானமும் ஏற்படவும் வாய்ப்புண்டு. ஆனால், முடிந்த அளவு வாயைக் கட்டுப்படுத்துவது நல்லது. ஆரோக்கியத்தில் கவனமாக இருங்கள். 

விருச்சிகம் ராசி: ஜூலை 31 சுக்கிரன் பெயர்ச்சி பலன்கள்

சுக்கிர பெயர்ச்சியினால் ஏற்படும் பிரச்சனைகளை விருச்சிக ராசிக்காரர்கள் அனுபவிப்பார்கள். சுக்கிரனின் சஞ்சாரத்தால் பாதகமான விளைவுகளை சந்திக்க நேரிடும் நிலையில், உடல்நிலை பலவீனமாகவே இருக்கும். மகிழ்ச்சி குறையும், வீண் செலவுகள் அதிகரிப்பதால், திட்டமிட்டபடி எந்த வேலையையும் செய்து முடிக்க முடியாது.  

மேலும் படிக்க | 17 ஆண்டுகள் வெளுத்து வாங்கும் புதன் மகா திசை காலம்! யாருக்கு நல்லது? பரிகாரங்கள்!

தனுசு ராசி: ஜூலை 31 சுக்கிரன் பெயர்ச்சி பலன்கள்

தனுசு ராசிக்காரர்களுக்கு சுக்கிரன் சஞ்சாரம் வாழ்க்கையில் பிடிப்பின்மையை உருவாக்கும். திருமண வாழ்க்கையிலும் மகிழ்ச்சி குறையும், வேலை செய்பவர்களுக்கும், உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கும் சவால்கள் நிறைந்த காலமாக இருக்கும். நண்பர்களுடன் வாக்குவாதம் ஏற்படலாம், இது உறவை மோசமாக்கும். அதேபோல முதலீடு செய்வதைத் தவிர்க்கவும், இல்லையெனில் பணத்தை இழக்க நேரிடும்.

மகர ராசி: ஜூலை 31 சுக்கிரன் பெயர்ச்சி பலன்கள்

சுக்கிரனின் ராசி மாற்றத்தின் தாக்கம் மகர ராசிக்காரர்களின் வாழ்க்கையில் தெரியும். திருமண வாழ்க்கையில் கசப்பை ஏற்படுத்தும். இந்த ராசி மாற்றம், வாழ்க்கை துணையுடனான உறவுகளை மோசமாக்கும். குடும்பத்தில் ஏற்படும் கருத்து வேறுபாடுகள் திருமண வாழ்க்கையை பாதிக்கும். 

(பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. இந்தத் தகவல் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ஜீ நியூஸ் - Zee News இதற்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | புதனுக்கு அதிதேவதையான விஷ்ணு, திருப்பதியில் கடனாளியாக அமர்ந்திருக்க காரணம் யார்?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News